Sunday, April 13, 2014

ஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,

                                    ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில்    



அமைவிடம் :

 ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .

 கொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .



சங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை
சாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு
திருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .

பழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த
திருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து
சென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய
சுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .
திருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .

திருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என
திருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .

 திருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

முடிவரை :

பழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி

Friday, April 11, 2014

சித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்

பழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்
எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என
அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .

 சரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா ?
அதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு !


தயாரிப்பு முறை :

 முதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்
சீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து
சீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா
இடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .

 வெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்
எண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .

பின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்

ஆண்கள் :புதன் ,சனி

 பெண்கள்  :செவ்வாய் ,வெள்ளி

 எண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்
, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .
இவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..

சரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் ?

 சூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .

 எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :

உள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .

யார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :

சைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த
மருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

முடிவுரை :

சித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்
அறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு
இருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்
கருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .

எண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி

Tuesday, January 28, 2014

அழகிய கொடிவேரி

                                                    kodiveri dam 

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பினும் அழகிய
அணைக்கட்டாக கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது .

 அமைப்பு :

பவானி ஆறுபவானி சாகர் அணைக்கட்டில் இருந்து வருகிற ஆற்றின் தடுப்பணையே பவானி சாகர் அணைக்கட்டாகும் .

 ஈரோட்டில் இருந்து சத்திய மங்கலம் செல்லும்
வழியில் 45 வது கி.மீ தொலைவிலும் கோபி செட்டிபாளையத்திலிருந்து 15 கி.மீ
தொலைவிலும் கொடிவேரி அமைந்துள்ளது . 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதடுப்பணையாகும் .

 அணையின் முகப்பில் நுழைவுச்சீட்டை வாங்கி பின் உள்ளே சென்றால் கிளை வாய்க்காலும் அழகிய மரங்களும் ரசித்து சென்றால் ஸ்ரீ அணை முனியப்பன் திருக்கோவிலை தரிசித்து அருகே சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோபுரம் உள்ளது அதில் மேல் ஏறி கொடிவேரி அணையின் முழு அழகும் கரும்பு தோட்டங்கள் நெல் வயல்கள் எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கிறது இயற்கை .

அங்கே அணைக்குள் உள்ளே கூட்டிச்செல்ல பரிசல்கள் தயாராக உள்ளது . சிலர்அதில் ஏறி உலா வருகிறார்கள் . அங்கே இருந்து சற்றே கீழ் இறங்கி சுற்றி
வந்தால் சிறிய பூங்காவும் குளிக்குமிடம் வருகிறது . ஆனந்த மான குளியல்
ஆர்பரிக்கும் நீர் என கண்கவர் காட்சியாக கொடிவேரி அணை அமைந்துள்ளது

பாதுகாப்பு தடுப்பு கம்பி தாண்டி செல்வது விபரீதம், சேட்டை செய்யாமல்
அமைதியாக குளித்து வருதல் நல்லது . கொடிவேரி அணைக்கட்டில் பிடிக்கிற
மீன்கள் இங்கேயே வறுத்தும் ,பொறித்தும் கொடுக்கிறார்கள் . அசைவ
பிரியர்களுக்கு கொண்டாட்டமான இடம் .

 அழகிய அணைக்கட்டும் ஆனந்தக்குளியலும் அனுபவிக்க வேண்டுமெனில் கொடிவேரி வந்தால் கிட்டும் .பவானி ஆறு பவானி கூடுதுறை வந்து காவிரியுடன் இணைத்துக் கொள்கிறது .வாய்ப்பு கிடைக்கும் போது வந்து மனதை இதமாக்கி செல்லுங்கள் .

 நன்றி

Monday, January 20, 2014

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி

         sribapanasaswamy temple history,bapanasam,

                   Ampasamuthiram thirunelveli



சுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,
ரியம்ப வாய்ந்ததுபாவநாசப்பெயரி லிங்கம்,
 வியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,
கயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்


 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .



தன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .

 அம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண  தூரத்தில் அமைந்துள்ளது .

 திருக்கோவில் அமைப்பு :


 பொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது . 


பாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=

பாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி
.பரஞ்சோதிலிங்கர் ,ஆகியனவாகும்

 ஸ்தல சிறப்புகள் : 


மனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .

ஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தலவிருட்ஷம் : 

முக்களா விருட்ஷம்

 தீர்த்தங்கள் : 


தாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்தம்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .

 ஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :


 பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .


திருக்கோவில் நடைதிறப்பு =

 காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430
முதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்
இரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .
பங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அகத்தியர்திருமணக்காட்சி பெறுதல் :


சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான
இமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.

உடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது  சிவன்

''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''


எனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .


நமச்சிவாயக்கவிராயர் : 


இவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை
பாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .

 முடிவுரை :

சிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .
பாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண
கோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை .

ஓம் சிவ சிவ ஓம்

Friday, January 3, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

பழைய வருடங்கள் அனுபவமாகவும்
 புது வருடம் கற்றுக்கொடுப்பதாகவும்
புதுப்புது உயர்வுகள் கிடைப்பனவாகவும்
புத்தாண்டு அமையட்டும் .

 இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014



 பேஸ்புக் ,
டிவிட்டர் ,
பிளாக் ,
 எஸ் எம் எஸ்

என எல்லா வகையிலும் வாழ்த்துக்கள் அனுப்பிய நன்பர்கள் எல்லோருக்கும்
சிவனருளால் எல்லா வளமும் நலமும் நீள் ஆயுள் குறையில்லா செல்வம் , என மேன்மை மிகு ஆண்டாக இருக்க வேண்டுமென

சித்தர்கள் சிவனின் ஆசிர்வாதம்

வேண்டி நிற்கிறேன் . ஓம் சிவ சிவ ஓம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...