Monday, January 20, 2014

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி

         sribapanasaswamy temple history,bapanasam,

                   Ampasamuthiram thirunelveli



சுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,
ரியம்ப வாய்ந்ததுபாவநாசப்பெயரி லிங்கம்,
 வியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,
கயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்


 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .



தன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .

 அம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண  தூரத்தில் அமைந்துள்ளது .

 திருக்கோவில் அமைப்பு :


 பொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது . 


பாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=

பாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி
.பரஞ்சோதிலிங்கர் ,ஆகியனவாகும்

 ஸ்தல சிறப்புகள் : 


மனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .

ஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தலவிருட்ஷம் : 

முக்களா விருட்ஷம்

 தீர்த்தங்கள் : 


தாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்தம்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .

 ஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :


 பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .


திருக்கோவில் நடைதிறப்பு =

 காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430
முதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்
இரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .
பங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அகத்தியர்திருமணக்காட்சி பெறுதல் :


சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான
இமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.

உடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது  சிவன்

''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''


எனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .


நமச்சிவாயக்கவிராயர் : 


இவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை
பாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .

 முடிவுரை :

சிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .
பாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண
கோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை .

ஓம் சிவ சிவ ஓம்

Friday, January 3, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

பழைய வருடங்கள் அனுபவமாகவும்
 புது வருடம் கற்றுக்கொடுப்பதாகவும்
புதுப்புது உயர்வுகள் கிடைப்பனவாகவும்
புத்தாண்டு அமையட்டும் .

 இனிய

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2014



 பேஸ்புக் ,
டிவிட்டர் ,
பிளாக் ,
 எஸ் எம் எஸ்

என எல்லா வகையிலும் வாழ்த்துக்கள் அனுப்பிய நன்பர்கள் எல்லோருக்கும்
சிவனருளால் எல்லா வளமும் நலமும் நீள் ஆயுள் குறையில்லா செல்வம் , என மேன்மை மிகு ஆண்டாக இருக்க வேண்டுமென

சித்தர்கள் சிவனின் ஆசிர்வாதம்

வேண்டி நிற்கிறேன் . ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, December 31, 2013

பெண் சித்தர் தரிசனம்

எம் நெருங்கிய நன்பர் ஒருவர் பெண் சித்தர் ஒருவர் இருக்கிறார்         அவரை வந்து தரிசித்து செல்லுங்கள் பல நன்மைகள் நடக்குமென கூற சென்ற வாரத்தில்ஈரோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் நன்பருடன் பயணத்தை துவங்கினேன் .


சுமார் 50கி.மீட்டர் தாண்டி கொடுமுடி தாண்டி சாலைப்புதூர் வழியாக
சென்றால் நொய்யல் ஆற்றுப்பாலம் கடந்து சென்றால் சரவணபவன் ஹோட்டல்வருகிறது . அந்த ஊருக்கு வேட்டை மங்கலம் என்று பெயர் .சரவண பவன் எதிர்புறம் உள்ள ரோட்டில் பயணித்தால் 1 கி.மீ தூரத்தில் இடதுபுறம்   செல்லும் மண் ரோட்டில் பயணித்தால் பெண் சித்தர் தங்கியுள்ள வீடுஅமைந்துள்ளது . இப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் வீட்டில் இந்த
பெண்சித்தர் பராமரிக்கப்பட்டு வருகிறார் .

 நாங்கள் சென்றபோது 10பேருக்கு மேலாக தரிசனம் பெற்று வந்தனர் . சித்தர் பித்தர்கள் போல காட்சி அளிப்பார்கள் ஆனால் பித்தர்கள் எல்லாம் சித்தர்கள் அல்ல. ஆனால் பெண் சித்தர் தெளிந்த முகம் . வாடா மகனே என அழைக்கின்ற பாங்கு . வயதில் முதிர்ந்தாலும் அன்பால் தடவுகின்ற கரங்கள் என பெண் சித்தர் பார்வைவித்தியாசமானது .

 முதலாக நான் சென்று வணங்கினேன் , முதுகை தொட்டு
ஆசிர்வாதம் செய்தார்கள் . தோல்பட்டை இரண்டு தட்டு தட்டி போக சொன்னார்கள். நான் வந்து உட்கார்ந்து கொண்டேன் .பின் என் நன்பர் சென்றார் ! அவருக்கு அங்கே இருந்த உணவுகளை ஊட்டி விட்டார் . 6 கவளம் ஊட்டி பின் ஆசிர்வாதம்செய்து அனுப்பினார் .

பின் குடும்ப சகிதமாக வந்து உணவு ,கேக், புகையிலை என
பக்தர்கள் வரிசையாக கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள் . அந்த பெண்
சித்தரை பார்த்தது புது வித அனுபவம் . பெண் சித்தர் அருகில் நகைகள்
அணியாமல் தான் செல்ல வேண்டும் என அறிக்கையுடன் முன்னே போர்டில்
அறிவிப்புடன் இருக்கிறது .

ஒருமணி நேரமாக தரிசனம் செய்த பின் கிளம்ப வணங்க வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட கேக் கொடுத்து வாழ்தினார்கள் . பெண்
சித்தரை தரிசிக்க செல்பவர்களை சில நேரம் சரமாரியாக கெட்டவார்த்தைகளில்திட்டுகிறார் . சில நேரத்தில் கோபப்பட்டு அடித்தும் விடுவாரம் . அப்படிஅடிபட்டு திட்டு வாங்கியவர்கள் கூட மறுபடி அம்மையை தரினசம் செய்யவருகிறார்கள் .


பழனி கணக்கன்பட்டி மூட்டை சித்தரே ஒரு பக்தரிடம் என் அக்கா கருர் பக்கமாகஇருக்கிறார் என கூறியதாக கூட தகவல் உண்டு . பலன் பெற்ற பல பக்தர்கள் வருகிறார்கள் முடிந்தால் சென்று தரிசியுங்கள் . சில பக்தர்கள் திட்டு
வாங்கிவிட்டு சித்தர்களின் பரிபாஷையை அறிய முடியவில்லையென
வியக்கிறார்கள் . சில தொலைக்காட்சிகளில் இவரைப்பற்றிய பதிவுகளை
ஒளிபரப்பி இருக்கிறது .

 நாம் அறிந்த தகவல் அவ்வளவே , அளப்பதற்கரிய
சக்தியை அளக்க அளவிட முடியாத சக்தி வேண்டும் . நம்மால் உணர முடிந்ததுகொஞ்சமே , வாய்ப்பு கிடைப்பின் சந்தியுங்கள் . உங்கள் வாழ்வில்
மாற்றமும் ஏற்றமும் நிகழும் .நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...