Wednesday, May 11, 2011

ஸ்ரீ அக்னி மாரியம்மன் திருக்கோவில்.,ஆணைக்கவுண்டனூர்,குருவரெட்டியூர் பவானி வட்டம் sri agni mariamman tirukkovil ahanai goundanur, guruvareddiyur, bhavani t.k








ஸ்ரீ அக்னிமாரியம்மன் திருக்கோவில்

பவானி வட்டம் அம்மாபேட்டை யில் இருந்து குருவரெட்டியூர்க்கு முகப்பில் ஆணைக்கவுண்டனூரில் அமைந்த ஒர் அற்புதமான ஆலயமாகும்.

புதன் கிழமை தோறும் இரவு 7 மணிக்கு அம்பிகைக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இரண்டு வருடத்திற்கு ஒர் முறை வைகாசி மாதத்தில் திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அலை மோதும். பக்தர்கள் பலரும் வேண்டுதல் நிறைவேறி ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடனை நிறைவு செய்வார்கள்.

திருவிழா அன்று இரவு பிரமாண்ட வாணவேடிக்கை நடைபெறும். திருக்கோவில் நிர்வாகத்தால் திருமண மண்டபம் குறைந்த வாடகையில் கொடுக்கப்படுவது சிறப்பு ,திருவிழாவின் முடிந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கம்பம் பிடுங்கியவுடன் ஊர் அருகில் உள்ள சந்திரா மணத்துக்கிணற்றில் கம்பம் இறக்கப்படும். இதன் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. ஆலயத்தின் அருகில் பிரமாண்ட ஆலமரம் அமைந்துள்ளது.

அமாவசை,பவுர்ணமி நாட்களில் விஷேசபூஜைகள் நடைபெறுகிறது.பார்க்கவேண்டிய ஆலயம். இறைவியிற் அற்புதங்ஙள் எண்ணிலடங்காதவை. திருக்கோவில் பிரசாதமாக வெண்திருநீரு தரப்படுகிறது . திருவிழா காலங்களில் கிராமியக்கலையான "கூத்து" இங்கு நடைபெறும்.

அவ்வப்போது இராமாயணம் ,மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வெண்திரையில் மக்களுக்கு காண்பித்து ஆன்மீக எழுச்சியை உருவாக்குகிறார்கள் . அதற்கு உதவும் ஆணைக்கவுண்டனூர் காவலர் சீனிவாசன் பாரட்டுக்குரியவர்.

உங்கள் குறைகளை அம்பிகையிடம் நம்பிக்கையுன் வைத்து வழிபடுங்கள் . நல்லது பலதும் நடக்கும்.

மேலும் திருக்கோவில் வரலாறு விரிவு செய்யப்படும்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோவில், குருவரெட்டியூர் பவானி வட்டம் Arulmigu sakthi mariamman tirukkovil, guruvareddiyur,bhavani







அருள்மிகு சக்தி மாரியம்மன் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் எனும் கிராமத்தில் அமைந்த " சக்தி " மாரியம்மனாகும்.

பழங்கால கோவில் அமைப்பாக இருந்த திருக்கோவில் பல ஆன்மீகப் பெரியோர்களின் முன்னிலையில் பல லட்சம் பொருட்செலவில் அருமையான கோவில் அமைப்பாக அழகான கோவிலாக அமைந்துள்ளது .

குருவரெட்டியூர் ஊரின் மத்தியில் சாவடி என்னும் இடத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்யன் திருக்கோவில் முன்பு இரண்டு பெரும் குதிரைகளும் முகப்பில் சிங்க வாகனமும் திருக்கோவில் உள்ளே காவல் தெய்வங்களுடன் அழகாய் அமர்ந்திருக்கும் சக்தி மாரியம்மன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு துயர்நீக்கும் அம்பிகையாக இருப்பது சிறப்பு.

வருடம் ஒரு முறை சித்திரை மாதத்தில் பூச்சாட்டுடன் துவங்கும் இத்திருக்கோவில் விஷேசத்தில் குருவரெட்டியூர் ,கரடிப்பட்டியூர்,ஒலையூர் ,ஆணைக்கவுண்டனூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

தற்போது பழங்கோவில் மாற்றப்பட்டு பளிங்கு கற்களால் அழகு செய்யப்பட்டுள்ளது. பார்க்க வேண்டிய ஆலயம். வந்து அருள் பெற்றுச்செல்லுங்கள் .

நட்பை தேடி குரு.பழ.மாதேசு

Sunday, May 8, 2011

அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் பாகம் 2

அருள்மிகு தம்பிக்கலை அய்யனின் தம்பி அருள்மிகு நல்லய்யன் சன்னதி பார்க்க வேண்டிய ஒர் சன்னதி ஆகும்.நல்லய்யனுக்கு பசுக்களை மேய்பது தொழிலாகும் .ஒரு நாள் காரம் பசுவி பாம்பு ஒன்றுக்கு பால் ஊட்டுவதை கண்டு ஆட்கொள்ளப்பட்ட இடம் .இங்கு கள்ளி மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிட்டுவது உறுதி.

அதற்கு சான்றாக இச்சன்னதியில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நிறைய சிறுவர் சிலைகளை வைத்துள்ளார்கள். தம்பிக்கலை ஐயன் திருக்கோவில் ஸ்தலமரம் ஊஞ்சை மரமாகும் இது திருக்கோவில் தென்மேற்கு திசையில் வலம்புரி கணபதியுடன் அமைந்துள்ளது. மா,அரசு, வேம்பு.நெல்லி,சம்பங்கி என பல மரங்கள் நந்தவனத்தில் பசுமை அழகாக அமைந்துள்ளது.இங்கு மாலை 5 மணி அளவில் அமிர்தசஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும் ,இதனை சுவாசிப்பவர்கள் நீடித்த ஆயுள் பெறுவது உறுதி.

தம்பிக்கலை அய்யன் கோவிலில் தரிசிக்க வேண்டிய இடங்கள்

1.இராமேஷ்வர திருத்தலக்காட்சி 2. கஜேந்திரன் அபிஷேகக்காட்சி 3.அருள்மிகு பாலசுப்ரமணியர் சன்னதி 4.அருள்மிகு சங்கரநாரயணர் சன்னதி 5. அருள்மிகு பாம்பாட்டி சித்தர் சந்நிதி 6.அருள்மிகு கருப்பணசாமி சன்னதி 7.ஸ்ரீதம்பிக்கலை ஐயன் தவக்கோல மூலவர் 8 .நாகேஷ்வரி ஆலயம் ஆகியனவாகும். ஐயன் தனது சீடன் மூலன் என்பவர்க்கு உபதேஷம் செய்த ஞான இடமே ஞான மூலவெளி என அழைக்கப்படுகிறது.

பழங்கால சிவகங்கை தீர்த்தம் கண்டறியப்பட்டு திருப்பணி அமைக்கப்பட உள்ளது. காலை, உச்சிகாலம்,சாயரட்சை பூஜைகள் நடைபெறுகின்றது. ஞாயிறு மாலை 4.30மணிக்கும் ,செவ்வாய் மாலை 3.00 மணிக்கும் ,வெள்ளி காலை 10.30மணிக்கும் ஸ்ரீ ராகு ஸ்ரீகேது தோஷ நிவர்த்தி சிறப்பு அபிஷேகம்,ஆகிய நாட்களில் களஷ்திர தோஷ நிவர்த்தி,காலசர்ப்ப தோஷம்,நாகதோஷநிவர்தி பூஜைகள் நடக்கும்.

மாதபூஜைகள் அமாவாசை,பெளர்ணமி நாட்களில் மாத உற்சவம் நடைபெறும்.பங்குனி மாதம் உத்திரப் பெருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அமாவசை சிறப்பு நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.


மேலும் ஸ்ரீதம்பிக்கலை அய்யன் விபரங்கள் வேண்டுவோர் படிக்க வேண்டிய திரட்டுகள் ;

1. தஞ்சை சரஸ்வதிமகாலில் உள்ள சித்தர் பல திரட்டு ஒலைச்சுவடி 2.தம்பிக்கலை அய்யன் காவியம் ஆசிரியர் ஸ்ரீ கருமாரிதாச சுவாமிகள் 3.திருக்கோவில் பழங்கல்வெட்டு 4.புலவர் இரா.சண்முகம் அவர்களின் திருத்தல வரலாறு. ஸ்ரீ தம்பிக்கலை ஐயன் என்னும் சூட்சம சித்தரைப்பற்றி எழுத பக்கங்கள் போதாது.

தங்கமேட்டில் தன்னிறைவாய் வீற்றிருக்கும் சக்தி அது. நமக்கு முன்னே வாழ்ந்த சிவயொக சித்தர் அவர் வாருங்கள். சின்னதொரு கிராமத்தில் தம்பிக்கலை ஐயன் உங்களுக்கு அருள் தர காத்திருக்கிறார். அன்னதானம்.,தங்கும் விடுதி, என பல சமுக பணிகளுக்கு பொருள் உதவி ஐயனின் அருள் பெற அழைக்கும் .

உங்கள் எண்ணங்களை மறக்காமல் மெயில் செய்யுங்கள்.

இதைப்பாராயணம் செய்த உங்களுக்கும் ஐயனின் திருவருள் கிட்டவேண்டுமென வேண்டி குரு.பழ.மாதேசு.

பிறிதொரு கோவில் இடுகையில் சந்திப்போம்.நன்றி

Thursday, May 5, 2011

மேட்டூர் அணை,பூங்கா mettur dam & park






மேட்டூர் அணை பூங்கா (stanely dam mettur )

மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தின் ஒர் முக்கிய சுற்றுலா தலமாகும். ஸ்டான்லி என்பவரால் கட்டப்பட்டதால் இது ஸ்டான்லி நீர்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மேட்டூர் அணைப்பூங்கா கோடை விடுமுறையில் வந்து பார்க்க வேண்டிய பகுதியாகும் .

அண்மையில் நானும் எனது நண்பர்களுடன் சென்று வந்தேன். மிகக்குறைந்த டிக்கெட்டில் தற்போது அழகிய நீர் ஊற்றுகளுடன் அழகு படுத்தி இருக்கிறார்கள். பூங்கா முகப்பின் வலது புறம் பிரசித்தி பெற்ற அணை முனியப்பன் கோவில் உள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை தமிழ் நாட்டின் முக்கிய அணைக்கட்டாகும்.

பூங்காவின் முகப்பில் நீருற்றுகள் நம்மை ஜில்லென கூல் செய்ய உள்ளே செல்ல அழகாக செதுக்கப்பட்ட புல் வெளிகள் அழகான மரங்கள் பூச்செடிகள் உள்ளன.குழந்தைகள் விளையாட சறுக்கிகள்,உஞ்சல்கள் உள்ளன.மான்கள் கம்பி கட்டி சிறு மிருககாட்சி சாலைபோல மேய்கின்றன . மேட்டூர் அணை பூங்காவில் ஒர் குடிலுக்குள் நாகன்,சாரை போன்ற பாம்புகள் நீளமாய் பார்ப்பவர்களை திகிழூட்டுகிறது. மற்றொரு குடிலில் மலைப்பாம்பு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. பாம்புகளை பார்க்க கூட்டம் அதிகமாக வருகிறது.

டேம் அருகிலோ,மேலே செல்லவோ,பூங்காவில் குடிக்கவோ பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி இல்லை.மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் அரசால் அங்கு விற்கப்படுகிறது. குடும்பத்துடன் வரும் மக்கள் மீன்கள் வாங்கி பாத்திரங்கள் வாடகைக்கு பெற்று பூங்காவின் வெளியில் சமைத்து உள்ளே கொண்டு சென்று சாப்பிடுகிறார்கள்.

மேட்டூரில் இருந்து மைசூர்,மாதேஷ்வரன் மலை செல்லும் வழியில் உள்ள மேட்டூர் அணையும் பூங்காவும் ஓர் நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். காவிரியின் உபரிநீர் மேட்டூர் 16 கண் பாலத்தின் வழியாக திறந்துவிடப்படும். அணையின் கொள்ளளவு 120 அடி நிரம்பியதும் உபரிநீர் இப்பாலம் வழியாக திறக்கப்படும்.

நீங்களும் வந்து பார்த்துவிட்டு உங்கள் மேலான கருத்துரைகளை அனுப்புங்கள் நன்றி.

அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோவில். காஞசிக்கோவில்

அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோவில்(arulmigu thampi kalai ayyan temple history) ஈரோடுமாவட்டம்(erode district) பெருந்துறை வட்டத்தில்(perundurai taluk) அமைந்துள்ள இராகு கேது பரிகார ஸ்தலமாகும். ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் (sathyamangalam) செல்லும் வழியில் 19 வது கி.மீட்டரில் ரெட்டை வாய்க்கால் உள்ளது.அங்கிருந்து 2 கி.மீட்டர் தெற்கு நோக்கி உள்ளது.சித்தோட்டில் இருந்து 10கி.மீட்டர் கவுந்தப்பாடியில்(kavundapadi) இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது . பழங்காலம் முன்பாக தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளை கற்று அவரைத்தேடி வந்த பக்தர்களுக்கு அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்து பல நன்மைகள் செய்து வந்தார்.தங்கமேடு எனும் இடத்தில் அமைந்துள்ள அன்னபூரனி உடனமர் நீலகண்டேஸ்வரர் (arul migu neelagandeswarar &annapurani) தரிசனம் செய்து அங்கேயே வாழ்ந்த சித்தராவார். ஈஸ்வர வழிபாட்டில் மூழ்கிய அவர்க்கு பல்வேறு ஞானங்கள் ஏற்பட்டது. மருத்துவம்,ஆன்மிகம்,போன்றவற்றில் தெளிவான அறிவுரைகள் ,நோய் தீர்த்தல் போன்றவற்றில் வல்லவராவார். இவர் சித்தக்கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்" வல்லவரானதால் இவர் பெயரும் தம்பிக்கலை அய்யன் என மருவி பெயர் காரணம் வந்ததாக சொல்லப்படுகிறது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இவ்விடம் Thampikkalai ayyan forest (தம்பிக்கலை அய்யன் பாரஸ்ட்) என பதிவு செய்யப்பட்டுள்ளதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு 108 சித்தர்கள் நாக வடிவுடன் இன்றும் சூட்சம தம்பிக்கலை அய்யன் உடன் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாகசர்பங்கள் வாழும் பகுதியாகவும் ,நாகதோஷம்,கால சர்ப்ப தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் தம்பிக்கலை ஐயன் சன்னதி விளங்குவது சிறப்பாகும். இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால் இடப்புறம் சென்றால் நாகேஸ்வரியின் சன்னதி உள்ளது. நாகவனமாக இவ்விடம் இருந்தபோது அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாய் அவதரித்து ஈசனை வழிபட்ட இடம். சிவலிங்கம் மீது நாகேஸ்வரி அமர்ந்து அருள் பாலிப்பது அற்புதமான ஒன்றாகும்,இங்கே பலகாலம் முன்பு பெரிய பாம்பு புற்றுகள் இருந்த தாகவும் இறைவியின் வாக்குப்படி அங்கு நாகேஸ்வரி ஆலயம் எழுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.இன்றும் இச்சன்னதி அருகில் நல்ல பாம்புகள் பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு . தம்பிக்கலை அய்யனே சூட்சம நிலையில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதாக சொல்லப்படுகிறது.நாகேஷ்வரி ஆலயம் முடித்து சென்றால் வேப்பில்லையால் அடித்து திருநீரு மந்திரித்து தீர்த்தம் வரும் பக்தர்களுக்கு தரப்படுகிறது. இங்கு தம்பிக்கலை அய்யன் சிவனுக்கு அபிஷேகம் செய்வது அழகானது. பின்னர் கள்ளி மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் சன்னதி உள்ளது.பின் கோவில் வலம்வர கருப்பணசாமி சன்னதி அதன் அருகில் அழகான மரங்களுடன் பூங்கா அமைந்துள்ளது. திருக்கோவில் உள்பிரகாரம் அழகானது. நேர்த்தியாக செதுக்கப்பட்ட சித்தர்கள் சிலைகளுடன் முற்றிலும் கருப்பு சலவைக்கற்களால் அழகு படுத்தி இருப்பது சிறப்பு. உள்மண்டபத்தில் கோபுரத்திற்கு மேல் ஒர் கோபுரம் அமைந்திருப்பது மிகச்சிறப்பான ஒன்றாகும் .திருக்கோவிலின் உள்ளே மூலவராக தம்பிக்கலை அய்யன் சிலையாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார் .கண்டிப்பாக வந்து தரிசிக்க வேண்டிய சித்தர் கோவிலாகும். தண்ணீர் வசதி,தங்குமிட வசதி, வாகனம் நிறுத்த இட வசதி போன்ற வசதிகள் செய்து நன்றாக இறை தரிசனம் செய்து வர ஏற்பாடுகள் செய்துள்ள கோவில் நிர்வாக குழுவை பாராட்டி இடுகையை முடிக்கிறேன். திருக்கோவில் முகவரி:- அருள்மிகு தம்பிக்கலை அய்யன் சுவாமி திருக்கோவில்,தங்கமேடு,தண்ணீர் பந்தல் பாளையம் அஞ்சல்,காஞ்சிக்கோவில் -638116 பெருந்துறை வட்டம் ,ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு .தொலைபேசி :04294-235053, 235453 நேரம் கிடைக்கும் போது விரிவாக்கம் செய்யப்படும் .நன்றி

Wednesday, May 4, 2011

அருள்மிகு சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் ஒலகடம்.பவானி வட்டம் ஈரோடு மாவட்டம்




அருள்மிகு சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில்

(Arulmigu sokkanatsi amman thirukkovil ,olagadam


அந்தியூரில் இருந்து அம்மாபேட்டை ( Anthiyur to ammapet ) செல்லும் வழியில் நால்ரோட்டில் இருந்து 2 வது கி.மீ ல் உள்ள ஒலகடம் (olagadam) என்னும் கிராமத்தில் உள்ளது .

மே முதல் வாரத்தில் நடைபெறும் சொக்கநாச்சி அம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும். 60 அடி குண்டம் வளர்த்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்குவது மெய் சிலிர்க்க வைக்கிறது .30 அடி உயர முனியப்பர் சிலை பிரமிப்பாக இருக்கிறது.

மூலவராக சொக்க நாச்சி அம்மன் வரும் பக்தர்கள் குறை தீர்க்கும் அம்பிகையாக இருப்பது சிறப்பு. பழங்கால கோவில் அமைப்புடன் கூடிய கோவிலாகும். இக்கோவில் திருவிழாவிற்கு அருகிலுள்ள உலகேஷ்வரரும் அம்பாள் ,பெருமாள் கோவில் உற்சவமூர்த்திகள் சிலைகளுடன் வந்து சொக்க நாச்சி அம்மனுடன் அருள்பாலிக்கின்றனர்.

நீங்களும் வந்து தரிசித்து எழுதுங்கள் .நன்றி.

Monday, May 2, 2011

அருள்மிகு செம்முனிஸ்வரர்&பச்சியம்மன் திருக்கோவில்,பூசாரியூர்,பூனாச்சி பவானி வட்டம்.Arul migu semmunisamy tirukkovil. poosariyur poonatchi, bhavani taluk






அருள்மிகு செம்முனிஸ்வரர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து 10வது கி.மீட்டரிலும், வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பூசாரியூரில் இருந்து 2 வது கி.மீட்டரில் உள்ளது


,திருக்கோவில் ஏப்ரல் மாதத்தில் 15 நாள் பூச்சாட்டுதல் தொடங்கி ஏப்ரல் கடைசி வாரத்தில் பிரமாண்டமான விசேஷமாக கிராமத்து கலை அம்சத்துடன் நடைபெறுகிறது.அப்போது 40அடி உயரமுள்ள தேரில் செம்முனிசாமி,பச்சியம்மாள்,மன்னாதன் ஆகிய உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூசாரியூரில் இருந்து செம்முனிஷ்வரர் கோவில் வரை 2 கி.மீட்டர் தூரம் பக்தர்கள் தேரை சுமந்து செல்வது பாரம்பரியமான ஒன்றாகும்.

செம்முனிசாமி கோவில் உதயமாகி 891 வருடங்கள் ஆகின்றதாம்.இதற்கான சான்று பனை ஓலைச்சுவடி யில் உள்ளதாம்.இந்த ஓலைச்சுவடி தற்போது சேலத்தில் ஆராய்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.பச்சியம்மனும் செம்முனிசாமியும் ஒன்றே எனக்கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் தேனூர் பச்சியம்மன், திட்டக்குடி, பொன்னாடி, ஆகிய பச்சியம்மன் கோவிலுக்கு இக்கோவில்காரர்கள் செல்வதுண்டாம்.பச்சியம் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பர்.

திருக்கோவில் வனத்தில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் செம்முனிஷ்வரர் பூஜை பொருட்கள் கொண்டு வரப்படும்.செம்முனிசாமி கோவில் திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் "காவுகுட்டி" எனப்படும் இளம் ஆட்டுக்குட்டிகள் வெட்டி அதன் ரத்தத்தை 10 பூசாரிகள் குடித்தவாறு அருள் வந்து ஆடுவது பிரமிப்பான, திகிலான விஷயமாகும்.

தற்போது நடந்த கோவில் விசேஷத்தில் 4000 கிடாய்கள் என சொல்லப்படும் இளம் ஆட்டுக்குட்டிகளை வெட்டி ரத்தம் குடித்தவாறு வந்த பூசாரிகள் பார்த்து நமக்கே சற்று கலக்கமாகத்தானிருந்தது செம்முனிசாமியை வழிபடும் பக்தர்களுக்கு குழந்தை வரம், மனநோய்,திருமணம்,நாள்பட்ட நோய் விடுதலை பெறுவது சிறப்பாகும்.இத்திருக்கோவில் வெட்டப்படும் ஆடுகளின் ரத்தத்தை பக்தர்கள் நம்பிக்கையோடு குடிப்பது,பூசிக்கொள்வது இட்டுக்கொள்வதே இதற்கு சான்றாகும். செம்முனிஷ்வரர் கோவில் அருள்மிகு அகோர வீரபத்மர் சன்னதியும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக செம்முனிச்சாமி கோவில் திருவிழாவின் போது "செங்காற்றும் செம்மழையும்" வடக்கில் இருந்து திரண்டு வந்து மாலை வேளையில் பலத்த மழை கொட்டும். பல முறை என் அனுபவத்தில் செங்காற்று செம்மழையை கண்ட அனுபவம் எனக்கு உண்டு. திருக்கோவில் வளாகத்தில் பிரமாண்ட முனியப்பர் சன்னதிகள் உண்டு.

,இங்கு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்,ஸ்ரீ கார்த்தி அம்மன்,ஸ்ரீ இடக்குமரர்,ஸ்ரீமுக்காட்டு முனி,ஸ்ரீ கஞ்சமலை சித்தேஷ்வரர் ஸ்ரீ பாலமலை சித்தேஸ்வரர் ஸ்ரீ நஞ்சுண்டேஷ்வரர், குருபகவான், ஸ்ரீ ரங்க நாதர் ,முடிமாலை அழகி, சாந்தேனுகன்னி,பிரம்மா,பச்சியம்மன் ( மூலவர் ),வேங்கைமலை அம்மன்,பூகன்னி, செங்கன்னி, செங்குமரர்,மன்னாதசாமி, பூங்குமரர், முருகன்,கரிய பெருமாள் ஆகிய சிலைகள் திருக்கோவிலின் உள்ளே அழகு செய்கிறது.

பழங்கால மரமாக சுமார் 500 வருட மாகாளிய மரம் ஒன்று கோவில் முகப்பில் உள்ளது.திருக்கோவில் ஸ்தலமரம் புளியமரம் 800 வருடமாக இருக்கிறதாம்.இந்த மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய் காய்க்காது.

பழங்காலம் முன்பாக கோவில் ஒட்டிய பள்ளம் (ஓடையில் )பகுதியில் மீன் பிடித்த நான்கு பேர் மீன் பிடித்த பின் சமைக்க புளி வேண்டுமென ஸ்தல புளிய மரத்தில் ஏறி புளி பறிக்க திடிரென நான்கு பேருக்கும் கண் தெரியாமல் போனதாகவும் பின் கோவில் பூசாரி அவர்களிடம் விளக்கம் கேட்க செம்முனிஷ்வரரை வேண்டச் சொன்னார். அவர்களும் செம்முனிசாமி இனி செம்முனிசாமி கோவில் தேர் இழுக்க வருகிறோம்.

இறைவா! எங்களுக்கு கண் பார்வை கொடு என வேண்ட பூசாரி திருநீரு தர வேண்டியவர்களுக்கு கண்பார்வை வந்ததாகவும்,பின் பூசாரி இனி இப்புளிய மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய் காய்க்காது என அருள் வந்து சொன்னதாகவும் ,அதைப்போலவே தற்போது புளிய மரம் பூ பூப்பதோடு நின்று விடுகிறது. கண் தெரியாமல் வேண்டியவர்களே அவர்கள் பரம்பரையை சேர்ந்தவர்களே இன்றும் வேண்டியவாறு தேர் இழுப்பதாக செவிவழிச் செய்திகள் சொல்கிறது.

பிரதி வாரம் வெள்ளிக்கிழமை 03.00 மணிக்கு செம்முனிச்சாமி பூஜை நடைபெறுகிறது.அமாவசை புஜையும் சிறப்பாக நடைபெறும்.

செம்முனிச்சாமி கோவிலுக்கு சென்னம்பட்டி,ரெட்டிபாளையம்,மூங்கில்பாளையம்,முரளி,ஜரத்தல்.சனிச்சந்தை,கொமராயனூர்,குரும்பபாளையம்,தொப்பபாளையம், முளியனூர்,ஊஞ்சப்பாளையம் , குருவரெட்டியூர்., பூனாச்சி,ஆலாம்பாளையம் அந்தியூர் பகுதி மக்கள் கலந்த கொண்டு சிறப்பிப்பார்கள்.

நீங்களும் வந்து தரிசித்து அருள் பெறுங்கள்.நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...