Sunday, May 8, 2011

அருள்மிகு தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் பாகம் 2

அருள்மிகு தம்பிக்கலை அய்யனின் தம்பி அருள்மிகு நல்லய்யன் சன்னதி பார்க்க வேண்டிய ஒர் சன்னதி ஆகும்.நல்லய்யனுக்கு பசுக்களை மேய்பது தொழிலாகும் .ஒரு நாள் காரம் பசுவி பாம்பு ஒன்றுக்கு பால் ஊட்டுவதை கண்டு ஆட்கொள்ளப்பட்ட இடம் .இங்கு கள்ளி மரத்தில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டினால் குழந்தை வரம் கிட்டுவது உறுதி.

அதற்கு சான்றாக இச்சன்னதியில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் நிறைய சிறுவர் சிலைகளை வைத்துள்ளார்கள். தம்பிக்கலை ஐயன் திருக்கோவில் ஸ்தலமரம் ஊஞ்சை மரமாகும் இது திருக்கோவில் தென்மேற்கு திசையில் வலம்புரி கணபதியுடன் அமைந்துள்ளது. மா,அரசு, வேம்பு.நெல்லி,சம்பங்கி என பல மரங்கள் நந்தவனத்தில் பசுமை அழகாக அமைந்துள்ளது.இங்கு மாலை 5 மணி அளவில் அமிர்தசஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும் ,இதனை சுவாசிப்பவர்கள் நீடித்த ஆயுள் பெறுவது உறுதி.

தம்பிக்கலை அய்யன் கோவிலில் தரிசிக்க வேண்டிய இடங்கள்

1.இராமேஷ்வர திருத்தலக்காட்சி 2. கஜேந்திரன் அபிஷேகக்காட்சி 3.அருள்மிகு பாலசுப்ரமணியர் சன்னதி 4.அருள்மிகு சங்கரநாரயணர் சன்னதி 5. அருள்மிகு பாம்பாட்டி சித்தர் சந்நிதி 6.அருள்மிகு கருப்பணசாமி சன்னதி 7.ஸ்ரீதம்பிக்கலை ஐயன் தவக்கோல மூலவர் 8 .நாகேஷ்வரி ஆலயம் ஆகியனவாகும். ஐயன் தனது சீடன் மூலன் என்பவர்க்கு உபதேஷம் செய்த ஞான இடமே ஞான மூலவெளி என அழைக்கப்படுகிறது.

பழங்கால சிவகங்கை தீர்த்தம் கண்டறியப்பட்டு திருப்பணி அமைக்கப்பட உள்ளது. காலை, உச்சிகாலம்,சாயரட்சை பூஜைகள் நடைபெறுகின்றது. ஞாயிறு மாலை 4.30மணிக்கும் ,செவ்வாய் மாலை 3.00 மணிக்கும் ,வெள்ளி காலை 10.30மணிக்கும் ஸ்ரீ ராகு ஸ்ரீகேது தோஷ நிவர்த்தி சிறப்பு அபிஷேகம்,ஆகிய நாட்களில் களஷ்திர தோஷ நிவர்த்தி,காலசர்ப்ப தோஷம்,நாகதோஷநிவர்தி பூஜைகள் நடக்கும்.

மாதபூஜைகள் அமாவாசை,பெளர்ணமி நாட்களில் மாத உற்சவம் நடைபெறும்.பங்குனி மாதம் உத்திரப் பெருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அமாவசை சிறப்பு நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.


மேலும் ஸ்ரீதம்பிக்கலை அய்யன் விபரங்கள் வேண்டுவோர் படிக்க வேண்டிய திரட்டுகள் ;

1. தஞ்சை சரஸ்வதிமகாலில் உள்ள சித்தர் பல திரட்டு ஒலைச்சுவடி 2.தம்பிக்கலை அய்யன் காவியம் ஆசிரியர் ஸ்ரீ கருமாரிதாச சுவாமிகள் 3.திருக்கோவில் பழங்கல்வெட்டு 4.புலவர் இரா.சண்முகம் அவர்களின் திருத்தல வரலாறு. ஸ்ரீ தம்பிக்கலை ஐயன் என்னும் சூட்சம சித்தரைப்பற்றி எழுத பக்கங்கள் போதாது.

தங்கமேட்டில் தன்னிறைவாய் வீற்றிருக்கும் சக்தி அது. நமக்கு முன்னே வாழ்ந்த சிவயொக சித்தர் அவர் வாருங்கள். சின்னதொரு கிராமத்தில் தம்பிக்கலை ஐயன் உங்களுக்கு அருள் தர காத்திருக்கிறார். அன்னதானம்.,தங்கும் விடுதி, என பல சமுக பணிகளுக்கு பொருள் உதவி ஐயனின் அருள் பெற அழைக்கும் .

உங்கள் எண்ணங்களை மறக்காமல் மெயில் செய்யுங்கள்.

இதைப்பாராயணம் செய்த உங்களுக்கும் ஐயனின் திருவருள் கிட்டவேண்டுமென வேண்டி குரு.பழ.மாதேசு.

பிறிதொரு கோவில் இடுகையில் சந்திப்போம்.நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...