Monday, May 2, 2011

அருள்மிகு செம்முனிஸ்வரர்&பச்சியம்மன் திருக்கோவில்,பூசாரியூர்,பூனாச்சி பவானி வட்டம்.Arul migu semmunisamy tirukkovil. poosariyur poonatchi, bhavani taluk






அருள்மிகு செம்முனிஸ்வரர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து 10வது கி.மீட்டரிலும், வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பூசாரியூரில் இருந்து 2 வது கி.மீட்டரில் உள்ளது


,திருக்கோவில் ஏப்ரல் மாதத்தில் 15 நாள் பூச்சாட்டுதல் தொடங்கி ஏப்ரல் கடைசி வாரத்தில் பிரமாண்டமான விசேஷமாக கிராமத்து கலை அம்சத்துடன் நடைபெறுகிறது.அப்போது 40அடி உயரமுள்ள தேரில் செம்முனிசாமி,பச்சியம்மாள்,மன்னாதன் ஆகிய உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூசாரியூரில் இருந்து செம்முனிஷ்வரர் கோவில் வரை 2 கி.மீட்டர் தூரம் பக்தர்கள் தேரை சுமந்து செல்வது பாரம்பரியமான ஒன்றாகும்.

செம்முனிசாமி கோவில் உதயமாகி 891 வருடங்கள் ஆகின்றதாம்.இதற்கான சான்று பனை ஓலைச்சுவடி யில் உள்ளதாம்.இந்த ஓலைச்சுவடி தற்போது சேலத்தில் ஆராய்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.பச்சியம்மனும் செம்முனிசாமியும் ஒன்றே எனக்கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் தேனூர் பச்சியம்மன், திட்டக்குடி, பொன்னாடி, ஆகிய பச்சியம்மன் கோவிலுக்கு இக்கோவில்காரர்கள் செல்வதுண்டாம்.பச்சியம் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பர்.

திருக்கோவில் வனத்தில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் செம்முனிஷ்வரர் பூஜை பொருட்கள் கொண்டு வரப்படும்.செம்முனிசாமி கோவில் திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் "காவுகுட்டி" எனப்படும் இளம் ஆட்டுக்குட்டிகள் வெட்டி அதன் ரத்தத்தை 10 பூசாரிகள் குடித்தவாறு அருள் வந்து ஆடுவது பிரமிப்பான, திகிலான விஷயமாகும்.

தற்போது நடந்த கோவில் விசேஷத்தில் 4000 கிடாய்கள் என சொல்லப்படும் இளம் ஆட்டுக்குட்டிகளை வெட்டி ரத்தம் குடித்தவாறு வந்த பூசாரிகள் பார்த்து நமக்கே சற்று கலக்கமாகத்தானிருந்தது செம்முனிசாமியை வழிபடும் பக்தர்களுக்கு குழந்தை வரம், மனநோய்,திருமணம்,நாள்பட்ட நோய் விடுதலை பெறுவது சிறப்பாகும்.இத்திருக்கோவில் வெட்டப்படும் ஆடுகளின் ரத்தத்தை பக்தர்கள் நம்பிக்கையோடு குடிப்பது,பூசிக்கொள்வது இட்டுக்கொள்வதே இதற்கு சான்றாகும். செம்முனிஷ்வரர் கோவில் அருள்மிகு அகோர வீரபத்மர் சன்னதியும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக செம்முனிச்சாமி கோவில் திருவிழாவின் போது "செங்காற்றும் செம்மழையும்" வடக்கில் இருந்து திரண்டு வந்து மாலை வேளையில் பலத்த மழை கொட்டும். பல முறை என் அனுபவத்தில் செங்காற்று செம்மழையை கண்ட அனுபவம் எனக்கு உண்டு. திருக்கோவில் வளாகத்தில் பிரமாண்ட முனியப்பர் சன்னதிகள் உண்டு.

,இங்கு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்,ஸ்ரீ கார்த்தி அம்மன்,ஸ்ரீ இடக்குமரர்,ஸ்ரீமுக்காட்டு முனி,ஸ்ரீ கஞ்சமலை சித்தேஷ்வரர் ஸ்ரீ பாலமலை சித்தேஸ்வரர் ஸ்ரீ நஞ்சுண்டேஷ்வரர், குருபகவான், ஸ்ரீ ரங்க நாதர் ,முடிமாலை அழகி, சாந்தேனுகன்னி,பிரம்மா,பச்சியம்மன் ( மூலவர் ),வேங்கைமலை அம்மன்,பூகன்னி, செங்கன்னி, செங்குமரர்,மன்னாதசாமி, பூங்குமரர், முருகன்,கரிய பெருமாள் ஆகிய சிலைகள் திருக்கோவிலின் உள்ளே அழகு செய்கிறது.

பழங்கால மரமாக சுமார் 500 வருட மாகாளிய மரம் ஒன்று கோவில் முகப்பில் உள்ளது.திருக்கோவில் ஸ்தலமரம் புளியமரம் 800 வருடமாக இருக்கிறதாம்.இந்த மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய் காய்க்காது.

பழங்காலம் முன்பாக கோவில் ஒட்டிய பள்ளம் (ஓடையில் )பகுதியில் மீன் பிடித்த நான்கு பேர் மீன் பிடித்த பின் சமைக்க புளி வேண்டுமென ஸ்தல புளிய மரத்தில் ஏறி புளி பறிக்க திடிரென நான்கு பேருக்கும் கண் தெரியாமல் போனதாகவும் பின் கோவில் பூசாரி அவர்களிடம் விளக்கம் கேட்க செம்முனிஷ்வரரை வேண்டச் சொன்னார். அவர்களும் செம்முனிசாமி இனி செம்முனிசாமி கோவில் தேர் இழுக்க வருகிறோம்.

இறைவா! எங்களுக்கு கண் பார்வை கொடு என வேண்ட பூசாரி திருநீரு தர வேண்டியவர்களுக்கு கண்பார்வை வந்ததாகவும்,பின் பூசாரி இனி இப்புளிய மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய் காய்க்காது என அருள் வந்து சொன்னதாகவும் ,அதைப்போலவே தற்போது புளிய மரம் பூ பூப்பதோடு நின்று விடுகிறது. கண் தெரியாமல் வேண்டியவர்களே அவர்கள் பரம்பரையை சேர்ந்தவர்களே இன்றும் வேண்டியவாறு தேர் இழுப்பதாக செவிவழிச் செய்திகள் சொல்கிறது.

பிரதி வாரம் வெள்ளிக்கிழமை 03.00 மணிக்கு செம்முனிச்சாமி பூஜை நடைபெறுகிறது.அமாவசை புஜையும் சிறப்பாக நடைபெறும்.

செம்முனிச்சாமி கோவிலுக்கு சென்னம்பட்டி,ரெட்டிபாளையம்,மூங்கில்பாளையம்,முரளி,ஜரத்தல்.சனிச்சந்தை,கொமராயனூர்,குரும்பபாளையம்,தொப்பபாளையம், முளியனூர்,ஊஞ்சப்பாளையம் , குருவரெட்டியூர்., பூனாச்சி,ஆலாம்பாளையம் அந்தியூர் பகுதி மக்கள் கலந்த கொண்டு சிறப்பிப்பார்கள்.

நீங்களும் வந்து தரிசித்து அருள் பெறுங்கள்.நன்றி

1 comment:

Anonymous said...

பல தகவல்களுக்கு நன்றி.
இந்த கோவில் அந்தியூர் வட்டம் பட்லூர் கிராமத்தில் உள்ளது.பட்லூருக்கும் இந்த கோவிலுக்கும் நிறைய சம்பந்தங்கள் உள்ளன. செம்முனிசாமி ஆதியில் பட்லூரில் இருந்ததாகவும் பிறகு சில காரணங்களால் தற்போது இருக்கும் வனம் சென்று அங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்..

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...