Monday, April 25, 2011

அருள்மிகு வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ஆலயம், கூடுதுறை,பவானி



அருள்மிகு வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ஆலயம்,கூடுதுறை,பவானி


(Arulmigu sangameswarar&veathanayagi amman temple history,kududurai, bhavani ,erode d.t )

மூலவர் : சங்கமேஸ்வரர்

அம்பாள் : வேதநாயகி அம்மன்.

கொங்கு நாட்டின் வடக்கே இருந்து வரும் காவிரி நதிக்கரையின் அழகிய அமைப்புடன் மேற்கு இருந்து சீறிப்பாயும் பவானி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் ஈஸ்வரர் தோன்றியதால் சங்கம ஈஷ்வரர் மருவி "சங்கமேஸ்வரர் " ஆக அருள் புரியும் கிழக்கு நோக்கிய சுயம்பு ஈஸ்வர சன்னதி ஆகும்.

காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுவதால் "கூடுதுறை" என அழைக்கப்படுகிறது. இவ்விரு ஆறும் இணையும் இடத்தில் புதியதோர் நதியாக "அமிர்தநதி" எனும் புதியதோர் நதி உருவாகுவகுவதாக முக்கூடல் சங்கமமாக விளங்கி வருவது சிறப்பாகும்.

பவானி ஆறு பவானி கூடுதுறையில் கலந்தபின் அது காவிரி ஆறாக மாறிப் போகிறது. இங்கு தான் பழங்கால சிறப்பு மிக்க பல புலவர்களால் பாடப்பெற்ற சிவத்தலமாகும்.

பவானி புது பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவிலும் ,பவானி பழைய பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு அருகில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

திருக்கோவிலின் முகப்பிலேயே நந்தீஸ்வரர் நம்மை வரவேற்க அவரை தரிசனம் செய்து இராஜ கோபுரம் முகப்பில் இருக்கும் விநாயகர், அனுமன் சன்னதிகளை வணங்கி இராஜகோபுரத்தை கடந்தால் இடப்பக்கம் திருக்கோவில் அலுவலகமும் வலது புறம் அருள்மிகு வேணுகோபாலர் காக்கும் கடவுள் வெங்கடாசலாபதி சன்னதியின் கொடிமரம் ஆகியவற்றைக் கடந்தால் லட்சுமி நரசிம்மர்,மகாலட்சுமி சன்னதிகள் மற்றும் திருக்கோவில் அலுவலர்களால் அழகாக பராமரிக்கும் புல்வெளிகள் ,பூச்செடிகள் அழகு.

அதைத்தாண்டிச்சென்றால் சித்தி விநாயகர் சன்னதி தரிசித்து சென்றால் வேதநாயகி அம்மன் சன்னதி முன் கொடிமரம் தரிசித்து மூலவரை தரிசிக்க சற்று நடந்தால் சங்கமேஷ்வரர் ஆலய முகப்பில் கொடிமரம் வணங்கி விநாயகர்

,முருகரை வணங்கி உட்பிரகாரத்திள் நந்தீஷ்வரர் அவர்க்கு பின் சூரிய ,சந்திர சிலைகள் இடது புறம் நால்வர்கள் சிலை வலதுபுறம் நடராஜர் சன்னதி,முன்பகுதியில் காக்கும் கடவுள்களை வணங்கி ஆலய உட்பகுதிக்கு சென்றால் அருள்மிகு சங்கமேஸ்வரரின் சன்னதியை தரிசனம் செய்த அரும் பாக்கியம் கிட்டுகிறது .

நல்ல வெண் திருநீரு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவர் தரிசித்து பின் இடப்புறமாக வெளியே வந்தால் 68 நாயன்மார்களையும் ,தட்சிணாமூர்த்தியை தரிசித்து மூலவர் பின்புறம் விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகர் தரிசனம் முடித்து, மூலவரின் இடப்புறம் சண்டிகேஷ்வரர் அருள்பெற்று இடப்புறம் வெளியே வந்தால் நவகிரக சன்னதியும் காலபைரவர் சன்னதியும் அருகருகே அமைந்துள்ளது.

வெளிப்பிரகாரம் சுற்றினால் திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் பழங்கால "இலந்தமரம்" அதன் அடியில் ஆனைமுகந்தோன் சன்னதியை காணலாம். சனிஷ்வரர்க்கும், முருகருக்கும் தனி சன்னதியகளில் பூஜை நடைபெறுகிறது.அதன் பின் வேதநாயகி அம்மனை தரிசிக்கலாம்.

அருள்மிகுவேதநாயகி அம்மன் சிறப்புகளை தனி இடுகையில் காணலாம்.வேதநாயகி அம்மன் கோவில் முகப்பில் தரமான ஆன்மீகப்புத்தககடை வைத்திருக்கிறார்கள் .அருகே உடனடி போட்டோ எடுத்து தரும் போட்டோகிராபரும் உள்ளார்.

திருக்கோவில் கொடிமரம் முன்பாக வெளியே சென்றால் காவிரியின் அழகை ரசிக்கலாம்.சற்றுதூரம் நடந்து சென்றால் முக்கூடல் சங்கமிங்கும் பவானி நதி,காவிரிநதி சங்கமிங்கும் இடத்தில் கம்பி வலை அமைத்தும் தடுப்பு சுவர் அமைத்தும் ஆண்கள்,பெண்கள் குளிக்க இட வசதி செய்திருக்கிறாக்கள். தடுப்புச்சுவர் தாண்டிசென்று குளிப்பது ஆபத்தானதாகும்,அவ்வாறு பலர் தடுப்புச்சுவர் தாண்டி ஆர்வத்தில் சுழலில் சிக்கி இறந்ததும் உண்டு .

தலைசிறந்த பரிகார ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.இங்கு காலசர்ப்ப தோஷம்,பித்திருக்கடன் போன்ற பல தோஷங்கள் போக்க பரிகாரம் செய்ய திருக்கோவில் நிர்வாகத்தால் அனுமதி பெற்றவரா.? என அறிந்து செய்வது நலம்.

நீத்தார் கடன்,செலுத்த ஆடி அமாவசைகளில் கூட்டம் அலைமோதும். குளத்தின் அருகே உள்ள பழங்கால விநாயகரும் அரசமரமும் அழகானது.

வாருங்கள் வந்து அருள்மிகு சங்கமேஸ்வரர்,வேதநாயகி அம்மன் அருள் பெற்று எல்லா வளங்களும் பெற வாழ்த்தும்

பழ.மாதேஸ்வரன் (pala.matheswaran)

Sunday, April 24, 2011

அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில் , குருவரெட்டியூர்-638504 , Arulmigu kakkuvaai mariamman temple guruvareddiyur




அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில்

(Arul migu kakkuvaai mariamman temple)

(GURUVAREDDIYUR)

ஈரோடு(Erode) மாவட்டம் பவானி (Bhavani)வட்டம் அம்மாபேட்டையில் (Ammapet)இருந்து 10 வது கி.மீட்டரில் குருவரெட்டியூர் (Guruvareddiyur) அரசமரத்து வீதியில் அமர்ந்து பக்தர்கள் குறை தீர்க்கும் தாயாக ,அம்மாவாக நோய்பிணி தீர்க்கும் அம்பிகையாக வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னையாக திகழ்வது சிறப்பு.

திருக்கோவில் முன்பாக ஏறக்குறைய 400 வருட பழமை வாய்ந்த பிரமாண்ட அரசமரமும் செல்வ விநாயகர் கோவிலும் அமர்திருப்பது மற்றோர் சிறப்பு . செல்வ விநாயகர் திருக்கோவில் முன்பாக பார்வதி உடனமர் ஈஸ்வரன்கோவில் அமைந்திருப்பதும் இத்திருக்கோவில் அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

திருக்கோவில் வடகிழக்கில் பாலமலை (2 கி.மீ )அமைந்திருக்கிறது.


கக்குவாய் மாரியம்மன் 50 வருடங்களுக்கு முன் கற்சிலையாக சிறிய இடத்தில் வழிபட்டு வர அச்சிலையை சிலர் அப்புறப்படுத்த முயற்சித்து அவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாகவும்,

பின் பிடுங்கி போடப்பட்ட சிலையை கண்டெடுக்கப்பட்டு பின் வைத்து பூஜை செய்த பின் அம்மன் சிலையை பிடுங்கி எறிந்தவர்கள் மன்னிப்பு கேட்டு அவர்கள் உடல் சரியானதாகவும் ,பின் ஒரு முறை கோவில் உண்டி திருட்டு போனது.


பின் 2 நாள் கழித்து இரவில் திருடனை ஏதோ ஒரு சக்தி துரத்த அவன் ஓடி வந்து கோவில் கிணற்றில் விழுந்து கத்தும்போது ஊர் மக்கள் அந்த நடுநிசியில் யார் என்று கேட்க

"நான் தான் கோவில் உண்டியல் திருடினேன் "

என திருடன் ஓப்புக்கொண்டதாக செவிவழி ஆதாரச் செய்திகள் கூறுகின்றன,பல பேர் வாழ்கை உயர அம்பிகை உதவியது ஏராளம்.

கக்குவாய் மாரியம்மன் உண்மையாக வேண்டுவோர்க்கு செய்த அற்புதங்கள் பல.நான் சிறுவனாக இருந்த காலத்தில் விளையாடிய கோவில் அது. தற்போது நல்ல பணியில் இருப்பதற்க்கும் கக்குவாய் மாரியம்மன் அருளாசியால்தான். இவ்வாறு பல அற்புதங்கள் செய்து வரும் கக்குவாய் மாரீயம்மனுக்கு பழைய ஆலயத்தை இடித்து விட்டு புது ஆலயம் அமைக்க ஆலோசித்து

இப்பகுதி ஆன்மீக அன்பரும் ஜோதிடருமான திரு. சண்முகம் (9965286666) அவர்களின் முயற்சியால் அவரின் நன்பர்கள் தம்புகடை முத்து (9976466007),சிவா சினி மூவீஸ் அர்ஜுனன் (9788294760), ஆகியோர்களுடன் 32 லட்சம் மதிப்பீட்டில் கக்குவாய் மாரீயம்மன் திருக்கோவில் புதிய கோவிலாக பிரமாண்ட வேலைப்பாடுகளுடன் தயாராகி வருகிறது.

வெளியூர் வெளிநாட்டில் வசிக்கும் குருவரெட்டியூர் பகுதிமக்கள் தாங்களால் இயன்ற நிதி பொருள் உதவியை திருக்கோவில் வளாகத்தில் கொண்டு வந்து தருமாறு பணிவுடன் வேண்டப்படுகிறது. ஸ்ரீ கர வருடம் ஆனி மாதம் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறப்போகிறது.

தவறாமல் கலந்து கொண்டு கக்குவாய் மாரியம்மன் அருள் பெற அழைக்கும் அன்பன் குரு.பழ.மாதேசு (guru.pala.mathesu)

Monday, April 18, 2011

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ,சோமேஷ்வரர் திருக்கோவில்,நங்கவள்ளி,மேட்டூர் வட்டம் ,சேலம் மாவட்டம்






அருள்மிகு லட்சுமி நரசிம்மர் ஆலயம்


Arulmigu laxmi narasimar thirukovil ,someaswara swamy temple

,சேலம்( salem)மாவட்டம் மேட்டூர் வட்டம்( mettur taluk) சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் வனவாசி(vanavsi) அருகில் நங்கவள்ளி(nangavlli) என்னும் ஊரில் அமைந்த ஓர் பழங்கால திருக்கோவிலாகும்.



இங்கு லட்சுமி நரசிம்மர் மூலவராக வேண்டும் வரம் தரும் வைணவத்திருத்தலமாகும்.

திருக்கோவில் இராஜகோபுரத்தின் மரக்கதவுகளின் சிற்ப வேலைப்பாடே அழகாக செதுக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.

அதைத்தாண்டி உள்ளே வந்தால் அனுமன் நம்மை வரவேற்க இடதபுறம் முழுமுதற்கடவுளான வன்னி மர வினாயரரும் ,அரசமர விநாயரரும் ஒன்றாய் அமர்ந்து நமக்கு அருள்புரிகின்றனர்.


பின் கோவிலுக்கு முன் கொடிமரம் வணங்கி அருகே துளசிமாடம் மற்றும் அஷ்டலட்சுமி மாடத்தில் 8 லட்சுமிகள் அருள்தர வணங்கி விட்டு உள் பிரகாரம் சென்றால் விஸ்வக்கேனர் சன்னதியை தரிசனம் செய்து அஹாபில லட்சுமி நரசிம்மர் தேவஸ்தானம் ,கருடாள்வார் தரிசித்து உள்ளே


மூலவரான லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் திருமணதடை, நல்வாழ்வு, நன்மக்கள் பேறு கிடைக்கும் என்பது திண்ணம்.

பிரசாதமாக துளசி,குங்குமம், சந்தனம், கற்கண்டு வழங்குகிறார்கள்.கோவில் உள் பிரகாரதில் சோமேஸ்வர் சன்னதி அமைந்து இருப்பது சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.

கோவில் எல்லா விஷேச நாட்களிலும் திறந்திருக்கும்.காலை06.00 முதல் 1200 மணிவரையும் மாலை 4.00 முதல் 08.00வரை .



பழங்கால இக்கோவில் பற்றிய விபரங்களின் தேடல் தொடரும். தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள். நன்றி

Sunday, April 3, 2011

அருள்மிகு சித்தேஸ்வரர் ,சித்தேஸ்வரி ஆலயம், நெரிஞ்சிப்பேட்டை,Arulmigu siddeswaran and siddeswari temple. Nerinji pettai,erode district

அருள்மிகு சித்தேஸ்வரர் ஆலயம் செல்லும் வழி:

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் நெரிஞ்சிப்பேட்டையில் இருந்து மலையில் உள்ள சித்தேஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில் சித்தைய நகரில் உள்ளது. மேட்டூரில்(mettur) இருந்து பவானி செல்லும் வழியில் 16 கி.மீட்டரில் நெரிஞ்சிப்பேட்டையில் இறங்கி நடந்து 1 கி.மீட்டர் மலை அடிவாரம் நடந்து சென்றால் அங்கே சித்தேஸ்வரர் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார்.

மலை அடிவாரத்தில் அமைதியான சூழல் மனதுக்கு இதமாக்குகிறது. இங்கு 18 சித்தர்களின் சிலைகள்,அழகாய் அமைந்துள்ளது. சுமார் 1000ஆண்டு பழமை வாய்ந்ததாக திருக்கோவிலாகும்.இப்பாலமலையில் 5 சித்தர்கள் வாழ்த்து வந்ததாக பழையபுராணங்கள் கூறுகிறது.இங்கு சிவலிங்கமும் புற்றுக்கண்ணும் அருகருகே அமைந்துள்ளது.

புற்றுக்கண் உடன் துறட்டமரமும் இணைந்துள்ளது.இதை ஹரியும் சிவமும் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்கிறார்கள். பழமையான இக்கோவில் கடந்த 4.5.2007 வெள்ளிக்கிழமை கும்பாபிசேகம் நடைபெற்றது.

பூஜை நடைபெறும் நாட்கள்: பிரதோஷம்,அமாவசை,பவுர்ணமி நாட்களில்.

திருக்கோவிலில் காணப்படும் சிலைகள்:

1.அகத்தியர் 2.போகர்சித்தர் 3.குதம்பைசித்தர் 4.சிவவாக்கிய சித்தர் 5. தன்வந்திரி சித்தர் 6. இராமதேவ சித்தர் 7சட்டைமுனிசித்தர் 8.கோரக்கர் 9.மச்சமுனி10.வான்மீகர் சித்தர்11.பாம்பாட்டி சித்தர் ஃ, 12.கொங்கர் சித்தர் 13.கமலமுனி 14.இடைக்காடர் 15.பதஞ்சலி முனிவர்16. திருமூலர் 17.கருவூரார் சித்தர் 18. சுந்தராணந்தர் சித்தர் மற்றும்


நால்வர்கள் திருஞான சம்பந்தர் ,,திருநாவுக்கரசர் ,சுந்தரர் ,மாணிக்கவாசகர் ஆகியார்களுக்கும் தட்சிணாமூர்த்தி ,அருணாச்சலிஷ்வரர், சித்தேஷ்வரி,பிரம்மா.துர்க்கை,சண்டிகேசுவரர்,நாரயணர்,

ஸ்ரீசங்கரன்,சப்தகண்ணிகள்,உடன் அமைந்த அடிவார சித்தேஷ்வரர் ஆலயத்திற்கு வந்து தரிசித்து வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் உங்கள் அன்பன் .

மறவாமல் உங்கள் கருத்துரைகளை அனுப்பவும்.நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...