Monday, April 25, 2011

அருள்மிகு வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ஆலயம், கூடுதுறை,பவானி



அருள்மிகு வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ஆலயம்,கூடுதுறை,பவானி


(Arulmigu sangameswarar&veathanayagi amman temple history,kududurai, bhavani ,erode d.t )

மூலவர் : சங்கமேஸ்வரர்

அம்பாள் : வேதநாயகி அம்மன்.

கொங்கு நாட்டின் வடக்கே இருந்து வரும் காவிரி நதிக்கரையின் அழகிய அமைப்புடன் மேற்கு இருந்து சீறிப்பாயும் பவானி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் ஈஸ்வரர் தோன்றியதால் சங்கம ஈஷ்வரர் மருவி "சங்கமேஸ்வரர் " ஆக அருள் புரியும் கிழக்கு நோக்கிய சுயம்பு ஈஸ்வர சன்னதி ஆகும்.

காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுவதால் "கூடுதுறை" என அழைக்கப்படுகிறது. இவ்விரு ஆறும் இணையும் இடத்தில் புதியதோர் நதியாக "அமிர்தநதி" எனும் புதியதோர் நதி உருவாகுவகுவதாக முக்கூடல் சங்கமமாக விளங்கி வருவது சிறப்பாகும்.

பவானி ஆறு பவானி கூடுதுறையில் கலந்தபின் அது காவிரி ஆறாக மாறிப் போகிறது. இங்கு தான் பழங்கால சிறப்பு மிக்க பல புலவர்களால் பாடப்பெற்ற சிவத்தலமாகும்.

பவானி புது பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவிலும் ,பவானி பழைய பஸ் நிலையத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு அருகில் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

திருக்கோவிலின் முகப்பிலேயே நந்தீஸ்வரர் நம்மை வரவேற்க அவரை தரிசனம் செய்து இராஜ கோபுரம் முகப்பில் இருக்கும் விநாயகர், அனுமன் சன்னதிகளை வணங்கி இராஜகோபுரத்தை கடந்தால் இடப்பக்கம் திருக்கோவில் அலுவலகமும் வலது புறம் அருள்மிகு வேணுகோபாலர் காக்கும் கடவுள் வெங்கடாசலாபதி சன்னதியின் கொடிமரம் ஆகியவற்றைக் கடந்தால் லட்சுமி நரசிம்மர்,மகாலட்சுமி சன்னதிகள் மற்றும் திருக்கோவில் அலுவலர்களால் அழகாக பராமரிக்கும் புல்வெளிகள் ,பூச்செடிகள் அழகு.

அதைத்தாண்டிச்சென்றால் சித்தி விநாயகர் சன்னதி தரிசித்து சென்றால் வேதநாயகி அம்மன் சன்னதி முன் கொடிமரம் தரிசித்து மூலவரை தரிசிக்க சற்று நடந்தால் சங்கமேஷ்வரர் ஆலய முகப்பில் கொடிமரம் வணங்கி விநாயகர்

,முருகரை வணங்கி உட்பிரகாரத்திள் நந்தீஷ்வரர் அவர்க்கு பின் சூரிய ,சந்திர சிலைகள் இடது புறம் நால்வர்கள் சிலை வலதுபுறம் நடராஜர் சன்னதி,முன்பகுதியில் காக்கும் கடவுள்களை வணங்கி ஆலய உட்பகுதிக்கு சென்றால் அருள்மிகு சங்கமேஸ்வரரின் சன்னதியை தரிசனம் செய்த அரும் பாக்கியம் கிட்டுகிறது .

நல்ல வெண் திருநீரு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மூலவர் தரிசித்து பின் இடப்புறமாக வெளியே வந்தால் 68 நாயன்மார்களையும் ,தட்சிணாமூர்த்தியை தரிசித்து மூலவர் பின்புறம் விநாயகர் , வள்ளி தெய்வானையுடன் முருகர் தரிசனம் முடித்து, மூலவரின் இடப்புறம் சண்டிகேஷ்வரர் அருள்பெற்று இடப்புறம் வெளியே வந்தால் நவகிரக சன்னதியும் காலபைரவர் சன்னதியும் அருகருகே அமைந்துள்ளது.

வெளிப்பிரகாரம் சுற்றினால் திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் பழங்கால "இலந்தமரம்" அதன் அடியில் ஆனைமுகந்தோன் சன்னதியை காணலாம். சனிஷ்வரர்க்கும், முருகருக்கும் தனி சன்னதியகளில் பூஜை நடைபெறுகிறது.அதன் பின் வேதநாயகி அம்மனை தரிசிக்கலாம்.

அருள்மிகுவேதநாயகி அம்மன் சிறப்புகளை தனி இடுகையில் காணலாம்.வேதநாயகி அம்மன் கோவில் முகப்பில் தரமான ஆன்மீகப்புத்தககடை வைத்திருக்கிறார்கள் .அருகே உடனடி போட்டோ எடுத்து தரும் போட்டோகிராபரும் உள்ளார்.

திருக்கோவில் கொடிமரம் முன்பாக வெளியே சென்றால் காவிரியின் அழகை ரசிக்கலாம்.சற்றுதூரம் நடந்து சென்றால் முக்கூடல் சங்கமிங்கும் பவானி நதி,காவிரிநதி சங்கமிங்கும் இடத்தில் கம்பி வலை அமைத்தும் தடுப்பு சுவர் அமைத்தும் ஆண்கள்,பெண்கள் குளிக்க இட வசதி செய்திருக்கிறாக்கள். தடுப்புச்சுவர் தாண்டிசென்று குளிப்பது ஆபத்தானதாகும்,அவ்வாறு பலர் தடுப்புச்சுவர் தாண்டி ஆர்வத்தில் சுழலில் சிக்கி இறந்ததும் உண்டு .

தலைசிறந்த பரிகார ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.இங்கு காலசர்ப்ப தோஷம்,பித்திருக்கடன் போன்ற பல தோஷங்கள் போக்க பரிகாரம் செய்ய திருக்கோவில் நிர்வாகத்தால் அனுமதி பெற்றவரா.? என அறிந்து செய்வது நலம்.

நீத்தார் கடன்,செலுத்த ஆடி அமாவசைகளில் கூட்டம் அலைமோதும். குளத்தின் அருகே உள்ள பழங்கால விநாயகரும் அரசமரமும் அழகானது.

வாருங்கள் வந்து அருள்மிகு சங்கமேஸ்வரர்,வேதநாயகி அம்மன் அருள் பெற்று எல்லா வளங்களும் பெற வாழ்த்தும்

பழ.மாதேஸ்வரன் (pala.matheswaran)

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...