" இதுவோ அவிநாசி..? இவ்வாறே நள்ளா(று)..?,
இதுவோ திருப்புக்கொளியூர்..?-இதுவோதான் ,
மூவாண்டு சென்று முதலை வாய்ப்பிள்ளை தனை,
வாவென அழைத்த மண்
. -பழம் பாடல்
மூலவர் -அவினாசி லிங்கேஸ்வரர்
அம்பிகை: அருள்மிகு
பெருங்கருணை நாயகி
ஸ்தல விருட்ஷம் - பாதிரி மரம்
பாடல் பாடியது ; ஸ்ரீ
சுந்தரமூர்த்தி நாயனார் . குமரகுருபரர் ஆகியோராவர் .
திருக்கோவில் காலம்
: திருக்கோவில் காலம் மிகப்பழமையானது . 5 ஆம் நூற்றாண்டில் இருந்து
கல்வெட்டுக்குறிப்புகள் கிடைத்துள்ளன. கூன் பாண்டியன் என்பவரால் கோவில் நிர்மாணப் பணிகள் துவங்கப்பட்டது.
கொங்கு நாட்டிலுள்ள முக்கிய
சிவாலயங்களில் சுமார் 1500ஆண்டுகள் பழமையான சிவாலயமாக ஸ்ரீ அவிநாசிலிங்கேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது
அமைவிடம் : சேலத்தில் இருந்து
கோவை செல்லும் வழியில் அவிநாசி என்னும் ஊரில் பழைய பேருந்து நிலையத்தின்அருகே அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில்
தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது .
முகப்பில் அழகிய அரசமரமும் அதனடியில்
ஸ்ரீ விநாயகப்பெருமானையும் தொழுது சென்றால் இடப்பக்கத்தில் குளமும்
முகப்பில் இராஜகோபுரம் பின் கொடிமரமும் வணங்கி உள்ளே சென்றால் மூலவர்ஸ்ரீ அவினாசி லிங்கேஸ்வரரை தரிசிக்கலாம் .
திருக்கோவில் ஸ்தல வரலாறு :
சேரநாட்டிற்கு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் வருகை தந்தபோது தற்போது
அவிநாசி அக்காலத்தில் திருப்புக்கொளியூர் என்ற ஊரின் அருகில் வந்த போது
இரண்டு வீடுகளில் ஓர் வீட்டில் சந்தோஸத்தையும் ஓர் வீட்டில் ஓர் வீட்டில்
துக்கமாய் இருப்பதையும் கண்டார் .
அதை பார்த்த சுந்தரர் விசாரிக்க ஓர்
குழந்தை பிறந்த நாள் விழா கொண்டாடுவதாகவும் , ஒரு குழந்தை குளத்தில்
கவ்விச்சென்றதால் இறந்து போனதால் சோகமாய் இருப்பதாக கூறப்பட்டது.
உடனே ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் இறந்தபோன குழந்தையின் பெற்றோரை
அழைத்துச் சென்று தேவாரம் பாட குளத்தில் நீரும் முதலையும் வந்தது.
"
கரைக்கால் முதலை பிள்ளை தரச் சொல்லு காலனையே"
எனப்பாட 7ஆண்டு கால
வளர்ச்சி பெற்ற குழந்தையை முதலை வாயில் இருந்து வந்ததது. அதைப்பெற்றகுழந்தையின் பெற்றோர் சந்தோஷமடைந்தனர் .
பாடல் பெற்ற ஸ்தலம் .நால்வரில் ஒருவரான சுந்தரர் தேவாரம் பாடி முதலையின் வாயில் குழந்தையை வரச்செய்ததால்எம பயம் நீக்கும் ஸ்தலமாக கருதப்படுகிறது.
திருக்கோவில் வளாகத்தில்சுந்தரருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பழங்கால சிறப்பு மிக்ககல்வெட்டுகள் திருக்கோவில் பின்புறத்தில் அமைந்துள்ளது.
நீங்களும்
கொங்கு நாட்டின் 7 சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ பெருங்கருணைநாயகி உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரரை தரிசித்து எம பயம் நீங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அந்த இறை துணை வேண்டி நிற்கிறேன் .
நன்றி

No comments:
Post a Comment