ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்(து)
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.
தேவாரம் -திருஞானசம்பந்தர்.
மூலவர் : ஸ்ரீ மகாலிங்கப்பெருமான்
(இடைமருதன் ,மருதவாணர்)
அம்பிகை :
பெருநலமா முலையம்மை திருக்கோவில்
அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை
செல்லும் வழியில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி
ஸ்தலம் ,தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய அழகிய திருக்கோவில் திருவிடை
மருதூர் ஆகும் .
பாடல் பெற்ற திருத்தலம் பாடியவர்கள்:அப்பர் ,சுந்தரர்
,திருஞானசம்பந்தர் , மாணிக்கவாசகர் , கருவூர்த்தேவர் ,பட்டினத்தார் ,
அருணகிரிநாதர் , கவிகாளமேகம் , ஆகியோர் பாடிய ஸ்தலமாகும்
நான்குபுறமும் சிவாலயம் இருக்க நடுவே ஸ்ரீ மகாலிங்கப்பெருமான் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத்தலம் என போற்றப்படுகிறது.காவிரியின் தென்கரையில் உள்ள காசிக்கு நிகரான பதினோரு ஸ்தலங்களில் திருவிடைமருதூரும் ஒன்றென்பதே மிக விஷேசமான விஷயமாகும் .
திருக்கோவில் அமைப்பு:
கிழக்கு நோக்கியதிருத்தலம் .திருக்கோவில் அருகே காருண்யாமிர்தத் தீர்த்தம் எனும்திருக்குளம் அமைந்துள்ளது. ஏழு கோபுரம் ஏழு பிரகாரங்களை கொண்ட பெரியபரப்பளவில் அமைந்த பிரமாண்ட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த திருக்கோவில்ஆகும் . பட்டினத்தாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
புராணச்சிறப்பு:
அகத்தியரும் பல முனிவர்களும் அம்பிகையை நேரில் தரிசிக்க தவம் இருந்தனர் .பல நாட்கள் அம்பிகைக்கு தவமிருந்தும் காட்சி அளிக்காததால் வருத்தமுற்று இருந்தனர் .
கயிலாயத்தில் இருந்து இதை கவனித்த அம்பிகை சிவனிடம் நமக்காக நெடுநாட்கள் அகத்தியர் தவமிருக்கிறார் . அவர்க்கு நாம் காட்சி அருளவேண்டுமென கேட்டுக்கொண்டார் .
சிவன் அம்பிகையை முன்னமே செல்லச் சொல்லி விட்டு சிவன் அவர்க்கு முன்னமே திருவிடைமருதூர் வந்து தங்கினார்
அகத்தியர் முன் அம்பிகை காட்சி அளித்தார் .
அம்பிகை கண்டது மகிழ்ச்சி சிவனேயும் நாங்கள் தரிசிக்க வேண்டும் என ஆர்வமாக அகத்தியர் கேட்க சரி நானும் உங்களுடன் தவமிருக்கிறேன் என தவமிருத்தார் .
சிவபெருமான் முதலில் சோதி வடிவாக பின் லிங்கவடிவாக அதன் பின் மான் மழுவுடன் தலையில் பிறையணிந்து சிவபெருமான் முழு உடலாக காட்சி தந்து " இத்தலத்தில் லிங்கத்தை தரிசிப்பவருக்கு பெருஞ்செல்வங்கள் மற்றும் பாவங்களை போக்குவேன் என்றருளி தம்மை தாமே பூசித்த அற்புத ஸ்தலமாக திருவிடைமருதூர் இருப்பது பெரும் சிறப்பாகும் ,
காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை வரை சிறப்புற நடக்கிறது.89 அடி உயர தேர்தமிழகத்தின் உயரமான தேர்களில் திருவிடைமருதூர் தேரும் ஒன்றாகும் .
திருவாடுதுறை ஆதினம் அவர்களால் திருக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கது
முடிவுரை :
அம்பிகைக்கும் அகத்தியருக்கும் பல
முனிவர்களுக்கும் நேரில் காட்சி கொடுத்த அற்புதஸ்தலமான காசிக்கு நிகரான ஸ்தலமாக
அருள் தரும் பெருதலமாமுலையம்மை உடனமர் ஸ்ரீமகாலிங்கப்பெருமான வணங்கி பாவங்கள் போக்கி பல அற்புதங்களை அருளும் திருவிடை மருதூர் திருத்தலம் அற்புத ஆலயம் .
தரிசித்து அருள் பெறுங்கள் .
ஓம் சிவ சிவ ஓம்

No comments:
Post a Comment