Friday, February 22, 2013

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி தரிசனம் (4 ஆம் படைவீடு)

குருவாய் அரற்கு உபதேசம் வைத்த , குகனே
குறத்தி மணவாளா .! குளிர்கா மிகுந்த வளர்புக மெத்த,
 குடகாவிரிக்கு வடபாலார்,
திருவேரகத்தில் உரைவாய்.! உமைக்கோர்,
சிறுவா .! கரிக்கும் இளையோனே.!

 -அருணகிரி நாதர்

 அமைவிடம்
: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் உள்ளன.

தமிழகத்தின் ஆறுபடை வீடுகளில் நான்காவது வீடாகவூம் திருவேரகம் எனஅழைக்கப்படும் சுவாமி மலை பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளக்குகின்றது.

சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பிரணவ உபதேசம் வழங்கிய அற்புத திருத்தலமாக கருதப்படுகிறது. ஆதலால் சுவாமி மலை வந்து வழிபட ஞானம் கிட்டுமென்பது பெரியோர்கள் வாக்கு.

புராணம் விளக்கும் உண்மை :

பிரம்மா படைப்புத்தொழில் புரிவதால் ஆணவம் முற்றி இருந்த தருணத்தில்
முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரணவமந்திரத்தின் பொருளை பிரம்மாவிடம் முருகர் கேட்க நான்முகனால் விளக்கமுடியவில்லை.

 அப்போது பிரம்மாவின் தலையில் குட்டி பிரணவமந்திரப்பொருள் அறியாத நீவீர் படைப்புத்தொழில் புரியக்கூடாதென பிரம்மாவை சிறையில் அடைத்தார்.  பின்  முருகரே படைக்கும் தொழிலை செய்து வந்தார் .

 பிரம்மா சிறையில் வாடுவதை அறிந்த திருமால் சிவனிடம் தோன்றி பிரம்மாவை சிறையிலிருந்து விடுவிக்க  வேண்ட முதலில் நந்தியை தூதுக்கு அனுப்பினார் சிவன் ,அப்போதும் முருகரின் கோபம் தணியவில்லை.நந்தி திரும்பி வந்தார் .

பின் சிவனே முருகரின் முன்
தோன்றி பிரம்மாவை சிறையிலடைப்பது தவறென கூறி முருகரை சமாதானம் செய்தார் .தந்தை சொல்மிக்க மந்திரமில்லையென பிரம்மாவை விடுவித்தார் .

 அப்போது பிரம்மா என் ஆணவம் அடங்கியது எனக்கூற மகிழ்ந்த சிவன் முருகப்பெருமானை மடியில் உட்கார வைத்து பிரணவமந்திரப்பொருளை எமக்கு கூறு என முருகரிடம் கேட்க பிரணவமந்திரத்தின் பொருளை சிவனின் திருச்செவியில் முருகர் உரைத்தார் .

 இந்த அரிய நிகழ்வு நடைபெற்ற இடமே சோழ நாட்டில் ஆறுபடை  வீடுகளில் ஒன்றான திருவேரகம் என புராண காலத்தில் அழைக்கப்படும் சுவாமி
மலையாகும் . இந்நிகழ்வால் முருகர் சுவாமிநாதன் என்றும் குருநாதன்
என்றும் அழைக்கப்படுகிறார் .

 திருக்கோவில் அமைப்பு :

 மூன்று சுற்றுகள் கொண்ட சுவாமிமலை உருவாக்கபெற்ற குன்றாகும் .60படிகள் கொண்ட திருக்கோவில் ஏறிச்சென்றால் மூலவர் ஸ்ரீ சுவாமிநாதரின் தரிசனம் கிட்டுகிறது.

 தெற்குபார்த்ததாக அமைந்த இராஜகோபுரம் 5 மாடங்களுடன் அழகே அமைந்துள்ளது.


நிகழ்வுகள் :

அருணகிரிநாதர் சுவாமிநாதரை தரிசித்து அவர் பாதங்களை
தரிசித்ததாக வரலாறு.பூமாதேவி பார்வதின் சாபத்திற்குள்ளானதால்
இத்தலத்தில் வந்து சாபம் நீக்கியதாக புராண வரலாறு.

 பின் பூமாதேவி
இத்தலத்திலிருந்து செல்லாமல் நெல்லிமரமாக அமர்ந்ததாக கூறப்படுகிறது.
மீனாட்சி சன்னதின் கிழக்கே நோய்களை தீர்க்கும் வச்சிர தீர்ததமென்ற கிணறு
அமைந்துள்ளது.

ஷ்தல தீர்த்தம் :

நேத்திர புஸ்கரணி ஆகும் . இது கிழக்கே
கீழவீதியில் அமைந்துள்ளது.

 ஸ்தலமரம் :நெல்லி மரம்

 சுவாமிமலையின்
வேறுபெயர்கள் :சுந்தராசலம் ,திருவேரகம் ,குருமலை,சிரகிரி ,சிவகிரி
ஆகியனவாகும் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :


விசுவரூப தரிசனம் காலை 6மணிக்கும்
உஷாக்காலம் 7மணி க்கும்
 காலைசந்தி 9 மணிக்கும்
 உச்சிகாலபூஜை:நன்பகல் 12 மணிக்கும்
 சந்தியாகாலபூஜை:05.30மணிக்கும் ,
இரண்டாம் காலபூஜை: இரவு 7மணிக்கும் ,
அர்த்த யாமபூஜை இரவு 9 மணிக்கும்
நடைபெறுகிறது.

விஷேசகாலங்களில் பூஜைநேரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

பாடிவர்கள் :

சுவாமிமலை திருக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நக்கீரர்
திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரி நாதரின் திருப்புகழ் போன்ற பல
நூல்கள் சுவாமிமலை புராணத்தை உரைக்கின்றது.

திருக்கோவில் காலம் :
பழங்காலத்தில் அமைந்த திருக்கோவிலாயினும் விக்கிரம சோழன் 1120 -1136
காலக்கல்வெட்டுகளினால் இது 1000 வருடத்திற்கு முந்தைய திருக்கோவிலாகும்


. முடிவுரை :

குன்றே இல்லாத இடத்தில் குன்றை உருவாக்கி அழகான குன்றாக
அமர்ந்த ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை வந்து வணங்கி அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் பெற்று உய்ய வேண்டுகிறேன் .

தரிசித்து கருத்துரையிடுங்கள்
.நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...