Sunday, November 27, 2011

பில்லூர் ஸ்ரீ வேதநாயகி உடனமர் வீரட்டீஷ்வரர் திருக்கோவில் .பரமத்தி வேலூர்


பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில்


அமைவிடம் :

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பில்ல களத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பில்லூர் ஸ்ரீ வீரட்டீஸ்வரர் திருக்கோவில் பழங்கால சிவாலயங்களில் ஒன்றாகும் .பரமத்தி வேலூரில் இருந்து சுமார் 10 கி.மீட்டரில் சிவாலயம் அமைந்துள்ளது .


திருக்கோவில் மூலவராக ;

ஸ்ரீ வீரட்டிஸ்வரர் சிவலிங்க உருவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


அம்பாள் :ஸ்ரீ வேதநாயகி

திருக்கோவில் சிறப்பு :

பஞ்சபாண்டவர்களால் வழிபாடு செய்யப்பட்ட சிவத்தலமென பெருமைமிகு வரலாறு இத்திருக்கோவிலுக்கு உண்டு. ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டு பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும் . நாமக்கல் குடவரைக்கோவில் பல்லவர்கால மகேந்திரவர்மன் காலத்திய கல்வெட்டாகும் .நாமகிரியின் அடையாளச்சின்னம் இத்திருக்கோவிலில் காணப்படுவதால் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவிலும் பல்லவர்காலத்தில் மகேந்திரவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது புலனாகிறது. திருக்கோவிலில் கல்லால் ஆன கலசம் இந்தக்கூற்றை மேலும் உண்மையாக்குகிறது.


திருமணி முத்தாறு ஆற்றங்கரையின் மேற்குகரையில் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வு செய்த போது கிடைத்த விநாயகர் சிலையில் பில்லூர் என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பழங்காலத்தில் "புல்லார் விநாயகர் சிலை " எனக்குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லால் ஆன கோபுரத்தை அக்காலத்தில் இரட்டை வரிக்கல்லால் அந்த காலத்தில் உருவாக்கியது வியப்பான ஒன்று.

பழங்காலத்தில் புல்லார் என அழைக்கப்பட்டு காலத்தால் மருவி பில்லூர் என மாறி உள்ளதாக தெரிகிறது. பல ஆன்மீக தகவல்கள் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் உள்ளது. தற்போது : பழங்கால சிவலயமான பில்லூர் ஸ்ரீ வீரட்டீஷ்வரர் திருக்கோவில் பல சிவனடியார்கள் ,ஆன்மீக அன்பர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.திருக்கோவில் திருப்பணி அழகே செய்யப்பட்டு மெருகேறி வருகிறது.

திருக்கோவில் பற்றி மேலும் அறிய இப்பகுதியில் உள்ள சிவனடியார்
திரு. கார்த்திக்ராஜா அலைபேசி : 94434- 62072 தொடர்பு கொள்ளுங்கள் .

திருக்கோவில் பற்றிய இந்த இடுகை மேலும் விரிவாக்கப்படும் . எல்லா சிவாலயங்கள் போல தோற்றத்தில் இருப்பினும் பல சிறப்புகளை பெற்றுள்ள ஸ்ரீ வேதநாயகி உடனமர் வீரட்டீஸ்வரர் திருக்கோவிலை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அழைக்கும்

.ஓம் சிவாய நமஹ எனச்சொல்லி நட்பு

குரு.பழ.மாதேசு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...