




ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவில்
SRI ARUTHRA KABALISHWARAR TEMPLE,MADAVILAGAM.BABBINI,GANGAYAM TALUK
மடவிளாகம் செல்லும் வழி:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து ஈரோடு செல்லும் (அரச்சலூர் )வழியில் 5கி.மீட்டரில் மடவிளாகம் என்னும் அழகிய ஊருக்கு வலப்பக்கம் 3 கி.மீட்டரில் உள்ளது. பாப்பினி என்னும் ஊரின் அழகிய ஊராட்சி ஒன்றியத்தில் ஸ்ரீஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
கொங்கு நாட்டில் பழங்கால சிலாலயங்கள் பல இருப்பினும் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில் மிகப்பிரமாண்டமானது. அழகானது . திருக்கோவில் வளாகமும் அமைந்துள்ள இடமும் மிகப்பெரிய சிவாலாமாகவும் இருப்பது இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்து விட்டோமே என்ற எண்ணம் ஏற்படும் .இது போன்ற சிவாலய திருக்கோவில் அமைப்பை கும்பகோணம் ,தஞ்சாவூர் பகுதியில் தான் காண முடியும் .
திருக்கோவில் மூலவர் : ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர்
அம்பாள் : ஸ்ரீ பிரகல நாயகி அம்மன்
திருக்கோவில் தோற்றம் : திருக்கோவில் முன்பாக இரட்டை விநாயகர் சிலை அழகுடன் அமைந்திருக்க பழங்கால வேம்பும் அரச மரமும் அழகு செய்திருக்கிறது. திருக்கோவில் உள்ளே கொடிமரமும் அழகான நந்தீஸ்வரர் சன்னதியும் அழகானது. மூலவர் ஸ்ரீ ஆருத்ர கபாலிஷ்வரர் லிங்க வடிவில் அழகாக அமைந்திருக்கிறார் . திருக்கோவில் உள்ளே தனிச்சன்னதியாக அம்பாள் சன்னதி ஸ்ரீ பிரகல நாயகி அம்மன் சிலை அழகே உருவில் அமைந்துள்ளது.
திருக்கோவில் தான்தோன்றி ஈஸ்வரர் , கன்னி மூல கணபதி, வன்னி மர விநாயகர் ,நின்ற நிலை விநாயகர் ஆகியவை பார்க்க வேண்டிய சன்னதியாகும் . சிவாலயம் பின்புறமாக பெரிய கிணறு அமைந்துள்ளது.
sri ragupathi narayana perumal temple,madavilagam,babini.gangayam taluk;
அருகே அமைந்துள்ள சீதேவி பூதேவி உடனமர் ரகுபதி நாராயணப்பெருமாள் சன்னதி ,மகாலட்சுமி தாயார் சன்னதி, அனுமன் சன்னதி ,ஆழ்வார் சன்னதி மடவிளாகம் ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவில் அருகிலேயே அமைந்துள்ள அழகிய வைணவத் திருத்தலமாகும் . பார்க்க வேண்டிய இடம் . சைவம், வைணவத் திருத்தலங்கள் ஒன்றாக அமைந்து இருப்பது பழங்கால ஆலயங்களில் மட்டுமே காண முடிகின்ற ஒன்றாகும் .
sri angala parameashwari temple, madavilagam,babbini;
50மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் தரிசிக்க வேண்டிய அழகிய இடமாகும் . ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளே பேச்சியம்மன் ,சடைச்சி அம்மன் சன்னதிகளும் , இருளப்பன் ,கருப்பண்ண சாமி ,பாவாடை ராயன் சன்னதிகளூம் , மதுரை வீரன்,பொம்மியம்மன் , வெள்ளை அம்மன் சன்னதிகளும் திருக்கோவில் கொடிமரம் முன்பாக நந்தீஷ்வரர் சிலை அழகானது. ஸ்தலமரமாக துரட்டிமரம் அமைந்துள்ளது. 60 அடி குண்டம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு அமைத்துள்ளார் .
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலும் ,ஸ்ரீ ரகுபதி பெருமாள் திருக்கோவிலும் மடவிளாகம் ஸ்ரீ ஆருத்ரகபாலீஷ்வரர் திருக்கோவில் அருகே அமைந்துள்ளது. அதனால் சிவாலயம் தரிசனம் செய்து அருகேயுள்ள இந்த இரு திருக்கோவிலையும் பார்த்து விட்டு வரலாம் .
நீங்களும் காங்கேயம் பகுதிக்கு செல்லும் வாய்ப்பிருந்தால் ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரரை தரிசறம் செய்து விட்டு எழுதுங்கள் .
நட்புடன் குரு.பழ.மாதேசு.