Saturday, June 4, 2011

அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் .பாலமலை அடிவாரம் கரடிப்பட்டியூர் ,குருவரெட்டியூர்









பாலும் தெளிதேனும் பாகும்பருப்புமிவை நாளும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்க கரிமுகத்து தூமானியே நீயெனக்கு சங்கத்தமிழ் மூன்றும்தா -

ஔவையார்


அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில்,

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டை வழியாக குருவரெட்டியூரில் இருந்து கரடிப்பட்டியூர் சென்று அங்கிருந்து பாலமலை சித்தேஷ்வரர் மலைக்கு செல்லும் அடிவாரத்தில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

பாலமலையின் இயற்கை சாரலில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயமும் பிரமாண்ட அரசமரமும் அழகானது,சுத்தமான காற்றும் இயற்கையின் தாலாட்டும் மிக்க ஓர் அருமையான ஆலயமாகும்.

கோவில் பின்புறம் இடப்பக்கமாக பாம்பு புற்று உள்ளது. புரட்டாசி மாதத்தில் சித்தேஷ்வரரை வழிபட பாலமலைக்கு செல்லும் பக்தர்கள் இந்த அடிவார சித்தி விநாயகரை தரிசனம் செய்தும் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம்.

புரட்டாசி 3வது,4வது சனிக்கிழமைகளில் சித்தி விநாயகருக்கு பெரும்பூஜை செய்து அன்னதானத்தை சில ஆன்றோர்கள் செய்வது வழக்கம். குருவரெட்டியூரில் இருந்து ( 3கி.மீ ) அவ்வப்போது வந்து பக்தர்கள் சித்தி விநாயகரை வழிபடுவதுண்டு.

அருகில் கரடிப்பட்டியூர் ஏரி உள்ளது. மற்ற நாட்களில் கூட்டம் இருக்காது என்றாலும் அமைதியான அழகான மலைப்பாங்கான தூய்மையான இடத்தில் இருக்கும் சித்திவிநாயகரை ,அருகே சுதகையில் உள்ள அடிவார சித்தேஷ்வரரையும் வணங்குகள்,

உங்கள் காரியம் " சித்தி " அடையும் நம்புங்கள்.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...