Thursday, June 19, 2014

Fwd: ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில் ,மயிலாப்பூர் , சென்னை

 ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில்

                           ,மயிலாப்பூர் ,

 இறைவன் : ஸ்ரீகபாலீஷ்வரர் 

அம்பிகை :கற்பகாம்பாள் 


 தமிழகத்தின் தேவாரப் புகழ் பெற்ற
திருத்தலங்களில் திருமயிலையில் அமைந்துள்ள ஸ்ரீ கபாலீஷ்வரர்
திருக்கோவிலும் ஒன்று .

திருக்கோவில் ஸ்தலமரமாக புன்னை மரமும் கோவில்
முன்னே அழகிய கபாலி தீர்த்தமும் அழகே அமைந்துள்ளன . சுமார் 2000
வருடங்கள் பழமையான கபாலீச்சரம் என்றும் ,திரு மயிலாப்பூர் எனஅழைக்கபடும் கபாலீஸ்வரர் திருக்கோவில் மூலவர் சுயம்பு லிங்கமாக
அருள்பாலிக்கிறார் .

 திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் ,சுந்தரர்
ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் . தேவாரப் புகழ் பெற்ற தொண்டை
நாட்டின் சிவஸ்தலங்களில் 34 ஸ்தலமாக போற்றப்படுகிறது .

 திருக்கோவில்
திறப்பு காலை 05.00 மணிமுதல் 12. 30வரையிலும் ,
மாலை 04.00மணி முதல் இரவு
09.00மணி வரையிலும் திறந்திருக்கிறது .

 இங்குள்ள நர்த்தன விநாயகரும்
சிங்கார வேலரும் தரிசிக்க வேண்டிய சன்னதிகளாகும் .

 மூலவராகிய
சிவபெருமானை வணங்கினால் பிறப்பற்ற நிலை ஏற்படுமென்பது ஐதீகம் .

மானிடருக்கு மனநிம்மதி அளிப்பவராக சிவபெருமானும் , உடல் நோய்
நீக்குபவராக அம்பிகையும் விளங்குகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு
சிவனை பூஜித்த ஸ்தலமாகாகவும் ,முருகப்பெருமான் வேல் பெற்ற ஸ்தலமாகவும் ,பிரம்மா படைக்கும் ஆற்றல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குவது தனிச்சிறப்பாகும்'.

 2000ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த கிரேக்கர் தாலமி மல்லிதர்பா
என்றும் மயில் ஆர்க்கின்ற இடம் மயிலாப்பூர் என குறிப்பிடுவதிலேயே
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மேன்மை நமக்கு புரிகிறது . இறந்த பூம்பாவையை
திருஞானசம்பந்தர் உயிருடன் எழுப்பினார் என்பது வரவாறு.

 முடிவுரை :


மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது .1000 சிவனை வழிபடுவதற்கு சமமாகும் ,அவ்வகையில் திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் அருள்பெற்று உய்யுங்கள் ,நன்றி

Wednesday, June 18, 2014

ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்

அன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளாக்கில் இல்லாததால் நிறைய பேர்க்கு தெரியாமல் போய்விடுகிறது .


ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அருகில் அலைவாய்மலை அடிவாரத்தில் ஸ்ரீ கொங்கணசித்தருக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது . ராசிபுரம் அடுத்த பொன்மலை .உலைவாய்மலை .அலைவாய் மலையில் ஸ்ரீ சித்தேஸ்வரர் திருக்கோவில் ஒன்றும் அதில் உள்ள சித்தர்சுவாமிக்கு 4 கரங்கள் உள்ளதாம். இத்திருக்கோவில் கொங்கணசித்தர் ,போகரால் உருவாக்கப்பட்டதாக வரலாறு .


இதன் அருகே கூனவேலம் பட்டி அருகில் இராவணன் சகோதரி சூர்பனகைக்கு
திருக்கோவில் உலகிலேயே ஒரே கோவில் தனிக்கோவிலாக அமையப்பெற்றுள்ளதென அப்பகுதி நன்பர் சொன்ன தகவல் ஆச்சர்யத்தின் உச்சம் , ஸ்ரீ கொங்கணர் சித்தர் கோவில் இராசிபுரம் வெண்ணந்தூர் சாலையிலேயே இருப்பதால் எளிதில்
தரிசிக்கலாம் .

 மூலவராக ஸ்ரீ கொங்கணசித்தர் இருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு ஸ்ரீ கொங்கணரின் அருள் முழுமையாக கிட்டும் . 



திருக்கோவில் சுற்றி போகர் ,அகத்தியர் சிலைகளும் அமைந்துள்ளது . ஸ்ரீ கொங்கணர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அலைவாய் மலை என ஸ்ரீ கொங்கணரின் வாழ்வியல் தொடர்ச்சி தமிழகத்தில் கொங்கணர் பலகாலம் வாழ்ந்து ,சித்தமருத்துவம்
,பாஷாணக்கட்டுகள்,ரசவாதம் ஆகிய துறைகளில் உயர்ந்து நின்று திருப்பதி
திருமலையில் ஜீவசமாதியாகியுள்ளார் என்பது புலானாகிறது .

 மேலும் இங்கு உலைவைத்து ஊதியதிற்கான சான்றுகளும் சித்தர்கள் குகைகளும் உள்ளதாக கூறுவது ஆய்வுக்குரியது . அதனாலேயே உலைவாய்மலை என அழைக்கப்படுகிறதாம் .எப்படியோ புதிய சித்தர் ஆலயம் கண்டதில் மகிழ்ச்சியே . அப்பகுதிக்கு செல்லும் வாய்பிருப்பின் ஸ்ரீ கொங்கண சித்தர் அருள் பெற்றுச்செவ்லுங்கள். நன்றி

 முடிவுரை : 


அலைவாய் மலை ராசிபுரம் பகுதிகள் நமக்கு புதிது ,குறை
இருப்பின் சுட்டிக்காட்டவும் . இப்பகுதி சித்தர் ஆலயங்கள் ,பதிவுகள்
இருப்பின் லிங்க் கொடுங்கள் , மறுபடியும் ஓர் புதிய பதிவுகளுடன்
சந்திக்கிறேன் .நன்றி

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி கொல்லிமலை

கொல்லிமலை ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் நேர் எதிரே சுமார் 720
படிக்கட்டுகள் செங்குத்தாக இறங்கிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை
தரிசிக்கலாம் .திருக்கோவில் வடபுறத்தில் 5 நதிகள் ஒன்றாக கூடி வருவதால்
பஞ்ச நதி என அழைக்கப்படுகிறது .

 பின் ஆகாய கங்கையாக மாறி 150 அடி
உயரத்திலிருந்து அழகாக நீர்வீழ்ச்சியாக விழுகிறது . அறப்பளீஸ்வர் மீன்
உருவமாக உள்ளார் என்பது புராணம் உணர்த்தும் உண்மையாகும் . ஆடி 18 அன்றுபெருங்கூட்டம் இங்கே வந்து சந்தோஷமாக குளித்து ஸ்ரீ அறப்பளிஸ்வரரை வணங்கி
மகிழ்கிறார்கள் .

ஏப்ரல் மே ,ஜீன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது
. ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது .ஆகாயகங்கைநீர்வீழ்ச்சி துறையூர் முசிறி சென்று காவிரியுடன் கலக்கிறது . 5 ரூபாய்டிக்கெட் கொடுத்து படிகளில் செங்குத்தாக இறங்கி சென்றால் பல மூலிகைகள்,இதமான குளிர்ச்சி , நீண்டு உயர்ந்த சுற்றிலும் மலை என ஏதோ குகைக்குள்செல்வது போன்ற உணர்வு நமக்கு .

 இங்குள்ள 720 படிகள் தாண்டியதும் உயர்ந்த இடத்திலிருந்து அருவி கொட்டுவது காணற்கரிய காட்சி . இங்குள்ள பாறைகளில் வழுக்கி விழுபவர் பலருண்டு , ஆகவே குளிக்க செல்பவர்கள் ஆல்கஹால்களை அளவே உபயோகிப்பது நன்று . இரண்டு நாள் பயணமாக வருவது நல்லது. இங்கே சில ரிசார்ட்டுகள் தங்கவும் அமைந்துள்ளது .

 படகு இல்லம் ,மூலிகைப்பண்ணை என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. மலையில் விளையும்தாணியங்கள் இரண்டு இடங்களில் விற்கப்படுகிறது . திடிரென வரும் வாகனங்கள்
70 கொண்டை ஊசி வளைவுகள் என சில ஆபத்தும் உள்ள இடம் கவனமாக செல்வது நலம். சீசன் உள்ள நாட்களில் சென்றால் குளித்து மகிழ உகந்த இடமாககொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது .

 பார்க்க வேண்டிய இடம். ரசித்து கருத்திடுங்கள். நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...