Thursday, July 4, 2013

ஸ்ரீ மைவிழியம்மை உடனமர் உஜ்ஜீவநாதர் திருக்கோவில் , உய்ய கொண்டான் மலை , கற்குடி ,திருச்சி

அமைப்பு : 


 திருச்சியில் இருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் வயலூர்
செல்லும் ரோட்டில் உய்யகொண்டான் மலை என்னும் அழகிய 50 அடிக்குன்றில் கற்குடியில் என்ற இடத்தில் ஸ்ரீ உஜ்ஜீவநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது


மூலவர் : 


உஜ்ஜீவநாதர் ,

உச்சிநாதர் ,கற்பக நாதர் , முக்தீசர் என
அழைக்கப்படுகிறார் .

மூலவர் சுயம்பு லிங்கம் . 


 இறைவி :


பாலம்பிகை , மைவிழியம்மை காவிரியின் தென்கரை சோழநாட்டில் அமைந்த 4வதுசிவஷ்தலமாகும் . அழகிய கற்குன்றில் சிவன் குடியிருப்பதால் கற்குடி எனஅழைக்கப்படுகிறது .

 ஸ்தல விஷேசம் : 


 என்றும் 16 ஆக வாழமார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த சிவஸ்தலம் ,ஆக இத்தலத்தில் மார்க்கண்டேயரை காப்பாற்ற உறுதி அளித்து சிவன் காட்சி தந்த ஸ்தலமாகும் .நந்திவர்ம பல்லவமன்னரால் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆதலால் இவ்வூர் பழங்காலத்தில் நந்தி வர்ம மங்கலம் என பெயர் பெற்றது.

 பாடல் பாடியோர் :


அப்பர் .சுந்தர் ,சம்பந்தர் ஆகியோர் பாடல் பெற்ற சிவஷ்தலமாகும் .
அருணகிரிநாதர் இங்குள்ள ஸ்ரீ முருகப்பெருமானை பாடியுள்ளார் .

 தீர்த்தம்: 


பொன்னொளி ஓடை ,நாற்கோண தீர்த்தமாகும் .

 ஸ்தலமரம் : 


 வில்வம் .

வழிப்பட்டோர் :


 உபமன்யு முனிவர்,நாரதர் ,கரண் ,மார்க்கண்டேயர் ஆகியோராவர். 18 ஆம் நூற்றாண்டில் திருக்கோவில் கோட்டை யாக இருந்ததாம் .


திருக்கோவில் காலை 06.00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும் . மற்றோர்சிவலிங்கமாக இடர்காத்தார் உடன் அஞ்சானாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார் .


முடிவுரை : 


ஸ்ரீ உய்யகொண்டான் திருமலை திருச்சியில் இருந்து 5 கி.மீ
தொலைவில் அமைந்த அற்புத சிவஸ்தலமாகும் . அழகிய குன்றில் ஏறி உள்ளே அழகியஅமைப்பில் பழங்காலத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திருக்கோவில் .நிறைய வில்வமரங்கள் சூழ திருக்கோவில் அமைந்துள்ளது .

 தேவாரப்பாடல் பெற்றஅழகிய ஆலயம் . பார்க்கவேண்டிய அற்புத திருக்கோவில் . அதீத சக்திகள்கொண்ட ஆலயம் . வாய்ப்பு கிடைக்கும் போது தரிசித்து வாருங்கள். 5கி.மீதொலைவிற்குள்ளாக வயலூர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது .


வாய்ப்பு கிடைப்பின் வந்து ஆழ்ந்து வணங்குங்கள். எல்லா வளமும் நலமும்
கிட்டும் . நன்றி

Monday, July 1, 2013

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ,உறையூர் திருச்சி

                                   "திசுளாபுரவல்லியே நம ஓம் "


 ஸ்ரீ ரங்கம் அண்மையில் பயணித்து வந்த போது 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
திருக்கோவில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது .இது ஸ்ரீ அரங்கநாதசுவாமி  தேவஷ்தானத்திற்குட்பட்டது .

 திரு உறையூர் கோழியூர் எனவும் நிகளாபுரி
எனவும் அழைக்கப்படுகிறது. நந்த கோழ மகாராஜாவுக்கு குழந்தைபேறு
இல்லாக்குறை நீக்கி இலட்சுமி கமலமலரில் அவதரித்து இங்கே உறைந்த
காரணத்தால் இவ்வூர் திரு உறையூர் என்றும் உறந்தை என்றும்
அழைக்கப்படுகிறது .


 பெருமாள் இங்கே அழகிய மணவாளப்பெருமானாக நின்றநிலையில் அருள்புரிகிறார் .


 தாயார் மூலவராக வாஸல லட்சுமியாகவும்



உத்சவராக கமலவல்லி உறையூர் வல்லி எனவும் அழைக்கப்படுகிறார் . நந்த
சோழர் உறையூர் கமலவல்லி நாச்சியாரை பெருமாளுக்கு திருமணம் செய்து
வைக்கிறார் . திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் பார்த்த நிலையில் வடக்குதிசையில்
அமைந்துள்ளது .

கல்யாண விமானத்தில் அருள் புரிய இங்குள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் கமலபுஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது . காவேரி நதி ,
இதன் தீர்த்தமேயாகும் . திருக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


சிறப்பு :

திருப்பாணாழ்வார் அவதரித்த ஸ்தலம் . திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட ஸ்தலம் . கார்த்திகை மாதம் 10நாட்கள்
ரோகிணி நட்சத்திர உற்சவம் சிறப்பாக நடைபெறும் .

 திருக்கோவில் காலை 6.45
முதல் 12.00  வரையிலும் ,
மாலை 05.00முதல்
 இரவு 0800

முடிவுரை :

 ஸ்ரீ ரங்கம் ஆன்மீக சுற்றுலா சுற்றுலா செல்பவர்கள் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியாரை வணங்குங்கள் . மங்கலங்கள் உங்கள்வீட்டிற்கு வர அழகிய மணவாளப்பெருமானை வணங்கி வாருங்கள் . நல்லது பலவும்
உங்கள் வாழ்வில் கிட்டும் .நன்றி

Sunday, June 30, 2013

ஸ்ரீ சுந்தாராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் திருக்கோவில் கருங்கல் பாளையம் ஈரோடு

ஸ்ரீ சுந்தராம்பிகைஉடனமர் அருள்மிகு சோழிஷ்வரர் திருக்கோவில் ஈரோட்டில்இருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில்அமைந்துள்ளது. சுமார் ஈரோட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது .


 சிறப்பு : 


காசிக்கு நிகரான ஸ்தலமாக கருதப்படுகிற திருக்கோவில் அருகே ருத்ரபூமி எனப்படுகிற பிரமீடு மயானம்அமைந்துள்ளதால் இது விஷேசமாக கருதப்படுகிறது.


 இறைவன் :      ஸ்ரீ சோழிஷ்வரர்

பிரதிஷ்டை செய்யப்பட்ட பழங்காலத்திய லிங்கமாகும்

 இறைவி :  ஸ்ரீசுந்தராம்பிகை 



 ஈசனின் முகத்தில் தோன்றிய கிரகங்கள் இந்திரன்,அக்னி,எமன் .நிருருதி வருணன் வாயு குபேரன் , ஈசானன் ,சூரியன்,சந்திரன் பத்து திக்கு பாலகர்கள்களுக்கும் தீபம் வைத்து வழிபட்டால்முன்வினை தோஷம் , ஊழ்வினை, வம்சவிருத்தி , ஆகியவை நீங்கி நல் வாழ்வுபெறுவது உறுதியாகும் .


 அமாவாசை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகுந்த விஷேசமாகும் . சிவன் அல்லாது ,இங்கே ஸ்ரீ லட்சுமி நாராயணன் தனிச்சன்னதியில் அஷ்ட லட்சுமிகளுடன் வீற்றிருக்கிறார் . ஸ்ரீகஜலட்சுமி தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் , நவகிரகங்கள் ,தட்சிணாமூர்த்தி , பெரிய விநாயகர் ,நாயன்மார்கள் , என சிவாலயத்தின்
அமைப்பில் ஒருங்கே அமையப்பெற்றது .

ஸ்தலமரம் : மாமரம் 

இந்த மரத்தில் ஒருபகுதி கற்பூர சுவையுடனும் மறுபுறம் இனிப்புச்சுவையும் உடையதுகாணற்கரியது.

திருக்கோவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வில் இருப்பதால் யாரால்பிரதிஷ்டை செய்யப்பட்டது என அறிய இயலாவிடினும் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது . திருக்கோவில் சுற்றி வில்வம் உட்பட பலஆன்மீக மரங்கள் நிறைந்துள்ளது .


திருக்கோவில் அமைப்பு : 


திருக்கோவில் மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார் .எதிரே வடக்கிருந்து தெற்காக காவிரி ஆறு ஓடுகிறது. திருக்கோவில் வலப்புறம் மயானம் என்னும்  சுடுகாடு அமைந்துள்ளது. காவிரி ஆற்றிப்படுகையில்
பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஷ்வரருக்கு அடுத்து காவிரியின் படுகையில்
அமைந்த சிவாலயமாகும் .

 திருக்கோவில் முகப்பில் கொடிமரம் ஸ்ரீ
நந்தியம்பெருமான் , மூலவரான சிவலிங்கமாகி ஸ்ரீ சோழிஷ்வரர்
அருள்பாலிக்கிறார் . ஸ்ரீ சுந்தராம்பிகை தெற்கு பார்த்து இருக்கிறார் .
இது ஓர் விஷேச அமைப்பாகும் .

பூஜைகள் : 

காலை 6 .00 முதல் 11.00வரையிலும் மாலை 4.00 முதல் 7. 00 மணி வரையிலும் திறக்கப்பட்டு இருக்கும் . சோமவாரமான திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

முடிவுரை :



காவிரிக்கரையில் எழில் மிகுந்த சூழலில் அமைந்த சிவாலயமாகும் . ஏதேனும்
ஓர் பிரதோஷ நாளில் பாலபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள் .

Friday, June 28, 2013

ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் திருச்சிராப்பள்ளி


        SRIRANGAM SRI RANGANATHA SWAMY TEMPLE  TRICHY

" நீலமேகம் நெடும்பொற் குன்றத்துப்
 பால்விரிந்து அகலாது படிந்தது போல,
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் ,
 பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த,
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் ,
 திருவுமர் மார்பன் கிடந்த வண்ணம் "
                                                                                                                 -சிலப்பதிகாரம்.

 திருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் புகழ் பெற்ற 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி தமிழகத்தின்
மத்திய பகுதியான ஸ்ரீ ரங்கத்திலிருந்து அருள்பாலிக்கிறார் .
மகாவிஷ்ணுவிக்கென அமைக்கபட்டுள்ள திவ்யதேச திருக்கோவில்களில்
முதன்மையானதாகும் .

திருக்கோவில் உருவான விதம் :

திருப்பாற்கடலில்
தோன்றிய திருவரங்கம் கோவில் விமானத்தை பிரம்மன் பல காலம் பூஜை செய்துவந்தார் . பின் இப்பூசையை சூரியன் அதன் பின் சூரிய வம்சத்தில் வந்த
இட்சுவாகு மன்னர் இந்த விமானத்தைஅயோத்திக்குவழிபடகொண்டுவந்தான்.

பின் இக்குலத்தில் பெருமாளின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமர் தன்
முடிசூட்டு விழாவிற்கு வந்த விபிஷணன் பக்திகண்டு அவர்க்கு அளித்தார் .
விழா முடித்து காவிரிக்கரை வழியே இலங்கைக்கு பயணித்த களைப்பினால்
காவிரிக்கரையில் விமானத்தை இறக்கி வைக்க அவ்விமானம் அங்கேயே நிலை கொண்டது '.

பின் பலமுறை முயற்சித்தும் விமானத்தை தூக்கமுடியாமல் கவலைப்பட
இதைக்கேள்விப்பட்ட விபிஷணர்க்கு ஆறுதல் சொல்லி அரங்கநாதர்
காவிரிக்கரையில் தங்கவே விரும்புகிறார். அதனால் ஸ்ரீ ரங்கநாதர்க்கு
திருக்கோவில் எழுப்பலாம் என்று தமது கனவைக்கூற, விபிஷ்ணர் விருப்பம்
போலவே உன் நாடான தென்திசையில் இலங்கை நோக்கி பள்ளி கொண்டருள்வதாக உறுதிகூறினார் .

முதலில் தர்மவர்ம சோழனால் அவ்விமானத்தை சுற்றி திருக்கோவில்
எழுப்பபட்டது . பின்காலத்தில் காவிரி வெள்ளத்தினால் திருக்கோவில்
அடித்துச்செல்ல தர்மவர்ம சோழர் பரம்பரையில் வந்த கிள்ளிவளவன் ஒரு கிளியை பார்க்க மகாவிஷ்ணுவின் ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் இருந்த இடத்தை காட்டியது.

அங்கு திருக்கோவில் கட்ட ஆரம்பிக்க பின் கனவில் இறைவனே காட்சி தந்து
தற்போது ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைவிடத்தை சுட்டிக்காட்டியதாக வரலாறு. சோழர்களால் கட்டப்பெற்ற அழகிய ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் பூலோகவைகுண்டம் என அழைக்கபடுகிறது.

 மூலவர் :ஸ்ரீ அரங்கநாதஸ்சுவாமி


திருக்கோவிலில் ஸ்ரீ அரங்கநாதர் பள்ளி கொண்ட உருவமாய் ஸ்ரீ
மகாலட்சுமியுடன் ஆதிசேடன் படுக்கையில் திருபாற்கடலில் காட்சி
அளிப்பதைபோல் அருள்பாலிக்கிறார் .

 திருக்கோவில் வரலாறு :


1000ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம்
நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும் பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

திருக்கோவில் அமைப்பு :

காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையில்
ஸ்ரீ ரங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. 156 ஏக்கர் பரப்பில் அமைந்த
மிகப்பெரிய திருக்கோவிலாகும் .இந்தியாவிலேயே 7 பிரகாரங்களை கொண்ட
திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் மட்டுமே என்ற பெருமையை பெற்றுள்ளது .
கோபுரங்கள் 21 ஆகும் தீர்த்தங்கள் 9 இருக்கின்றன.
s
 ஸ்தல விருட்சம்:புன்னை மரம்

 மங்களாசாசனம் : ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற
திருக்கோவிலாகும் .

ராஜகோபுரத்தின் உயரம் 236 அடியாகும் .ஸ்ரீ தொண்டாரடிப்
பொடி ஆழ்வார் உள்ளிட்ட பல ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம் . ஸ்ரீ
ராமனுஜர் இங்கு வாழ்ந்து முக்தியடைந்த சான்றோர்களில் ஒருவராவார் .


முடிவுரை :

 காலை 6.15 மணிக்கு விஷேசமான பூஜையாக குதிரை ,பசு, யானையுடன்
துவங்குகிறது ஸ்ரீ ரங்கத்தில் இப்பூஜை விஷேசமானது . கடந்த வாரத்தில் ஸ்ரீ
ரங்கப்பெருமானை இந்த பூஜையில் கலந்து கொண்டது மகிழ்வான ஓர் நிகழ்வு .
வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு முறை வணங்கிய அதே அருமையான நினைவுகளுடன் இறைவழிபாடு செய்தேன் . ஸ்ரீ ரங்கப்பெருமான் பற்றிய இப்பதிவில் பகிர்ந்துசிறிதளவே !

 மிகப்பெரிய சூட்சமங்கள் கொண்ட திருக்கோவில் தம்மை
நம்பியவர்கள் வாழ்வில் உயர்த்துகின்ற ஸ்ரீ ரங்கநாத பெருமான I வந்துவணங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிடுங்கள் .

நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...