Monday, May 2, 2011

அருள்மிகு செம்முனிஸ்வரர்&பச்சியம்மன் திருக்கோவில்,பூசாரியூர்,பூனாச்சி பவானி வட்டம்.Arul migu semmunisamy tirukkovil. poosariyur poonatchi, bhavani taluk






அருள்மிகு செம்முனிஸ்வரர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூரில் இருந்து 10வது கி.மீட்டரிலும், வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள பூசாரியூரில் இருந்து 2 வது கி.மீட்டரில் உள்ளது


,திருக்கோவில் ஏப்ரல் மாதத்தில் 15 நாள் பூச்சாட்டுதல் தொடங்கி ஏப்ரல் கடைசி வாரத்தில் பிரமாண்டமான விசேஷமாக கிராமத்து கலை அம்சத்துடன் நடைபெறுகிறது.அப்போது 40அடி உயரமுள்ள தேரில் செம்முனிசாமி,பச்சியம்மாள்,மன்னாதன் ஆகிய உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூசாரியூரில் இருந்து செம்முனிஷ்வரர் கோவில் வரை 2 கி.மீட்டர் தூரம் பக்தர்கள் தேரை சுமந்து செல்வது பாரம்பரியமான ஒன்றாகும்.

செம்முனிசாமி கோவில் உதயமாகி 891 வருடங்கள் ஆகின்றதாம்.இதற்கான சான்று பனை ஓலைச்சுவடி யில் உள்ளதாம்.இந்த ஓலைச்சுவடி தற்போது சேலத்தில் ஆராய்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.பச்சியம்மனும் செம்முனிசாமியும் ஒன்றே எனக்கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் தேனூர் பச்சியம்மன், திட்டக்குடி, பொன்னாடி, ஆகிய பச்சியம்மன் கோவிலுக்கு இக்கோவில்காரர்கள் செல்வதுண்டாம்.பச்சியம் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பர்.

திருக்கோவில் வனத்தில் இருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் செம்முனிஷ்வரர் பூஜை பொருட்கள் கொண்டு வரப்படும்.செம்முனிசாமி கோவில் திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் "காவுகுட்டி" எனப்படும் இளம் ஆட்டுக்குட்டிகள் வெட்டி அதன் ரத்தத்தை 10 பூசாரிகள் குடித்தவாறு அருள் வந்து ஆடுவது பிரமிப்பான, திகிலான விஷயமாகும்.

தற்போது நடந்த கோவில் விசேஷத்தில் 4000 கிடாய்கள் என சொல்லப்படும் இளம் ஆட்டுக்குட்டிகளை வெட்டி ரத்தம் குடித்தவாறு வந்த பூசாரிகள் பார்த்து நமக்கே சற்று கலக்கமாகத்தானிருந்தது செம்முனிசாமியை வழிபடும் பக்தர்களுக்கு குழந்தை வரம், மனநோய்,திருமணம்,நாள்பட்ட நோய் விடுதலை பெறுவது சிறப்பாகும்.இத்திருக்கோவில் வெட்டப்படும் ஆடுகளின் ரத்தத்தை பக்தர்கள் நம்பிக்கையோடு குடிப்பது,பூசிக்கொள்வது இட்டுக்கொள்வதே இதற்கு சான்றாகும். செம்முனிஷ்வரர் கோவில் அருள்மிகு அகோர வீரபத்மர் சன்னதியும் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும்.

பல ஆண்டுகளாக செம்முனிச்சாமி கோவில் திருவிழாவின் போது "செங்காற்றும் செம்மழையும்" வடக்கில் இருந்து திரண்டு வந்து மாலை வேளையில் பலத்த மழை கொட்டும். பல முறை என் அனுபவத்தில் செங்காற்று செம்மழையை கண்ட அனுபவம் எனக்கு உண்டு. திருக்கோவில் வளாகத்தில் பிரமாண்ட முனியப்பர் சன்னதிகள் உண்டு.

,இங்கு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன்,ஸ்ரீ கார்த்தி அம்மன்,ஸ்ரீ இடக்குமரர்,ஸ்ரீமுக்காட்டு முனி,ஸ்ரீ கஞ்சமலை சித்தேஷ்வரர் ஸ்ரீ பாலமலை சித்தேஸ்வரர் ஸ்ரீ நஞ்சுண்டேஷ்வரர், குருபகவான், ஸ்ரீ ரங்க நாதர் ,முடிமாலை அழகி, சாந்தேனுகன்னி,பிரம்மா,பச்சியம்மன் ( மூலவர் ),வேங்கைமலை அம்மன்,பூகன்னி, செங்கன்னி, செங்குமரர்,மன்னாதசாமி, பூங்குமரர், முருகன்,கரிய பெருமாள் ஆகிய சிலைகள் திருக்கோவிலின் உள்ளே அழகு செய்கிறது.

பழங்கால மரமாக சுமார் 500 வருட மாகாளிய மரம் ஒன்று கோவில் முகப்பில் உள்ளது.திருக்கோவில் ஸ்தலமரம் புளியமரம் 800 வருடமாக இருக்கிறதாம்.இந்த மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய் காய்க்காது.

பழங்காலம் முன்பாக கோவில் ஒட்டிய பள்ளம் (ஓடையில் )பகுதியில் மீன் பிடித்த நான்கு பேர் மீன் பிடித்த பின் சமைக்க புளி வேண்டுமென ஸ்தல புளிய மரத்தில் ஏறி புளி பறிக்க திடிரென நான்கு பேருக்கும் கண் தெரியாமல் போனதாகவும் பின் கோவில் பூசாரி அவர்களிடம் விளக்கம் கேட்க செம்முனிஷ்வரரை வேண்டச் சொன்னார். அவர்களும் செம்முனிசாமி இனி செம்முனிசாமி கோவில் தேர் இழுக்க வருகிறோம்.

இறைவா! எங்களுக்கு கண் பார்வை கொடு என வேண்ட பூசாரி திருநீரு தர வேண்டியவர்களுக்கு கண்பார்வை வந்ததாகவும்,பின் பூசாரி இனி இப்புளிய மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய் காய்க்காது என அருள் வந்து சொன்னதாகவும் ,அதைப்போலவே தற்போது புளிய மரம் பூ பூப்பதோடு நின்று விடுகிறது. கண் தெரியாமல் வேண்டியவர்களே அவர்கள் பரம்பரையை சேர்ந்தவர்களே இன்றும் வேண்டியவாறு தேர் இழுப்பதாக செவிவழிச் செய்திகள் சொல்கிறது.

பிரதி வாரம் வெள்ளிக்கிழமை 03.00 மணிக்கு செம்முனிச்சாமி பூஜை நடைபெறுகிறது.அமாவசை புஜையும் சிறப்பாக நடைபெறும்.

செம்முனிச்சாமி கோவிலுக்கு சென்னம்பட்டி,ரெட்டிபாளையம்,மூங்கில்பாளையம்,முரளி,ஜரத்தல்.சனிச்சந்தை,கொமராயனூர்,குரும்பபாளையம்,தொப்பபாளையம், முளியனூர்,ஊஞ்சப்பாளையம் , குருவரெட்டியூர்., பூனாச்சி,ஆலாம்பாளையம் அந்தியூர் பகுதி மக்கள் கலந்த கொண்டு சிறப்பிப்பார்கள்.

நீங்களும் வந்து தரிசித்து அருள் பெறுங்கள்.நன்றி

Saturday, April 30, 2011

அருள்மிகு பர்வதவர்த்தனி உடனமர் பளிங்கீசர் ஆலயம் ரெட்டியபாளையம் வெள்ளித்திருப்பூர்




அருள்மிகு பளிங்கீசர் (PALINGESWARAR TEMPLE) மூலவராகவும் பர்வதவர்த்தினி (parvathavartini)அம்மையீராகவும் அருள் தரும் ஒர் அற்புத ஸ்தலம்


ஈரோடு மாவட்டம் (erode district ) பவானி வட்டம் (bhavani taluk ) வெள்ளித்திருப்பூரில் (vellitirupur) இருந்து குருவரெட்டியூர் (guruvareddiyur) செல்லும் வழியில் சுமார் 2வது கி.மீட்டரில் உள்ளது.


வெள்ளித்திருப்பூரில் இருந்து சனிச்சந்தை,முரளி,சென்னம்பட்டி (sanisandai,murali, chennampatty) செல்லும் வழியில் 3 கி.மீட்டரில் முத்தையன் கோவில் பஸ்ஸ்டாப் இறங்கி 200மீட்டரில் நடந்து செல்லலாம், ரெட்டிய பாளையம் அம்மன் கோவில் எனக்கேட்டாலும் கூறுவார்கள்.


பெரிய ஆலமரமும் அரசமரங்களும் அமைந்த இயற்கையான சூழலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர் காவிரியில் கலக்க ஏதுவாக பள்ளம் வெட்டப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் நீர் வரத்து இருக்கும்போது இப்பகுதி செழிப்பாக இருக்கும். பளிங்கீஸ்வரர் சன்னதியில் வலப்புறம் வன்னிமரம் ஸ்தல விருட்சமாக அழகு செய்கிறது.

பளிங்கீஸ்வரர் கிழக்கு நோக்கி அமைந்த சுயம்பு லிங்கமாகும் திருக்கோவிலின் வடமேற்கில் வில்வமரம் அமைந்து அழகு செய்கிறது.நால்வர், பிரம்மா,சனிஸ்வர் ,தட்சிணாமூர்த்தி,வள்ளி மணாளன், துர்க்கை, சன்டிகேஷ்வரர்,நவகிரககங்கள் ,காலபைரவர்,குபேரர் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி அமைத்து பூஜிக்கிறார்கள்.

வளர்பிறை பிரதோஷம் மட்டும் பிரதோஷ பூஜை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இப்பகுதிவாழ்மக்கள் மட்டும்மல்லாது வெளியூர் வெளிநாட்டினரும் வந்து பிரதோஷ பூஜையில் நந்தியம்பெருமானையும் பளிங்கீஸ்வரரையும் வழிபட்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.


திருமணத்தடை,குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை போன்ற பல்வேறு குறைகளுடன் வருகிற பக்தர்களுக்கு கனிவுடன் பிரதோஷ பூஜையில் நந்தியம் பெருமானிடம் எடுத்துச்சொல்லி பூஜிக்கின்ற திரு.ஸ்ரீ குமார் அய்யர் மற்றும் அவரது மகன் ஆகியோரின் இறைபணி போற்றுதலுக்குரியது.


உருவான காலம் :

பர்வதவர்த்தினி உடனமர் பளிங்கீஸ்வரர் திருக்கோவில் 6ஆம் நூற்றாண்டுக்கும் 9 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகுமென தொல்பொருள் ஆய்வுத்துறையால் ஆய்வு செய்து கூறப்பட்டுள்ளது.

இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் பழைய தாழிழி (தமிழ் ) எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் சாமிக்கு கல்யாண உற்சவம் நடந்ததையும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது பற்றியும் தொல்பொருள் ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பளிங்கீசரின் தோற்றம் :

இறைவன் சுயம்பு மூர்த்தியாக தானே தோன்றிய ஸ்படிகம் என்ற பெயரிலேயே அருள்பாலிக்கிறார் . ஸ்படிகத்தை மாலையாக நாம் அணித்தால் மன அமைதி, உடல் குளிர்ச்சி
கிடைப்பது போல் ஸ்ரீ பளிங்கீசரை வணங்கினால் மன அமைதியும் உடல் ஆரோக்கியம் கிட்டும் .


அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி தெற்கு பார்த்து அமைந்துள்ளார் . தெற்கு பார்த்த அம்பாள் போக சக்தி கொண்டவர் என்பது இறை வாக்கு .பர்வதராஜன் மகளாக பார்வதி பிறந்து தவம் செய்து சிவனை கணவராக அடைந்தவர் . ஆக அம்பிகையை வணங்குவோர்க்கு திருமணத்தடை நீங்கும் சுபகாரியங்கள் ஏற்படும் . ஸ்ரீ பளிங்கீசரை வணங்கினால் ராமேஸ்வரம் சென்ற பலன் கிட்டுமென்பது முன்னோர்கள் வாக்கு.

சனீஷ்வர பகவான் கிழக்கு நோக்கி திருநள்ளாற்றில் அமைந்திருப்பது ingu தனிச்சிறப்பாகும் .
பல சிவனடியார்கள் வந்து தரிசித்த ஸ்தலம்.இங்கு தேவார ,திருவாகப்பாடல்கள் பிரதோஸ வேளையில் பாராயணம் செய்து பாடி இறைவழிபாட்டை சிறப்பானதாக செய்கிறார்கள். பிரதோஸம் முடித்து வேண்தல் நடந்த யாரேனும் ஒருவர் சார்பாக இங்கு நல்லதொரு அன்னதானம் செய்கிறார்கள் .


அன்னதானத்தை கோவில் வளாகத்தில் தயார் செய்து அங்கேயே தங்கி இப்பகுதி மக்களுக்காக ஆன்மீகச் சேவை செய்யும் திரு ஸ்ரீ குமார் அய்யர் மற்றும் குடும்பத்தார் அவர்களை வாழ்த்துகிறேன்.

நீங்களும் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் வெள்ளித்திருப்பூர் அருகில் இருக்கும் பளிங்கீஸ்வரரை வந்து வணங்குங்கள்.

உங்கள் வாழ்வின் வசந்தங்கள் பெற விழையும் அன்பன்

குரு.பழ.மாதேஸ்வரன்

நன்றி

Thursday, April 28, 2011

கடவுளுக்கு செய்யும் அபிஷேகத்தால் பலன்கள்


நாம் கீழ்கண்ட பொருட்களால் இறைவனை அபிஷேகம் செய்தால் ஏற்படும் பலன்கள் :-

1.எண்ணைய் - சுகம்
2.மாப்பொடி -கடன்போக்கும் 3.நெல்லிமுல்லிபொடி - நோய் நீங்கும் 4.பஞ்சகௌயம் -தூய்மை உண்டாகும். 5பஞ்சாமிர்தம்- செல்வம், வெற்றியை தரும்
6,நெய்-மோட்சம் கிடைக்கும்,
7பால்-ஆயுள் வளரும்,
8தயிர்-மக்கட்பேறு ,
9தேன் -குரல் இனிமை,நல்ல சரிரம் கிட்டும்,
10கரும்புசாறு -பிணிநீங்கும்
11,பழவகைகள் -கோபம் நீங்கும் ,
12. எலுமிச்சை -எமபயம் போக்கும்
13.இளநீர் -போகம் ,நல்லபதவி தரும்
14. சந்தனம் -லட்சுமி கடாட்சம், மேலான பதவி
15.அன்னாபிஷேகம் -சகல நன்மைகளும் கிட்டும்.
16.மாம்பழம்-வெற்றி
17.விபூதி -நன்மை
18.பன்னீர் -சந்தோஷம்
19.நல்லெண்ணெய் -விஷ ஜூர நிவர்த்தி
20. எலுமிச்சம் பழம் - எமபயம் நிவர்த்தி
21.வாழைப்பழம் - பயிர் விருத்தி
22.வெல்லம் -துக்க நிவர்த்தி
23.சக்கரை -சகல நன்மைகள் கிட்டும்
24ஜலம்-சாந்தி உண்டாகும்.
25.மஞ்சள் பொடி -வசிகரம் கிட்டும்
26.ஜலதிரவியம் -சவுபாக்கியம்
27.மாதுளை -கோபம் போக்கும் ,மன அமைதி
28.கொளஞ்சி - சோகத்தை விரட்டும்
29.நார்த்தை - நேர்மையை தரும் .
30.எலுமிச்சை -குளிர்ச்சி பொருட்களால்
31குங்குமம்- சக்தி உண்டாகும்
32.கும்பநீர் -நலமான வாழ்வு
33.திருநீர்- தீட்டு அகலும்
34சங்கு- வியாதிகள் தீர்வு
35.பத்ரோதகம்- பயம் போக்கும்
36.சந்தனம் லட்சமி கடாட்சம்
37. அன்னம் - சாம்ராஜ்யம் தரும் .
இறைவனை மேற்கண்ட பொருட்களால் அபிஷேகம் செய்யுங்கள்.
எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.

Wednesday, April 27, 2011

அஷ்டமா சித்திகள் ( எட்டுவகை சக்திகள் )


ஆஞ்சநேயர் " ராம நாமத்தை" அடிக்கடி ஜபித்து வந்ததால் அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டுவகை சக்திகளை பெற்றார், கந்த குரு கவசத்திலும் கூறப்படும் அஷ்டமா சக்திகள் எனப்படுவதும் இவை என்னைன்ன எனறு பார்போம்.

1 .அணிமா - யார் கண்ணுக்கு புலப்படாமல் ஒரு சிறு அணுவாக சஞ்சரிப்பது

2. மகிமா - ஓரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவது

3.லகிமா - உடலை எடையற்றதாக்கி காற்றில் மிதப்பது

4. கரிமா - உடல் எடையையும்,வலிமையையும் ஒரு மலைக்கு சமமாக உயர்த்திக் கொள்ளுதல்

5.ப்ராப்தி- நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்பது

6.ப்ரகாம்யம் -விரும்பிய அனைத்தையும் எளிதாகப் பெறுவது

7.ஈசித்வம் - எவ்விதமான சக்தி படைத்தவரையும் அடக்கி ஆள்வது

8.வசித்வம் - உலகம் முழவதையும் தன் விருப்பப்படி ஆட்டுவிப்பது . ஆகியனவாகும்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...