அருள்மிகு பளிங்கீசர் (PALINGESWARAR TEMPLE) மூலவராகவும் பர்வதவர்த்தினி (parvathavartini)அம்மையீராகவும் அருள் தரும் ஒர் அற்புத ஸ்தலம்
ஈரோடு மாவட்டம் (erode district ) பவானி வட்டம் (bhavani taluk ) வெள்ளித்திருப்பூரில் (vellitirupur) இருந்து குருவரெட்டியூர் (guruvareddiyur) செல்லும் வழியில் சுமார் 2வது கி.மீட்டரில் உள்ளது.
வெள்ளித்திருப்பூரில் இருந்து சனிச்சந்தை,முரளி,சென்னம்பட்டி (sanisandai,murali, chennampatty) செல்லும் வழியில் 3 கி.மீட்டரில் முத்தையன் கோவில் பஸ்ஸ்டாப் இறங்கி 200மீட்டரில் நடந்து செல்லலாம், ரெட்டிய பாளையம் அம்மன் கோவில் எனக்கேட்டாலும் கூறுவார்கள்.
பெரிய ஆலமரமும் அரசமரங்களும் அமைந்த இயற்கையான சூழலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் நீர் காவிரியில் கலக்க ஏதுவாக பள்ளம் வெட்டப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் நீர் வரத்து இருக்கும்போது இப்பகுதி செழிப்பாக இருக்கும். பளிங்கீஸ்வரர் சன்னதியில் வலப்புறம் வன்னிமரம் ஸ்தல விருட்சமாக அழகு செய்கிறது.
பளிங்கீஸ்வரர் கிழக்கு நோக்கி அமைந்த சுயம்பு லிங்கமாகும் திருக்கோவிலின் வடமேற்கில் வில்வமரம் அமைந்து அழகு செய்கிறது.நால்வர், பிரம்மா,சனிஸ்வர் ,தட்சிணாமூர்த்தி,வள்ளி மணாளன், துர்க்கை, சன்டிகேஷ்வரர்,நவகிரககங்கள் ,காலபைரவர்,குபேரர் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னதி அமைத்து பூஜிக்கிறார்கள்.
வளர்பிறை பிரதோஷம் மட்டும் பிரதோஷ பூஜை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இப்பகுதிவாழ்மக்கள் மட்டும்மல்லாது வெளியூர் வெளிநாட்டினரும் வந்து பிரதோஷ பூஜையில் நந்தியம்பெருமானையும் பளிங்கீஸ்வரரையும் வழிபட்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
திருமணத்தடை,குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை போன்ற பல்வேறு குறைகளுடன் வருகிற பக்தர்களுக்கு கனிவுடன் பிரதோஷ பூஜையில் நந்தியம் பெருமானிடம் எடுத்துச்சொல்லி பூஜிக்கின்ற திரு.ஸ்ரீ குமார் அய்யர் மற்றும் அவரது மகன் ஆகியோரின் இறைபணி போற்றுதலுக்குரியது.
உருவான காலம் :
பர்வதவர்த்தினி உடனமர் பளிங்கீஸ்வரர் திருக்கோவில் 6ஆம் நூற்றாண்டுக்கும் 9 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகுமென தொல்பொருள் ஆய்வுத்துறையால் ஆய்வு செய்து கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் பழைய தாழிழி (தமிழ் ) எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டில் சாமிக்கு கல்யாண உற்சவம் நடந்ததையும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது பற்றியும் தொல்பொருள் ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பளிங்கீசரின் தோற்றம் :
இறைவன் சுயம்பு மூர்த்தியாக தானே தோன்றிய ஸ்படிகம் என்ற பெயரிலேயே அருள்பாலிக்கிறார் . ஸ்படிகத்தை மாலையாக நாம் அணித்தால் மன அமைதி, உடல் குளிர்ச்சி
கிடைப்பது போல் ஸ்ரீ பளிங்கீசரை வணங்கினால் மன அமைதியும் உடல் ஆரோக்கியம் கிட்டும் .
அம்பாள் ஸ்ரீ பர்வதவர்த்தினி தெற்கு பார்த்து அமைந்துள்ளார் . தெற்கு பார்த்த அம்பாள் போக சக்தி கொண்டவர் என்பது இறை வாக்கு .பர்வதராஜன் மகளாக பார்வதி பிறந்து தவம் செய்து சிவனை கணவராக அடைந்தவர் . ஆக அம்பிகையை வணங்குவோர்க்கு திருமணத்தடை நீங்கும் சுபகாரியங்கள் ஏற்படும் . ஸ்ரீ பளிங்கீசரை வணங்கினால் ராமேஸ்வரம் சென்ற பலன் கிட்டுமென்பது முன்னோர்கள் வாக்கு.
சனீஷ்வர பகவான் கிழக்கு நோக்கி திருநள்ளாற்றில் அமைந்திருப்பது ingu தனிச்சிறப்பாகும் .
பல சிவனடியார்கள் வந்து தரிசித்த ஸ்தலம்.இங்கு தேவார ,திருவாகப்பாடல்கள் பிரதோஸ வேளையில் பாராயணம் செய்து பாடி இறைவழிபாட்டை சிறப்பானதாக செய்கிறார்கள். பிரதோஸம் முடித்து வேண்தல் நடந்த யாரேனும் ஒருவர் சார்பாக இங்கு நல்லதொரு அன்னதானம் செய்கிறார்கள் .
அன்னதானத்தை கோவில் வளாகத்தில் தயார் செய்து அங்கேயே தங்கி இப்பகுதி மக்களுக்காக ஆன்மீகச் சேவை செய்யும் திரு ஸ்ரீ குமார் அய்யர் மற்றும் குடும்பத்தார் அவர்களை வாழ்த்துகிறேன்.
நீங்களும் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் வெள்ளித்திருப்பூர் அருகில் இருக்கும் பளிங்கீஸ்வரரை வந்து வணங்குங்கள்.
உங்கள் வாழ்வின் வசந்தங்கள் பெற விழையும் அன்பன்
குரு.பழ.மாதேஸ்வரன்
நன்றி
3 comments:
ஒரு போட்டோ போட்டிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.
உங்கள் கருத்துரைக்கு நன்றி நன்பரே.விரைவில் பளிங்கீசர் படம் இணைக்கப்படும்
sir, visit palingesar photos ,thank u
Post a Comment