Saturday, January 7, 2012

தேடல்



அன்பே...!

நீ பிரிந்த நேரங்களில்
எதிர்படும்
ஓவ்வொரு பெண்மையில்
எங்கேனும்
உன் சாயல்
தென்படுகிறாதாவென
தேடிக் கொண்டிருக்கிறேன்
நான்..!
உன்னைத்தேடி..!

காவிரி நதியில் மிதந்து காட்சிதரும் ஸ்ரீ நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவில்





அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீஷ்வரர் திருக்கோவில் .காங்கேயம் பாளையம் ஈரோடு மாவட்டம்
SRI NATTATRIESWARAR TEMPLE, kangayampalayam, erode



காவிரி நதிக்கரையில் புகழ் பெற்ற பல சிவலாயங்கள் உள்ளன. அவற்றில் பழமையான ஸ்ரீ நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும் .

திருக்கோவில் செல்லும் வழி :

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் 15 கி.மீட்டர் காங்கேயம் பாளையம் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரரை தரிசனம் செய்யலாம்

திருக்கோவில் மூலவர்: நட்டாற்றீஷ்வரர் ( NATTATRIESWARAR )

திருக்கோவில் பெயர் காரணம் :

காவிரி நதியில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதாலும் ,திருக்கோவில் சுற்றிலும் காவிரி நதி ஓட நடுப்பகுதி ஆற்றில் திருக்கோவில் அமைந்திருப்பதால் நற்றாற்றிஷ்வரர் (நடு+ஆறு+ ஈஸ்வரர் ) என அழைக்கப்படுகிறது .

திருக்கோவில் அமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவாலயமாகவும் ,பழங்கால திருக்கோவிலை சீர் செய்து அழகாக உருவாக்கியுள்ளார்கள் .ஈரோட்டில் இருந்து காங்கேயம்பாளையம் வழியாக வரும் பக்தர்கள் வசதிகாக திருக்கோவில் வர பாதை தயாராகி வருகிறது.

ஸ்தலமரமாக ஆத்திமரம் உள்ளது.

திருக்கோவில் சிறப்புகள் :

சித்தர்களில் ஒருவரான அகத்தியரால் பூஜித்து, வழிபட்ட பாடல் பெற்ற சிவலாயம். அதனாலேயே மூலவர் நட்டாற்றீஷ்வரர் எதிரே அமைந்த நந்தீஷ்வரர் பின்புறம் அகத்தியர் திருவுருவச்சிலை அமைத்து சிறப்பித்துள்ளார்கள் .

காவிரி நதியின் நடுவில் ஆற்றினுள் அமைந்த ஒரே சிவஷ்தலம் . 6300 ஆண்டுகள் பழமையான சிவலாயமென புகழப்படுகின்ற சிவாலயம் .

ஈரோடு மாவட்டத்தில் காவிரி நதிக்கரையின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவிலை வந்து பாருங்கள் . இறைவன் அருள் பெற்றுச்செல்லுங்கள். அருள்மிகு ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரர் அருளால் எல்லா வளமும் பெற்று உய்ய வேண்டுகிறேன் .

Saturday, December 31, 2011

நாளைய விடியல் உனக்காக


ஒவ்வொரு வருடமும்
முன்னைப்போலவே
புதிதாய் பிறக்கிறது..!

நட்பே ,

உனக்காகதான் அது.!
அறிவை மேம்படுத்தி
உயர் சிந்தனைகள் வளர்த்து..!
உரியதோர் இலக்கை தொட்டு.!
புதியதோர் அத்தியாயம் படைத்திடு..!
நீ முயற்சிக்கின்ற
எதிலும் வெற்றி பெறு..!
முடியுமாவென யோசிக்காதே..!
முயற்சித்தால் கண்டிப்பாக
வானம் வசப்படும் ..!
நாளைய விடியல் 1.1.2012
அதன் தொடக்கமாயிருக்கட்டும் ..!




(எமது வலைப்பூவை தொடர்கின்ற அன்பு நட்புகளுக்கும் ,பேஸ்புக் ,டிவிட்டர் தொடர்கிற நட்புகள் ,மற்றும் சக வலைப்பூ நட்புகளுக்கும் , என் குருவை வாழ் நட்புகளுக்கும் , உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2012 . HAPPY NEW YEAR WISHS - 2012 )

நட்புடன்
குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்

ஸ்ரீ திருமண்மலை கல்யாண லஷ்மிநாராயணப்பெருமாள் திருக்கோவில் ஒட்டப்பாளையம் . ஒலகடம்



திருமண்மலை
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் .
.ஒலகடம்


திருக்கோவில் செல்லும் வழி : ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஒட்டப்பாளையம் கிராமம் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் சாலையில் வெடிக்காரன்பாளையம் .தாண்டாம்பாளையம் என்னும் கிராமத்தில் உள்ளது. ஒலகடம் பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் உள்ளது.

திருக்கோவில் மூலவர் :
ஸ்ரீ திருமண் கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோவில் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர் ஸ்ரீ கல்யாண லஷ்மி நாராயணப்பெருமாள் முற்றிலும் திருமண்ணால் திருமேனி கொண்டும் தாயாரை வலப்புறம் கொண்டு திருமண் கல்யாண லஷ்மி நாராயணராக திருமணக்கோலத்தில் திருமண்பெருமளாக காட்சி அளிக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் குன்றின் மேல் பெருமாள் திருக்கோவில் . சில நேரங்களில் இப்பெருமாள் உக்கிரமாகி நரசிம்ம மூர்த்தியாக மாறுவதால் இவர் "திருமண் லஷ்மி நரசிம்ம பெருமாளாக அழைக்கப்படுகிறார் . திருப்பதியைப் போன்று வேங்கடவன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார் . திருமண் என்றால் நாமக்கட்டி எனபொருள் . மூலவர் நாமக்கட்டியால் ஆனவர் என்பதே விஷேசம் . திருமண் எனப்படும் நாமக்கட்டியே இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இறைவனுக்கு பழமையான ஆலயம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட அழகான வைணவத்திருத்தலம் என போற்றப்படுகிறது. திருக்கோவில்
பலன்கள் : தனது வலப்புறத்தில் அன்னை பத்மாவதி தாயாரோடு இறைவன் திருமணகோலத்தில் காட்சி தருவதால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால் நல்லபடியாய் திருமணம் நடைபெறுகிறது .
திருக்கோவில் ஒலகடத்தில் இருந்து பருவாச்சி செல்லும் வழியில் 3வது கி.மீட்டரில் அமைந்துள்ளது. திருக்கோவில் மேல் செல்ல பழங்காலத்தில் அமைக்கப்பட்ட 50 படிகட்டுகளும் ,

தற்போது அமைக்கப்பட்ட பாதைகள் சிறிய வாகனங்கள் செல்ல ஏதுவான பாதையும் உள்ளது. முகப்பில் உள்ள பெரிய ஸ்ரீ ஆஞ்சனேயர் சிலையும் ,அழகிய கொடிமரமும் வணங்கத்தக்கது. பூஜைகள் : பிரதிமாதம் ஏகாதசி திதி அன்று திருமண்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் . பிரதி மாதம் பெளர்ணமி மாலை 06.00 மணி முதல் 08.00 மணிவரை சத்திய நாராயண பூஜையும் ,சுதர்சண ஹோமமும் ,திருவிளக்கு பூஜையும் நடைபெறும் . பிரதிமாதம் பஞ்சமி திதி அன்று மகாலட்சுமிக்கு சிறப்பு சகஸ்கர நாமவளி பூஜை நடைபெறும் . பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1 மணி வரை ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனமும் ,சஹஸ்ரநாமாவளியும் ,தீபாரதனையும் நடைபெறும் . பிரதிமாதம் மூல நட்சத்திரத்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெறும் . திருக்கோவில் பற்றிய விரிவான ஆராய்வுகள் தேவைப்படுவதால் விரிவுபடுத்தப்படும் .

ஸ்ரீ சௌந்திரநாயகி உடனமர் வாகீஸ்வரர் திருக்கோவில் .பட்லூர் .வெள்ளித்திருப்பூர்





ஸ்ரீ செளந்திர நாயகி உடனமர் வாகீஷ்வரர் திருக்கோவில் ,பட்லூர் .வெள்ளித்திருப்பூர்


ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் புகழ் பெற்ற பழங்கால சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பழமையான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும் .

திருக்கோவில் செல்ல வழி :

பவானியில் இருந்து வெள்ளித்திருப்பூர் சென்னம்பட்டி செல்லும் வழியில் 20கி.மீட்டர் தொலைவில் பட்லூர் என்னும் அழகிய ஊரில் குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிக்கிறார் . அந்தியூரில் இருந்து நால்ரோடு வந்து (8 கி.மீட்டர் ) பட்லூரை அடையலாம் .

பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் நால்ரோட்டில் இறங்கி சுமார் 1 கி.மீட்டர் வடக்கில் பயணித்தால் திருக்கோவிலை அடையலாம் . திருக்கோவில் தோன்றிய காலம் 1000 ஆண்டுகள் இருக்குமென இங்குள்ள ஸ்தல மரமான வில்வமும் ,அருகேயுள்ள அரசமரங்களும் இயம்புகின்றன.

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ வாகீஷ்வரர்(தாமரை பீடத்தில் சிவ லிங்கமாக அமைந்துள்ளார் )

அம்பாள் :

ஸ்ரீ செளந்திர நாயகி

மூலவர் :
திருக்கோவில் சாமி லிங்க உருவில் தாமரை மேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வாகீஷ்வரர் காட்சி அளிக்கிறார் .திருக்கோவில் சிவலிங்கம் கிழக்கு பார்த்தவாறு அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறம் பழங்காலத்தில் சிறுகற்களால் வெளிப்பிரகாரம் கட்டப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. திருக்கோவில் எப்போதும் திறந்திருக்கும் . அமைதியான சூழலில் சிவதரிசனத்திற்கு ஸ்ரீ வாகீஷ்வரர் திருக்கோவில் ஏற்புடையது.

திருக்கோவில் பெரிய அளவில் எடுத்துச்செய்ய யாரேனும் வருங்காலத்தில் வரக்கூடும் . எளிமையாக இருந்தாலும் கம்பீரமாக காட்சிதரும் சிவாலயம் . ஸ்ரீ செளந்திரவல்லி அம்பாள் தனிச்சன்னதியாக அழகாக நேர்த்தியான வடிவமைப்பில் அமர்ந்திருக்கிறார் . முகப்பில் உள்ள நந்தீஷ்வரர் உயிர்புடையவர் ,

திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்ரீ கணபதி, பன்னிருகரம் கொண்ட ஸ்ரீமுருகப்பெருமான் .ஸ்ரீ சண்டிகேஷ்வரர் , ஸ்ரீ காலபைரவர் என ஓர் பழங்கால சிவாலயத்தை வழிபட்ட திருப்தி ஏற்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் சிவாலயத்தை தேடி வழிபடுபவர்களாக இருந்தால் வந்து வணங்கி செல்லுங்கள் .

ஸ்ரீ வாகீஷ்வரர் உங்களுடன் இருக்க வேண்டுகிறேன் .

Friday, December 30, 2011

நன்பா 2012


நன்பா .. !
முந்தைய வருடங்கள் போலவே
இந்த வருடமும்
"புகை பிடிக்கமாட்டேன்"
" சாரயம் குடிக்கமாட்டேன்"
அதை மறப்பேன்
இதை விடுவேன் என

ஆயிரமாயிரம் சபதங்களை
ஏற்றுக்கொண்டு மறந்து விடு..?
கண்டிப்பாக நியாபகப்படுத்த வரும்
அடுத்த வருடமும்
ஓர் இனிய புத்தாண்டு .




எமது வலைத்தளத்தை பின் தொடர்கின்ற வலைப்பூ நன்பர்களுக்கும் ,இதர வலைப்பூவை நிர்வாகிக்கும் என் இனிய வலைப்பதிவாளர்களுக்கும் ,பேஸ் புக் ,டுவிட்டரில் உள்ள என் ஆழ்ந்த அன்பு நட்புகளுக்கும் , எனது குருவரெட்டியூர் நட்புகளுக்கும் எப்போதும் என்னைக்கருத்துரைகளில் குட்டுகிற வாசக நட்புகளுக்கும் என் இதயம் கனிந்த 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

ஜொள்


மலர்களைப் பார்த்து
ஜொள் விட்டது..!

இலையில் பனித்துளி..!

ஹக்கூ



எத்தனை முறை முத்தமிட்டாலும்

அலுத்துக் கொள்ளவேயில்லை


அட

அவளின் போட்டோ.!

அன்பானவளே புரிந்து கொள்


அன்பே ...!

நீ கண்ணிமைக்கும் கணங்களில்
சிரித்து விட்டு போகவும்...!
நீ ஆர்வப்படுகிற நேரங்களில்
முத்தமிட்டு போகவும் ..!
நீ அன்பு காட்டுகிற நேரங்களில்
கொஞ்சி குலாவவும்..!
உனக்கு வேண்டாத தருணங்களில்
அலைக்கழித்து விட்டு போகவும்..!

நான் ஒன்றும்

உன் எதிர் வீட்டுக்குழந்தையல்ல ..!

அழகான கவிதை


அன்பே ...!
என் கவிதைகள்
உனக்கு
பிடித்திருப்பதாக சொன்னாய் ...!
ஆச்சர்யம் தான்
ஓர் கவிதைக்கே
இன்னொரு கவிதை
பிடித்திருப்பதாக சொல்வது..!

Monday, December 26, 2011

இயற்கையில் அழகில் பாலமலை ஸ்ரீ கவ்விய பெருமாள் திருக்கோவில்






அருள்மிகு கவ்வியப்பெருமாள் திருக்கோவில் .பாலமலை . கொளத்தூர்.


சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையிலும், ஈரோடு மாவட்டத்தின் வடக்கு எல்லையான பாலமலை என்னும் அழகிய சூட்சமமலை அமைந்துள்ளது. பாலமலையின் உச்சியில் அருள்மிகு சித்தேஷ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு நம் வலைப்பூவில் எழுதியுள்ளோம் . பாலமலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பழங்காலமாக வெளித்தெரியாத பழங்கால திருக்கோவிலாக ஸ்ரீ கெவ்வியப்பெருமாள் temple அமைந்துள்ளது.



கெவ்விய பெருமாள் திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ பாமா ருக்மணி உடனமர் ஸ்ரீ கிருஷ்ணர் (கெவ்வியப் பெருமாள் )

அழகான வடிவமைக்கப்பில் ஸ்ரீ அர்ஜீனர் சிலைகள் அமைந்துள்ளன.


திருக்கோவில் முகப்பில் விநாயகப்பெருமானின் சிலை இருக்க கடந்த 2 வருடம் முன்பாக திருக்கோவில் மதிப்பை அறிந்து புதிதாக சிலைகள் பிரதிஷ்டை செய்து அழகு செய்துள்ளார்கள் .பழங்கால மூலவர் சிலையும் அருகே அமைந்துள்ளது. திருக்கோவில் அமைந்துள்ள இடம் முற்றிலும் இயற்கையின் குழுமைக்கு நம்மை இழுத்துச்செல்கிறது. சற்று தூரத்தில் ஆஞ்சனேயர் தனிச்சன்னதியாக அமைந்துள்ளார் .


பயண விபரம் :

திருக்கோவிலுக்கு செல்ல மூலமெத்தையில் இருந்து மலைப்பாதையில் நடக்க வேண்டும் இது குருவரெட்டியூர் கண்ணாமூச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது . இரண்டாவது வழியாக குருவரெட்டியூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் கண்ணாமூச்சி எல்லைபோர்டுக்கு முன்பாக வலப்பக்கம் திரும்பி மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ கெவ்வியப்பெருமாளை தரிசனம் செய்யலாம் .

திருக்கோவில் நிலமட்டத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் மலைப்பாதையில் உள்ளது.ஒற்றையடிப் பாதையில் பயணித்து மலை ஏற வேண்டும் . பாலமலையில் பயப்படும் படியான மிருகங்கள் இல்லாததால் பயமின்றி பயணத்தை தொடரலாம் . அவ்வப்போது இடையில் பயணத்தில் பாம்புபுற்றுகள் இருக்கின்றன. அதைத்தாண்டி பயணித்தால் இரண்டு இடத்தில் உட்கார்ந்து செல்ல ஏதுவாக பெரிய பாறைகள் உள்ளன.


சுமார் 2மணி நேரப்பயணத்தில் அழகிய திருக்கோவிலை அடையலாம் . உணவு ,தண்ணீர் எடுத்து செல்வது நல்லது. அங்கு கடைகளோ மக்களோ இல்லாத மலைப்பாங்கான இடமாகும் . திருக்கோவில் பூஜை பிரதி மாதம் அம்மாவசை நாட்களில் மட்டும் நடைபெறுகிறது. அம்மாவசை அன்று சென்றால் இறைவனை நன்றாக தரிசித்து வரலாம் . வருடத்திய சிறப்பு பூஜையாக கோகுலாஷ்டமி அன்று சிறப்பாக நடைபெறுகிறது.

பழங்காலமாக திருக்கோவில் பூஜை செய்து வரும்

பூசாரி 97157- 69559

அவர்களிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று திருக்கோவிலுக்கு செல்லலாம் .

திருக்கோவில் வரலாறு :

பழங்காலத்தி ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா குழந்தை உருவம் கொண்டு தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியில் பால் அருந்திக்கொண்டு இருந்ததாகவும் , அப்போது பசுவைக்காணாது வந்த பசுவின் சொந்தக்காரர் பசுவின் மடியில் பால் சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தையைக்கண்டு ஆச்சர்யம் கொள்ள ,

பின் அக் குழந்தை பாம்பு உருவமாகி தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்திலுள்ள சிறு குகையில் உள்ளே சென்று விட்டதாகவும் , பின்னர் அதை பலரிடமும் இயம்பி விபரம் சொல்லி திருக்கோவில் பூஜை செய்து வருவதாகவும் ,ஸ்ரீகிருஷ்ணர் குழந்தையாக வந்து நாகசர்பமாக மாறி குகைகுள் சென்றதால் "கவ்விய" பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுவதாகவும் பழங்கால செவிவழிச்செய்திகள் இயம்புகின்றன.

இயற்கை நீருற்று(சுனை) :

திருக்கோவில் வலப்புறம் இயற்கை நீர் ஊற்று வேர்களைப்பிடித்து இடைவிடாது வந்து கொண்டிருக்கிறது. கோவிந்தா கோவிந்தா எனக்குரல் எழுப்ப சுனையில் வருகின்ற நீரின் அளவு அதிகரிக்கிறது. சுனையின் நீர் தொடங்கும் இடத்தையும் முடியும் இடத்தையும் காண முடியாதது ஓர் ஆச்சர்யமே.

பாலமலையின் அதிக குளுமையான பகுதியாக திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் அமைவிடமே பெரிய குகை போன்ற அமைப்பில் பெரிய பாறைக்கு அடியில் உள்ளது சற்று பயத்தை தந்தாலும் இங்கு இறைவன் இருப்பதை அருமையாக உணரலாம் . ஸ்ரீகவ்விய பெருமாள் திருக்கோவிலை கெவ்வியப் பெருமாள் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்கோவில் அமைவிடத்தில் ஸ்ரீஅர்ஜீனர் தவசிக்கு புறப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது. பாலமலையில் அமைந்துள்ள ஸ்ரீ கவ்வியப் பெருமாள் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும் . வழிகாட்டி இல்லாமல் செல்லமுடியாதென்பதால் திருக்கோவில் செல்ல ஆர்வமிருப்பவர் எமது செல்லிடப் பேசியில் அழைக்கலாம் .

மற்ற திருக்கோவில் போல் அல்லாமல் முற்றிலும் வித்யாசமாக இயற்கை எழில் கொஞ்சும் அழகிய ஸ்ரீ கெவ்வியப்பெருமாளை தரிசித்து தரித்திரங்கள் போக்கி செல்வநிலை மேலோங்கி எல்லா வளமும் நலமும் பெற்றிட அழைக்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...