Tuesday, August 16, 2011

ஸ்ரீ குருநாதசாமி வனம் அந்தியூர் , ஈரோடு மாவட்டம்


அருள்மிகு குருநாதசாமி திருக்கோவில் வனம் :


அருள்மிகு குருநாதசாமி வனம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவில் இருந்து 3கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.



வனத்தில் மூலவராக வீற்றிருப்பது குருநாதசாமியாகும். உடன் பெருமாள் சாமியும்,காமாட்சி அம்மனும் அருள்புரிகின்றனர். அருகே நாகப்புற்று அமைந்துள்ளது. ஊஞ்சல் போன்ற அமைப்பும் உள்ளது.


சமதளத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழிறங்கி தரிசனம் செய்ய பள்ளம் போன்ற அமைப்பில் குருநாதசாமி வனம் அமைந்துள்ளது.

சுமார் 500 மீட்டரில் இவ்வனத்தில் வேம்பு,தென்னை,ஆலமரம்,ஊஞ்சன்மரங்கள் மற்றும் பழங்கால மரங்கள் அமைந்து குளுமையாக உள்ளது.

வேண்டுதல் நிறைவேறிய பின் பல குடும்பங்கள் வந்து ஆடிமாத கோவில் திருவிழா நாட்களில் இங்கு பொங்கல் இட்டு ஆடு,கோழிகளை பலியிட்டு , செல்வது வழக்கம்.

அருள்மிகு குருநாதசாமி வனத்தில் இருந்து திருவிழாவின் போது மடப்பள்ளிக்கு புதுப்பாளையத்திற்கு தேரில் குருநாதசாமி,பெருமாள் சாமி,காமாட்சி அம்மன் ஆகியோர் திருவிழா நாளில் பக்தர்கள் வரமளிக்க தேரில் வருவார்கள்.இந்த வருடம் 2011 ன் திருவிழா சிறப்பாக லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தர 5 நாட்கள் நடந்தது .

திப்புசுல்தான் ஆட்சியில் தன் குதிரைப்படைக்கு தேவையான குதிரைகளை வாங்க அந்தியூரில் குதிரைச்சந்தை அமைத்ததாக வரலாறு இந்த வருடம் நொக்ரா,காட்டியவாடி ,கத்தியவார் போன்ற பல ரக குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.5லட்சம் வரை குதிரை விலை சொல்கிறார்கள்.


,மாட்டுச்சந்தையில் மலைமாடுகள் காங்கேயம் காளைகள்,சிந்து ,ஜெர்சி வந்திருந்தன. குஜராத்தில் இருந்து வந்த ஜாப்ரா இன எருமைமாடுகள் வித்தியாசமாய் இருந்தன.

காது நீண்ட ஜமுனாபாரிஆடுகள் பல வகையான வளர்ப்பு பிராணிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. பலவகையான ராட்டினங்கள்,கம்பி வளைக்குள் கார்,பைக் சர்க்கஸ் மற்றும் தூரிகள் குழந்தைகள் ரயில் கப்பல் தூரி, என அழகாய் நடந்தது. பேரிக்காய்,கொள்ளேகால் மிட்டாய், சோழக்கருது சாப்பிடாமல் வரமுடியாது.


மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்வில் அடுத்த வருடம் ஆடிமாதமாவது வந்து கலந்துகொண்டு அருள்மிகு குருநாதர் அருள்பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தும்

அன்பன் குரு.பழ.மாதேசு

Friday, August 12, 2011


வலைப்பூ தொடங்கி வருடம் ஒன்றாகி விட்டது. ஜுலை 12 ல் தொடங்கி இன்றுவரை 75 இடுகைகள் உலகமெங்கிலும் 1036 பேர் வந்து சென்றது மகிழ்ச்சியே. ஆனாலும் எம் எழுத்து உங்களுக்கு பயன்படுகிறதா ???என்ற கேள்வி இடையறாது எம்மை துளைக்கிறது. எமது வலைத்தளம் தரமானதாக வேண்டுமென்ற ஆர்வத்தில் உங்களின் கருத்துரைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றேன். முடிந்தால் இன்ட்லி தமிழ் மணத்தில் ஓட்டிப்போட்டுட்டு போங்க, இறை சித்தத்தால் இன்னும் பல கோவில் வரலாறுகளும் படைக்க உங்கள் கருத்துரைகளே எம்மை வழிப்படுத்தும் வலிமைப்படுத்தும் என நம்பி (டிரிட்டா ? வலைப்பூவின் இரண்டாம் வருட கொண்டாட்டத்தில் கண்டிப்பாக அழைப்பு வரும் ) நட்புடன் குரு.பழ.மாதேசு

தீரன் சின்னமலை எனும் வரலாற்று காவியம்



மாவீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.

வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.

கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்."ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் " எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.


அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .

இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .

இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.


அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன். உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.

ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


அடுத்த தலைமுறைக்கு வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த இடங்களுக்கு உங்களால் முடிந்த நாட்களில் ஈரோடு வரும்போது சுற்றிக்காட்டலாமே?

Monday, August 8, 2011

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?

துணுக்கு எழுத்தாளர் ஆவது எப்படி?


ஜோக்,கவிதை,கதை எழுதுதும் திறமை பல பேருக்கும் இருந்தும் அதை எப்படி அனுப்புவது என தெரியாமல் இருப்பது தான் ஆச்சரியம் ,

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து திறமையை ஜோக் என்றால் ஒரு அஞ்சல் அட்டையில் முகவரி எழுதம் பக்கத்தில் எந்த வார இதழ்களுக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த வார இதழின் முகவரி இட்டு அதன் இடப்பக்கத்தில் உங்கள் முகவரி இட்டு அதன் பின்பு முழு அஞ்சல் அட்டையின் முழு அளவுள்ள பக்கத்தில் ஜோக் என தலைப்பிட்டு தெளிவாக எழுதி



குமுதம்,ஆனந்தவிகடனுக்கு அல்லது ஜோக் பிரசுரமாகும் வார இதழ்களுக்கு அனுப்பினால் உங்கள் ஜோக்குகளை சம்பந்தப்பட்ட வார இதழ் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானால் அந்த ஜோக்குக்கு பரிசும் மணியார்டரில் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.

அல்லது முழு வெள்ளைதாளை இரண்டாக கட் செய்து ஜோக் தலைப்பிட்டு கவரில் வைத்தும் அனுப்பலாம்.

கவிதைகளையும் மேற்கண்டவாறு அனுப்பலாம். ஒருபக்க கதைகளை அனுப்பும் போது முழு வெள்ளைதாழின் ஒருபக்கம் மட்டும் எழுதி வெள்ளைதாளின் பின்பக்கம் ஏதும் எழுதாமல் முகவரி மட்டும் எழுதி அனுப்பலாம்.

பெரிய கதைகளை அனுப்பும் போது 5 பக்கம் வருமாறு வெள்ளைதாளின் ஒருபக்கம் மட்டும் எழுதி தங்கள் படைப்புகளை அனுப்பலாம். தங்களுக்கு எழுத்து திறமை இருப்பதாக கருதினால் முதலில் அஞ்சல் அட்டையில் வாசகர் கடிதம் எழுதிப்பழகுங்கள் ,

பின்பு குடும்ப மலர் வாரமலர் போன்றவற்றில் ஜோக்,கவிதை, கதைகளை அனுப்புங்கள்.பின்னர் பெரிய வார இதழ்களுக்கு அனுப்புங்கள். அதற்கு முன் எந்த மாதிரியான ஜோக்,கவிதைகள்,பிரசுரமாகின்றன என்பதை கவனியுங்கள்.

பின்பு தொடர்ந்து முயற்சியுங்கள்.

உங்களுக்குள் ஓர் எழுத்தாளன் இருந்தால்
கண்டிப்பாய் வெளிப்படுவான்.

வாழ்த்துக்கள்.

Friday, August 5, 2011

சாலை விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்


வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விதிகள் :


அவசர உலகம் ., வாகனத்தின் பெருக்கம், இப்படி பல தடைகளை தாண்டி நாம் வீட்டை விட்டுச் சென்றால் திரும்பி வந்தால் போதும் என்கிற அளவில் சாலை விபத்துக்கள் நம் மனதை கரைக்கின்றன.



எத்தனையோ படித்த இளைஞர்களை சாலை விபத்துக்களில் பறிகொடுத்து மனித வளத்தை இழக்கலாமா?

சரி தனிமனிதனாக நம்மால் விபத்து ஏற்படுத்தாமல் எப்படிச் செல்வது ...?

செய்ய வேண்டியது :

1. வாகனத்தை எடுக்கும் போது டயரில் போதுமான காற்று ,எரிபொருள் உள்ளதா என பரிசோதிப்பது

2.ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டுவது

3.வாகனத்தின் இடப்புறம் வலப்புறம் திருப்பும் போது இன்டிக்கேட்டர்,கை சிக்னல் பயன்படுத்துவது.

4.முன்னால் செல்லும் வாகனத்தை முந்த நினைக்கும் போது நம் பின்னால் வரும் வாகனத்தை கண்ணாடியில் (side mirror ) கவனித்து முந்துவது

5.தரமான டயர் ,பிரேக் ஷுக்களை பயன்படுத்தல்

6.நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டிப் பழகி ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்வது

7.சாலைவிதிகள் போக்குவரத்து காவலர் சைகை சிக்னல்களை மதிப்பது, அறிந்து கொள்வது
8.மிதவேகம்

9.இன்சூரன்ஸ் எப்போதும் நடப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்வது

10.இரவு பயணத்திற்கு ஏற்றவாறு நல்ல தரமான வெளிச்சம் தரும்
பல்புகள்,பேட்டரிகளை பயன் படுத்துதல்


செய்யக்கூடாதது :

1.செல்போன் பேசியபடி பணிப்பது நம் கவனத்தை சிதறவைக்கும்

2 மதுபோதையில் பயணம் செய்வது

3. அதிகப்படியான எடை,நிர்ணயிக்கப்பட்ட நபர்களை விட அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டி செல்வது அல்லது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது

4.வாகன ஓட்டும்போது சாகசம் செய்வது

5.நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வது

6.அதிக ஒலி,ஒளியை பயன்படுத்துவது

7. சரியான தூக்கம் இல்லாமல் பயணிப்பது

8. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென எண்ணுவது

9.நீண்ட பயணம் ஓய்வு எடுத்துக்கொள்ளாத பயணம்

10.வாகனத்தை நிறுத்தும் போது இடப்பக்கம் ஒரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்துவது இப்படி செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் நிறைய இருந்தாலும் முக்கியமான வற்றை மற்றும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


ஓரே அடிப்படையான விஷயம் என்ன வென்றால் 40கி.மீட்டர் வேகத்தில் மிதமான வேகத்தில் பயணித்தால் கண்டிப்பாக சாலை விபத்து ஏற்படாது.

மெடிக்கிளைம், மெடிக்கேர் பாலிசிகளை எடுத்து வைத்துக்கொள்வதும், அறிந்து கொள்வதும் சாலச்சிறந்தது. நாம் பயணிக்கும் சாலையில் விபத்து ஏற்பட்டால் எல்லோரையும் போல் வேடிக்கை பார்க்காமல் 108 க்கோ ,அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கும் முடிந்தால் அடிபட்டவரின் வீட்டிற்கும் தகவல் தாருங்கள்.


எத்தனையோ மனித உயிர்கள் உரிய நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கிறார்கள்.

தனிமனிதனாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட உறுதி கொள்வோம்.

வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர்வோம்.

குத்தம் குறையிருந்தா குட்டி சொல்லுங்க.
நன்றி

அருள்மிகு தன்னாசி முனியப்பர் ஆலயம் ,பூதப்பாடி .அம்மாபேட்டை பவானி வட்டம்



அருள்மிகு தன்னாசி முனியப்பன் திருக்கோவில் பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் 5வது கி.மீட்டரில் பூதப்பாடி என்னும் சிற்றூரில் அமைந்த அழகான ஆலயமாகும்.



பூதப்பாடி சந்தையில் இருந்து பருத்தி பல தமிழகத்தின் பல ஊர்களுக்கும் செல்லும் இடமாகும்(சனிக்கிழமை அன்று ஊஞ்சப்பாளையத்தில் பருத்தி டெண்டர் விடப்படும்). பூதப்பாடியில் இருந்து சிங்கம்பேட்டை ( 1 கி.மீட்டர் ) செல்லும் வழியில் தன்னாசி முனியபன் சன்னதி உள்ளது.



கோவில் அருகே பிரமாண்ட ஸ்தலமரமும் பிரமாண்ட முனியப்பர் சிலைகளும் அலகரிக்கிறது. திருக்கோவில் உள்ளே மூலவராக தன்னாசி முனியப்பர் காட்சி தருகிறார் .



திருக்கோவில் பின் புறம் சப்த கன்னிமார் சிலைகள் உள்ளது.

ஆடிமாத இறுதியில் வருடாந்திர பூஜை பிரமாண்டமாக நடைபெறுகிறது.


நீங்களும் இப்பகுதிக்கு வந்தால்

அருள்மிகு தன்னாசி முனியப்பரை வந்து

தரிசனம் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துரைகளை எழுதுங்கள்.

நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...