எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.
Friday, August 29, 2025
உளவாளி என்பவர் யார் ..?
Saturday, August 23, 2025
கூகலூர் என்னும் அழகிய கிராமம்
கூகலூர்
தமிழ்நாட்டில் பல அழகிய ஊர்கள் இருந்தாலும் கூகலூர் ஒரு அழகிய கிராமம் என்பதில் அந்த ஊருக்கு பெருமைஅப்படி என்ன இருக்கிறது அந்த ஊரில் இன்று பார்த்தால் எங்கும் சுற்றி நெல் வயல்கள் பச்சை பசுமையான வயல்கள் நிரம்பிய ஊராகும். அந்தியூரில் இருந்து அத்தாணி கோபி செல்லும் வழியில் இந்த அழகிய கிராமம் உள்ளது. பல சினிமா படங்களின் சூட்டிங் இங்கு நடைபெற்றது உண்டு. பல கிலோமீட்டருக்கு இந்த அகன்ற பச்சை பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் பவானி ஆறு ஓடும் அழகும் இந்த இடத்தை மேலும் அழகாக ஆக்குகின்றது. இது ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்தாணி பிரிவு என்ற கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. அத்தாணியில் இருந்து கோபி செல்லும் வழியில் முதலில் வருவது சவுண்டபூர் பவானி ஆற்று குறுக்கு பாலம் அதன் பின்னேகடந்து சென்றால் கவுண்டபூர் கிராமம் அதற்கு அடுத்து கோபி வரை பச்சை பசேல் என நெற்களின் புல்வெளியும் அழகிய சாலையும் இந்த இடத்தை அழகாக்குகின்றது. இங்கு கூகலூர் கிராமமும் அமைந்துள்ளது.ஆக மொத்தம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பகுதியைக் காண மனம் இதில் லாய்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கூகலூர் பேரூராட்சிக்கு தென்கிழக்கில் 37 கிலோமீட்டரில் தொலைவில் ஈரோடு உள்ளது.
கூகலூர்ஆள்கூறுநாடு இந்தியாமாநிலம்தமிழ்நாடுமாவட்டம்ஈரோடுவட்டம்கோபிச்செட்டிப்பாளையம்
குறியீடுகள்
இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + ஊர் = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் கூகலூர் அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி ஆகும்
கூகலூர் என்ற பேரூராட்சி, வள்ளலார் குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது கூகலூர் கிராமம்.
கல்வி, ஒரு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் கூகலூர்.
நீர் வளம்
விவசாயத்திற்காக பவானி ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை (கொங்குத் தமிழ்) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் மஞ்சள், நெல்,கரும்பு,வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர். நீங்களும் இந்த பகுதிக்கு வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நன்றி
Friday, August 8, 2025
அந்தியூர் பர்கூர் மணியாச்சி பள்ளம் அழகிய தோற்றம்
மணியாச்சி பள்ளம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியின் மறைந்த அழகு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள மணியாச்சி பள்ளம் என்பது, இயற்கையும் சாகசமும் விரும்பும் பயணிகளுக்கு சிறந்த இடமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இது ஒரு காட்டாற்றின் பள்ளத்தாக்கு பகுதி, மழைக்காலத்தில் நீர்ப்பெருக்கு கொண்டு பசுமையாக மிளிரும் இப்பகுதி, கோடைக்காலத்தில் அமைதியான நடைபயணப் பாதையாக மாறுகிறது.
செல்லும் வழி
மணியாச்சி பள்ளம் என்பது அந்தியூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமரைக்கரை வந்து தாமரைகரை வனத்துறை அலுவலகத்தில் இருந்து இடது புறமாக கொங்காடை செல்லும் வழியில் மலைப்பாதையில் அமைந்துள்ளது. மணியாச்சி பள்ளம் செல்லும் வழியில் இடதுபுறம் தாளக்கரை என்ற கிராமமும், வலதுபுறம் தொள்ளி என்ற கிராமம் செல்லும் வழிஉள்ளது. அதை தொடர்ந்து கொங்காடை செல்லும் வழியில் பயணித்துக் கொண்டே இருந்தால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் மணியாச்சி பள்ளம் உள்ளது. 2016 முன்பு, மழைநீரின் பெருக்கால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், தற்போது பள்ளத்தின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் ஆண்டு முழுவதும் வாகனங்கள் எளிதில் கடக்க முடிகிறது. பள்ளத்தைத் தாண்டி மேலே சென்றால் ஒன்னகரை , தம்புரெட்டி, மற்றும் ஒசூர் , ஆலனை, கோவில் நத்தம், சின்ன செங்குளம் பெரிய செங்குளம் அணை போடு , கொங்காடை போன்ற மலைக் கிராமங்கள் பார்க்கூடியதாக உள்ளன.
இயற்கைச் சூழல்
இந்தப் பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், காட்டாற்றுகள் ஆகியவை இயற்கையின் உண்மை அழகை வெளிப்படுத்துகின்றன. பசுமை நிறைந்த மரங்கள், பறவைகளின் குரல்கள், மற்றும் சில நேரங்களில் காட்டுயானைகள், மான், புலி போன்ற விலங்குகளின் தடயங்கள் காணப்படும். இதனால் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் அதிகம் வருகை தருகின்றனர். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் இவ்விடத்தில் சென்று வருவது வனவிலங்குகள் பயத்திலிருந்து தப்பிக்கலாம்.
பாதுகாப்பு மற்றும் கவனிப்புகள்
மழைக்காலத்தில் காட்டாறு வெள்ளம் பெருகுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் பள்ளம் அருகே வாகன விபத்துகள், குறிப்பாக பேருந்துகள் பள்ளத்தில் சரிந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், காட்டுயானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் அதிகம் இருப்பதால், பயணிகள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
சுற்றுலா அனுபவம்
மணியாச்சி பள்ளம் ஒரு கடந்து செல்லும் இடம் மாதிரி தோன்றினாலும், அதைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகள் அதை ஒரு சிறிய சுற்றுலா இடமாக மாற்றுகின்றன. மலைக்காற்றின் குளிர்ச்சி, ஓடும் தண்ணீரின் சத்தம், பசுமையான சூழல் தாமரைக்கரை, பர்கூர், போன்ற அருகிலுள்ள இடங்களுடன் இணைத்து ஒரு நாள் பயணத் திட்டத்தில் இதைச் சேர்க்கலாம்.
முடிவுரை
மணியாச்சி பள்ளம், அந்தியூர் மலைப்பகுதியின் முக்கியச் சந்திப்புப் பகுதி மட்டுமல்ல, இயற்கையின் எளிமையான, ஆனால் ஆழமான அழகையும் கொண்ட இடம். மழைநாள்களில் பசுமையோடு கலந்த வெள்ளப்பெருக்கு, கோடையில் அமைதியான பாதை—இரண்டும் இப்பகுதியின் தனிச்சிறப்பு. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பயணம் செய்தால், இது மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் இடமாகும். குறிப்பு வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்குள் உள்ளே செல்லக்கூடாது, ரோட்டில் மட்டும் பயணிக்கலாம் மலைப்பகுதியில் நன்கு கார் ஓட்டக்கூடிய ஓட்டுனர்களை பயன்படுத்தி இந்த இடத்தை சென்று பாதுகாப்பாக வரலாம் நன்றி
Thursday, July 31, 2025
ஏழு தண்டு முனியப்பன் கோவில், கூடலூர்,ஊக்கியம்
சாம்ராஜ்நகர் மாவட்டம், அன்னூர் தாலுக்காவுக்கு உட்பட்ட கூடலூர் அருகே அமைந்துள்ள "ஏழு தண்டு முனியப்பன்" கோவில், கிராமப்புற மக்களின் ஆன்மீக நம்பிக்கைக்கும், பாரம்பரிய வழிபாட்டுக்கும் முக்கியமான தலமாக திகழ்கிறது .
எப்படி செல்வது : அந்தியூரில் இருந்து பர்கூர் மலை வழியாக கர்கே கண்டி 4 ரோடு (70 km) சென்று இடதுபுறம் திரும்பினால் 20 கிலோமீட்டர் தொலைவில் ஊக்கியம் கூடலூர் உள்ளது.
அங்கு இந்த திருக்கோவில் அமைந்துள்ளது. இது தமிழக கர்நாடக எல்லையில் உள்ள கோவில் ஆகும். மூலவர் முனியப்பர், சிவபெருமானின் ஒரு அம்சமாக கருதப்படுகிறார். முனி + ஈஸ்வரன் என்ற இரு சொற்களின் இணைவாக "முனியப்பர்" என்கிற பெயர் உருவாகியுள்ளது. இவரை கிராம தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் மக்கள் நம்பி வழிபடுகின்றனர்.
இயற்கையான மலைச் சூழலில் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ஆலயம், இந்த கோவிலில் இருந்து ஒரு ஏழு கிலோமீட்டர் தொலைவில் வேலம்பட்டி ,குட்டையூர், மட்டி மரத்தள்ளி, ஆகிய தமிழக எல்லை கிராமங்கள் அமைந்துள்ளன. அவசியம் வந்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் . நன்றி
Tuesday, July 29, 2025
அழகுன்னா சும்மாவா ? ஓர் உலகலாவிய அறிஞர்கள் கருத்தும் பார்வையும் ...!
பத்ரகாளியம்மன் திருக்கோவில் அந்தியூர் ஈரோடு மாவட்டம் Sri Pathrakaliyamman Temple Anthiyur
உள்ளது. நீங்களும் வந்து தரிசித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் இந்த பதிவில் இடுங்கள் நன்றி.
Saturday, July 26, 2025
🏛 கங்கைகொண்ட சோழபுரம் – சோழர் பேரரசின் பெருமை
கங்கைகொண்ட சோழபுரம் என்பது தமிழரின் வரலாற்று பெருமையை எடுத்துரைக்கும் சிறந்த இடமாகும். இது சோழர் பேரரசின் தலைநகராக இருந்தது. இதைப் பற்றிய முக்கிய தகவல்களை இங்கு காணலாம்:
🔸 அமைவிடம்:
- தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம்
- ஜெயங்கொண்டம் அருகிலுள்ள சிறிய கிராமம்
🔸 வரலாற்றுப் பின்னணி:
- ராஜேந்திர சோழன், தன் தந்தை ராஜராஜ சோழன் போன்று ஒரு புகழ்பெற்ற சாமர்த்திய மன்னன்.
- தனது வடநாட்டு யுத்த வெற்றிக்கு நினைவாக புதிய தலைநகரை அமைத்து, அதற்கு “கங்கைகொண்ட சோழபுரம்” என்றார்.
- இது சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் ஆட்சி மையமாக இருந்தது.
🔸 முக்கிய நினைவுச்சின்னங்கள்:
பிரமாணீஸ்வரர் கோவில்:
- பெரிய கோவில் போன்று, பாறையில் செதுக்கிய சிற்பங்களுடன் மிகுந்த அழகும் நுணுக்கமும் கொண்டது.
- சோழர் கட்டிடக் கலையின் சிறந்த உதாரணம்.
💧 நீர்த்தேக்கங்கள்:
- “சொட்டைய்மடம் பெருங்குளம்” உள்ளிட்ட பெரிய குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- நுட்பமான நீர்ப்பாசன அமைப்புகள் இருந்துள்ளன.
🔸 இன்றைய நிலை:
- இப்போது இது ஒரு வரலாற்று புகழ் மிக்க இடமாக திகழ்கிறது.
- UNESCO பாரம்பரியக்கழகத்தில் இடம் பெற்றுள்ளது.
- சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் பார்வையிடும் இடமாக உள்ளது.
📝 முடிவில்:
கங்கைகொண்ட சோழபுரம் என்பது:
✔️ தமிழ் மண்ணின் கலை, அறிவு, ஆட்சி திறனின் சான்று
✔️ பாரம்பரியத்தையும் பெருமையையும் உணர்த்தும் ஒரு பொக்கிஷம்
முடிவுரை : இந்த வருடத்தில் இரண்டு முறை இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன், சோழர்களின் கட்டிடக் கலை எவ்வளவு அழகானது என்பதை இந்த கோவில் பறைசாற்றும்,, திருக்கோவில் அழகாக சுற்றிலும் புற்களுடன் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது, சுற்றிலும் அழகிய கல்வெட்டுகளால் ஆன கற்களால் ஆன மிக உயர்ந்த கோபுரம், , என பார்ப்போரை வியக்க வைக்கும் அளவுக்கு இந்த கோவில் அமைந்துள்ளது,
இந்த கோவிலின் மூலவர் பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மிக அழகான ஒரு இடம். பார்த்து ரசித்து விட்டு ஒரு கமெண்ட் செய்யுங்கள் நன்றி. சில தகவல் உதவி : Thanks to Chat GPT