கூகலூர்
தமிழ்நாட்டில் பல அழகிய ஊர்கள் இருந்தாலும் கூகலூர் ஒரு அழகிய கிராமம் என்பதில் அந்த ஊருக்கு பெருமைஅப்படி என்ன இருக்கிறது அந்த ஊரில் இன்று பார்த்தால் எங்கும் சுற்றி நெல் வயல்கள் பச்சை பசுமையான வயல்கள் நிரம்பிய ஊராகும். அந்தியூரில் இருந்து அத்தாணி கோபி செல்லும் வழியில் இந்த அழகிய கிராமம் உள்ளது. பல சினிமா படங்களின் சூட்டிங் இங்கு நடைபெற்றது உண்டு. பல கிலோமீட்டருக்கு இந்த அகன்ற பச்சை பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் பவானி ஆறு ஓடும் அழகும் இந்த இடத்தை மேலும் அழகாக ஆக்குகின்றது. இது ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அத்தாணி பிரிவு என்ற கிராமத்தில் இருந்து தொடங்குகிறது. அத்தாணியில் இருந்து கோபி செல்லும் வழியில் முதலில் வருவது சவுண்டபூர் பவானி ஆற்று குறுக்கு பாலம் அதன் பின்னேகடந்து சென்றால் கவுண்டபூர் கிராமம் அதற்கு அடுத்து கோபி வரை பச்சை பசேல் என நெற்களின் புல்வெளியும் அழகிய சாலையும் இந்த இடத்தை அழகாக்குகின்றது. இங்கு கூகலூர் கிராமமும் அமைந்துள்ளது.ஆக மொத்தம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தப் பகுதியைக் காண மனம் இதில் லாய்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கூகலூர் பேரூராட்சிக்கு தென்கிழக்கில் 37 கிலோமீட்டரில் தொலைவில் ஈரோடு உள்ளது.
கூகலூர்ஆள்கூறுநாடு இந்தியாமாநிலம்தமிழ்நாடுமாவட்டம்ஈரோடுவட்டம்கோபிச்செட்டிப்பாளையம்
குறியீடுகள்
இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + ஊர் = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் கூகலூர் அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி ஆகும்
கூகலூர் என்ற பேரூராட்சி, வள்ளலார் குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது கூகலூர் கிராமம்.
கல்வி, ஒரு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் கூகலூர்.
நீர் வளம்
விவசாயத்திற்காக பவானி ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை (கொங்குத் தமிழ்) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் மஞ்சள், நெல்,கரும்பு,வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகின்றனர். நீங்களும் இந்த பகுதிக்கு வந்தால் சுற்றிப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நன்றி
No comments:
Post a Comment