📜 திருக்குறள்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
📘 பொருள்
யார் சொல்கிறார்கள் என்பதைக் பொருட்படுத்தாமல்,
உண்மையான அர்த்தத்தை காண்பதே அறிவாகும்.

Thursday, September 25, 2025

சாலை ஹிப்னாசிஸ் என்பது பற்றி தெரியுமா ?

நீங்கள் சாலையில் அதிக நேரம் பயணிப்பவராகவோ டிரைவராகவோ இருந்தால் கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்காகதான்.

"வணக்கம் நண்பர்களே,
இன்று நம்ம வாழ்க்கையை நேரடியாகத் தொடும், ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசலாம். அதுதான் – சாலை ஹிப்னாஸிஸ்.

நீண்ட நேரம், குறிப்பாக 2 மணி நேரத்துக்கும் மேலாக நெடுஞ்சாலையில் காரோ, லாரியோ ஓட்டினால், நம் மூளை ஒரு விசித்திரமான நிலைக்கு மாறிவிடும். இதைத்தான் Highway Hypnosis அல்லது தமிழில் சாலை ஹிப்னாஸிஸ் என்று சொல்கிறார்கள்.

இது என்னவென்றால் – ஓட்டுநரின் கண்கள் திறந்திருக்கும். கையால் ஸ்டீரிங் பிடித்திருப்பார். காலால் ஆக்சிலேட்டரும், பிரேக்கும் அழுத்துவார். ஆனால்... மூளை ரோட்டை கவனிக்காமல் போய்விடும். கண்கள் பார்க்கும் விஷயத்தை, மூளை பதிவு செய்யாது.

அதனால் தான், சில சமயம் ஓட்டுநர் விபத்தில் சிக்கும்போது, 'கடைசி 10–15 நிமிடம் எனக்கு நினைவே இல்லை' என்று சொல்வார்கள்.
அந்த நேரத்தில் அவர் 'auto-pilot mode'ல தான் ஓட்டிக்கொண்டிருந்தார்.

இது ஏன் நடக்கிறது?

ஒரே மாதிரி நேராக நீளும் நெடுஞ்சாலை சாலை,

தொடர்ந்து ஒரே வேகத்தில் பயணம்,

உடல் சோர்வு, தூக்கமின்மை,

இரவு நேர ஓட்டம்…
இவையெல்லாம் சேர்ந்து மூளையை சலிப்பில் ஆழ்த்தும்.
மூளை வேலை நிறுத்திக்கொண்டால், விபத்து நிச்சயம்.

அதிலும் ஆபத்து என்ன தெரியுமா?
சாலை ஹிப்னாஸிஸில் சிக்கிய ஓட்டுநரால், முன்னால் ஓடும் வாகனத்தின் வேகத்தை மதிப்பிட முடியாது. வேகமாகப் போகிறோமா, மெதுவா போகிறோமா என்று கூட உணர முடியாது.
அதனால் தான் பல பெரிய விபத்துகள், மணிக்கு 120–140 கிலோமீட்டர் வேகத்தில் தான் நடக்கும்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
மிகச் சுலபம்:

ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாகனத்தை நிறுத்தி, 5–10 நிமிடம் ஓய்வு எடுங்கள். காரிலிருந்து இறங்கி இரண்டு நிமிடம் நடந்துவிடுங்கள்.

ஒரு டீ அல்லது காபி குடித்து மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

சாலையில் இருக்கும் சின்னங்கள், கிலோமீட்டர் கற்கள், பக்கத்தில் கடந்து செல்லும் வாகனங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

பயணிகள் இருந்தால் அவர்களுடன் பேசுங்கள். இல்லையென்றால் லைட் மியூசிக் கேட்கலாம்.

மிக முக்கியம் – தூக்கம் வந்தால் எப்போதும் ஓட்டவே கூடாது. சற்று நேரம் தூங்கி ஓய்வு எடுத்து தான் தொடர வேண்டும்.

நண்பர்களே, சாலை ஹிப்னாஸிஸ் என்பது ஒரு உண்மையான விஞ்ஞான விளக்கம். கண்கள் திறந்திருக்கும், ஆனால் மனம் மூடியிருக்கும் நிலை. அந்த நேரத்தில் வாகனம் ஓட்டுவது, நம்மையும் நம் குடும்பத்தையும், நம் பயணிகளையும் விபரீதத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கு சமம்.

ஆகையால், பாதுகாப்பு முதன்மை. சாலையில் போகும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக – ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஓய்வு எடுங்கள், சோர்வின்றி வாகனம் ஓட்டுங்கள்.

பாதுகாப்பாக இருங்கள், பாதுகாப்பாக ஓட்டுங்கள். நன்றி!" இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள்  நண்பர்களுக்கு, பகிருங்கள். அவர் வாகன  ஓட்டுபவராக இருந்தால்  கண்டிப்பாக பயன்படும்  . நன்றி


No comments:

எனது இடுகை பதிவுகள்

பைகாரா நீர்வீழ்ச்சி pykara Dam@ Reservoir சுற்றுலா தளம்