திருவள்ளுவர் திருக்குறள் அறத்துப்பால் கடவுள் வாழ்த்து 4 ஆம் குறள்
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."
விளக்கம்:
இறைவன் விருப்பு – வெறுப்பு அற்றவர்.
அவரின் அடிகளை வணங்குபவருக்கு எந்தக் காலத்திலும் துன்பமும் இல்லை.
கதை: ஒரு ஏழை விவசாயி ராமன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார் , அவர் இடைவிடாது இறைவழிபாடு செய்யக்கூடிய ஒருவர். ஆனால் அவருக்கு வறுமை ஒரு குறையாகவே இருந்து வந்தது. ஒரு நாள் அந்த ஏழை விவசாயி வசிக்கும் வீட்டின் அருகே ஒரு சன்னியாசி சென்று கொண்டிருந்தார். இந்த ஏழை விவசாயி அவரிடம் ஐயா இளம் வயது முதலே இறைவனின் வேண்டி வணங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னிடம் போதுமான செல்வம் இல்லையே, என்று கூறி வருந்தினார். அதற்கு செல்வம் மட்டுமே உயர்ந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயா, நீ நிம்மதியாக உறங்குகிறாயா என்று கேட்டார் ஆமாம் என்று அந்த ஏழை விவசாயி சொன்னார், மூன்று வேலை உணவும் தங்குவதற்கு வீடும் உள்ளதா என்று கேட்டார், எல்லாம் இருக்கிறது நிம்மதியாக இருக்கிறேன், நன்றாக இருக்கிறேன் என்று அந்த ஏழை விவசாயி பதில் சொன்னார். இதைவிட உயர்ந்த செல்வம் ஒரு மனிதனுக்கு தேவையில்லை. உடல் நலனும் மன நிம்மதியும் மனிதனுக்கு உயர்ந்த செல்வம். அதைக் கொடுத்த இறைவனுக்கு என்றும் நன்றி சொல்லிக் கொண்டு இரு என்று சன்னியாசி கூறினார். அப்போதுதான் ஏழை விவசாயிக்கு புரிந்தது , அவருக்கு நன்றியை சொல்லி இறைவனை அனுதினமும் வணங்கியதால் தான் இந்த நிம்மதி என்ற செல்வத்தை அவர் கொடுத்துள்ளார் என்று மனநிறையுடன் கிளம்பினார். குறளின் சிறப்பு விளக்கம் திருவள்ளுவர் இறைவன் ஏன் விருப்பு வெறுப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தினார் ? விருப்பு வெறுப்பு இரண்டையும் கடந்த நிலை என்பது ஒரு அழகிய உயர்ந்த நிலை கடவுள் தன்மை, சமநிலை தன்மை என்றும் கூறலாம். அப்படிப்பட்ட உயர்ந்த இறைவனின் அடிகளை வணங்குவோர்க்கு துன்பமில்லை என்பதை திருவள்ளுவர் மிக நுட்பமாக இந்த குரலில் விளக்கியுள்ளார்.
இக்கதை நமக்குச் சொல்லும் பாடம்:
இறைவனை நம்பி பின் தொடர்ந்து அவர் அடிகளை பின்பற்றி வாழ்பவர்க்கு
எப்போதும் துன்பம் அணுகாது. என்பது ஆகும் .
சரி நண்பர்களே மீண்டும் அடுத்த ஒரு நல்ல குறளுடன் சந்திப்போம் நன்றி
No comments:
Post a Comment