மாசிமாதம் என்றாலே சிவராத்திரி சைவ பெருமக்களால் விரும்பி
வணங்கப்படுகின்ற வழிபாடாகும் . சற்றே பின் நோக்கி புராணத்திற்கு
செல்வோம் .
பார்வதி ஒரு முறை சிவனின் கண்களை விளையாட்டாக தம்
திருக்கரங்களால் மறைக்க உலகமே இருண்டு விட சிவன் தன் நெற்றிக் கண்ணை திறந்து உலகத்திற்கே ஒளி கொடுத்த இனிய நாளே மகா சிவராத்திரியாகும் .
ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரிகள் வந்தாலும் மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் சிவனை மனதில் வைத்து தியானித்தால் நம் துன்பங்கள் தூர ஓடிவிடுமென்பது உறுதி. அந்த வகையில் வருகிற 10.03.2013 ஆம் தேதி வருகிற ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது.
இந்த இனிய நாளில் விரதமிருந்து அன்றைய இரவில் கண்விழித்து சிவாலயங்களில் இறைவனுக்காக நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்து கொள்வோர்க்கு தரித்திரம் நீங்கி செல்வவளம் மங்கலம் உண்டாகும்.
மாசி மாதத்தில் வருகிற மகா சிவராத்திரியில் சிவனை வணங்குவது வருடம் முழுவதும் சிவ வழிபாடு செய்வதற்கு நிகரானதாக கருதப்படுகிறது.
சிவராத்திரி விரதமென்பது மாலை 6.00மணிமுதல் அடுத்த நாள்
காலை 6.00மணி வரை சிவாலயத்தில் நடைபெறும் 4 கால பூஜையில் கலந்து கொண்டு "ஓம்நமச்சிவாய" எனும் பஞ்சாட்சர மந்திரத்தை தியானித்து விரதமிருப்பதே ஆகும் .,,,
சிவராத்திரியில் மிக விஷேசமான நேரமாக இரவு 11.30 மணி முதல்
நள்ளிரவு 1.00 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும் . நம்மிடம் பணம்
இல்லையே அன்னதானம் செய்ய முடியவில்லையே என்றெல்லாம் கவலைப்படாதீர்கள் .
10 ரூபாயில் வாங்கி அன்றைய தினம் அளிக்கிற வில்வத்திலும் ,1 லிட்டர்
பசும்பால் அபிஷேகத்திலேயே சிவபெருமான் மிகுந்த திருப்தி கொள்வார் .அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல.
ஆழ்ந்த பக்தியை மட்டுமே .
முடிவுரை :
இன்றைய நாட்களில் மக்கள் பக்தியுடன் மட்டுமே கலிகாலத்தை
கடத்தியாக வேண்டுமென்பது வாரியார் பெருமானின் வாக்கு . ஆன்மீக வழிபாடுகள் எல்லோர்க்கும் வர எங்கும் அமைதி நீடிக்கும் .
ஆதலால் ஆழ்ந்த சிவபக்தியை
மேற்கொள்வோம் . மறவாது 10.3.13 ஏதேனும் ஓர் சிவாலயத்தில்
சிவபெருமானுடன் கலந்திருப்போம் .
'' ஓம் நமச்சிவாய"
பதிவின் நீளம் கருதி முடிக்கிறேன் நன்றி.

1 comment:
சிறப்பான ஏற்பாடு மாமனாரின் வீட்டில் நடக்கிறது... தகவல்களுக்கு நன்றி...
Post a Comment