ஸ்ரீ தோபா சுவாமிகள் துறவறம்
சிவனயும் தம் குரு திருஞானசம்பந்தரையும் நினைத்து துறவறம் பூண்டார். பல சிவத்தலங்கள் சுற்றினார் .ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார புருஷர் ஆவார் . ஒருமுறை பட்டினத்தார் ஜீவசமாதியடைந்த திருத்தலமான திருவெற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்திருந்தார் .
அந்த தெருவில் போவோர் வருவோர் பாவங்களை மணக்கண்ணால்
கண்டு " இதோ நாய் போகிறது " மற்றொருவர் கத்துவதை கண்டு பேய்,கழுதை
கத்துகிறது எனக்கூறிக்கொண்டு இருக்க , அங்கிருந்தவர்கள் தோபா சுவாமிகளை ஆச்சர்யர்த்துடன் பார்த்துக்கொண்டு இருக்க ,
அவ்வழியே ஸ்ரீ வடலூர் இராமலிக்க அடிகள் வந்தார் . அப்போது தோபா சுவாமிகள் அவரைப்பார்த்து இதோ "மனிதர் வருகிறார் " எனக்கூற இதைக்கேட்டு அருகில் உள்ளவர்கள் திகைத்து விளக்கம் கேட்க மற்றோரெல்லாம் மனித உருவில் மிருகங்கள் இவர் மட்டுமே மனித
உருவில் மகான் எனக்கூறினார் ..
தோபா சுவாமிகளை சித்தர் என்பதை தம் சக்தியால் அறிந்து அவரிடம் அருகே அமர்ந்த ஸ்ரீ வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள் சந்தோஸமாக தோபா சுவாமிகளிடம் பேசி கிளம்பினார் .
அப்போது தோபா சாமிகளை காட்டி ஒருவர் " இவர் யாரென வினவ " இவரும் நானும் ஒன்றே என்னை வணங்குவது போல இவரையும் வணங்கலாம் , இவர் துணிகளை துறந்த நிர்வாண அவதார புருஷர் ,நான் வெண்ணிற ஆடைகளை அணிகிறேன் . இது மட்டுமே எங்களுக்குள்ள வித்தியாசம் எனக்கூறி பயணித்தார் . .
ஸ்ரீதோபாசுவாமிகளின் சித்துக்கள் :
ஒரு நாள் முகமதியர் வசிக்கும் வீதி வழியே கோவணமற்று நிர்வாணமாய் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதைபார்த்த முஸ்ஸீம் அன்பர் இவர் சித்தர் என அறியாமல் தன் வேலைக்காரனை அனுப்பி தோபா சுவாமிகளை துரத்தச்சொன்னார் .
உடனே ஓர் கோணூசியை தோபா சுவாமிகளை மீது
வேலைக்காரன் விட்டெறிந்தான். அது தோபா சுவாமிகள் மீது படாமல் மீண்டும் விட்டெறிந்த வேலைக்காரன் வயிற்றில் வந்து குத்தியது. ஊசியை
பிடுங்கமுடியாமல் அலற அப்பகுதி முகமதிய அன்பர்கள் கூடி விபரம் அறிய
எல்லோரும் இவர் தெய்வீகத்தன்மை கொண்ட சித்தர் என அறிந்தனர் .
பின் ஊசியை விட்டெறியச்செய்த முகமதிய அன்பர் தோபா சுவாமிகள் மேல் பற்றுகொண்டு அவர் பெயராலேயே "தோபா மசூதி " ஒன்றை நிறுவியதாக வரலாறு. சென்னையில் இன்றும் தோபா மசூதி என காட்சியளிப்பதே இதற்கு சான்றாகும் .
இப்படி பல சித்துகள் செய்த தோபா சுவாமிகளுக்காக பக்தர்கள் கூடி " தோபா சுவாமிகள் பரிபாலன சங்கம் "ஒன்றை சென்னை மயிலாப்பூரில் நிறுவினர் . வேளச்சேரி என்ற ஊருக்கு சென்று சிதம்பரம் சுவாமிகளுக்கு ஞான திருஷ்டி வழங்கினார் .
ஓர் முறை காவாலாளி ஒருவன் தோபா சுவாமிகளை ஏளனம் செய்து கையை ஓங்கிட கை கட்டையாகி செயல்படாமல் நின்று போனது. தான் அதிகாரபோதையால் செய்த இழிசெயலை மன்னிக்குமாறு வேண்ட அந்த காவலாளிக்கு மன்னிப்பு அளித்து கைகளை
சரிசெய்தார் தோபா சாமிகள் .
தோபா சுவாமிகளின் மகிமை சித்துக்கள் 3 ஆம்
பாகத்தில் தொடரும் நன்றி
No comments:
Post a Comment