sri uppuliyappan temple ,kumpakonam
தேவுநீ எனச்சார்ந்தேன் ஒப்பிலி யப்பா தெளிமனம் , மேவுசீர்
ஒளிவிளக்கே, விண்ணகர் விளங்கி,யோங்கும் கோவேயென்ஆவிக்கோர் கொழுகொம்பே, வினைமா சகல
பூவேகொண் டேத்திப் புனிதம்பெற அருள்வாய் எந்தையே
மூலவர் :ஸ்ரீ உப்பிலியப்பன் ( பெருமாள் )
தாயார் : பூமாதேவி
உப்பிலியப்பன் திருக்கோவில் மற்றும் ஊர் திருநாகேஷ்வரத்தின்
தென்பகுதியில் அமைந்துள்ளது. அருகே தெற்கில் காவிரியின் கிளைநதியாகிய நட்டாறு ,கீர்த்திமான் ஆகியவை ஓடுகின்றது.
108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோவில் தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திலிருந்து கிழக்கே 6 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் இத்திருத்தலம் திருவிண்ணகர் என அழைக்கப்படுகிறது .
திருவிண்ணகர் என்றால் மார்க்கண்டேய சேத்திரம் என அழைக்கப்படுகிறது.
திருக்கோவில் காலம்:
1000முதல் 2000ஆண்டுகால பழைமையான திருக்கோவிலாகும் .
ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம் :
நம்மாழ்வார் ,
திருமங்கையாழ்வார் .
பொய்கையாழ்வார்
பெரியாழ்வார்
ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .
ஸ்தல வரலாறு :
திருமாலின் திருவுளப்படி திருமகள் துளசிவனத்தில் பெண் குழந்தையாக
தோன்றினார் . மார்க்கண்டேய முனிவர் அந்த தெய்வீக குழந்தையை எடுத்து வந்து வளர்த்துக்கொண்டு இருந்தார் .
பூமி தேவி என்ற பெயரோடு அக்குழந்தை முனிவர் வீட்டில் வளர்ந்து திருமண வயதை எட்டியது. அப்போது மார்க்கண்டேய முனிவரும் தம் குழந்தைக்காக வரன் தேடினார் .
ஒருநாள் ஸ்ரீநாராயாணப்பெருமான் அந்தணர் உருவத்தில் முதியவராக தோற்றம் மாற்றி மார்க்கண்டேய முனிவர் வீட்டுக்கு சென்று பெண் கேட்டார் . முனிவர் வயதான உங்களுக்கு எம் இளம்பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பேன் என்று கலங்கி வீட்டுனுள் சென்றார் . அங்கிருந்த பூமி தேவியிடம் பெண் கேட்டு முதியவர் வந்ந விபரம் சொன்னார் .
பூமிதேவி தாம் முதியரை திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் . வீட்டின் வாயிலில் காத்திருந்த அந்தணர் ஸ்ரீ நாராயணப் பெருமான் என அறிந்திராத மார்க்கண்டேய முனிவர் தமக்கும் தம் மகளுக்கும் உங்களை திருமணம் செய்ய விருப்பமில்லே எனக்கூறினார் .
அந்தணராக வயதானவராக இருந்த பெருமாளோ " தாங்கள் பெண் தரவில்லை எனில் இங்கேயே உயிர் துறப்பேன் " எனக்கூற மார்க்கண்டேய முனிவர் அதிர்ந்து வீட்டினுள் சென்று தியானத்தில் அமர்ந்தார் .
"நாராயணா எமக்கு ஏன் இந்த சோதனை .. ! என்னை காத்திடுங்கள் என வேண்ட மார்க்கண்டேய முனிவர் முன்னே ஸ்ரீ நாராயணப்பெருமானே எழுந்தருளி காட்சி தந்தார் . அந்தணராக முதியவராக காட்சி கொடுத்தது தாமே எனக்கூறி பூமி தேவியை எமக்கு திருமணம் செய்து தருமாறு கூறினார் .
அவ்வாறே திருமணமும் நடைபெற்றது . மார்க்கண்டேயர்
வேண்டிய வரத்தின் படி இத்தலத்திலேயே எழுந்தருளி இருக்குமாறு வேண்டினார்..
அவ்வாறே ஸ்ரீ நாராயணரும் இசைந்தார் . திருமால் விண்ணகரில் இருந்து
துளசி வனத்தில் எழுந்தருளியதால் இத்திருத்தலம் திரு விண்ணகர் எனப்புகழ்
பெற்றது. இங்கு வேண்டும் பக்தர்கள் திருமணம் உள்ளிட சுபகாரியங்கள் உடனே நடைபெறுமென்பது ஜதீகமாகம் .
திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 முதல் மதியம் 1.00 மணிவரை
மாலை 5 .00 மணிமுதல் இரவு 9.00 வரை ஆகும்
. முடிவுரை :
திருமாலுக்குரிய விஷேச நாட்கள் சிறப்புடன் பூஜை
நடைபெறுகிறது. 108 வைணவத்திருத்தலங்களில் உப்பிலியப்பன் திருக்கோவிலும்ஒன்றாகும் .
பழங்கால புராணச்சிறப்புமிக்க ஒப்பிலிப்பன் திருக்கோவில்
தரிசனம் பார்த்து விட்டு கருத்துரையிடுங்கள் .
ஓம் நமோ நாராயண நமஹ. நன்றி
No comments:
Post a Comment