SRI THOBA SWAMY
ஸ்ரீ தோபா சுவாமிகள்
தொண்டை நாட்டில் வாழ்ந்த அற்புத ஞான சித்தராவார் .
வேலூரை அடுத்த சைதாப்பேட்டையில் கி.பி 1850ஆம் ஆண்டில் ஜீவசமாதியான மகானாவார் .
ஸ்ரீ தோபா சுவாமிகளின் இளமைக்காலம் :
திருச்சியில் வோளாளர் குலந்தில் சிவநாதப்பிள்ளைக்கும் ,சிவகாமி அம்மைக்கும் இராமேஷ்வரத்தில் அருள் புரியும் ஸ்ரீ இராமலிங்கநாதரை வேண்டி பிறந்த இராமலிங்கம் என்னும் திருக்குழந்தையே தற்போது ஞான சித்தர் ஸ்ரீ தோபா சுவாமிகள் ஆவார் .
சிறு வயதில் ஆங்கிலேய காலாட்படையில் அரசுபணி செய்து வந்த தோபா
சுவாமிகளின் தாய் தகப்பனார் வயது மூப்பில் இறந்து விட தோபா சுவாமிகள்
எனப்படும் ராமலிங்கத்தின் நிலைகண்டு தமது காலாட்படையில் தோபா
சுவாமிகளையும் இணைத்துக்கொண்டனர் .
ஸ்ரீதோபா சுவாமிகள் திறமையை கண்டு வியந்த ஆங்கில அரசு அவரை சென்னைக்கு அனுப்பியது. இடையறாது சிவபக்தியும்,முருகரின் மேல் பற்று கொண்டவராய் இருந்தார் .
ஸ்ரீ முருகப்பெருமானின் மேல் கொண்ட பக்தியினால் "அருட்பா" என்ற நூலைப்பாடியுள்ளார் . திருஞான சம்பந்தர் குருவாக ஏற்றல் : குருவருள் பெறாமல் யோக கலையிலும்,சிவபக்தியிலும் தெளிவ பெற முடியாதென உணர்ந்த தோபா சுவாமிகள் குருவை தேட அவர்க்கு எண்ணத்தில் தோன்றியது திருஞான சம்பந்தராவார் .
தோபா சுவாமிகள் திருஞான சம்பந்தரை நினைத்து தியானிக்கலானார் . ராமலிங்கம் எனப்படுகிற ஸ்ரீ தோபா சுவாமிகளுக்கு திருஞான சம்பந்தர் காட்சியளித்து "உலகில் உள்ளவற்றில் சிவம் மட்டுமே உண்மையானது அதைப்பின்தொடர்க" என அருளினார் .
திருஞானசம்பந்தரின் குரு அருள் பெற்ற தோபா சுவாமிகள் ஆனந்தமடைந்தார் ..இந்நிலையில் ஆங்கில காலாட்படையிலிருந்து எதிரி நாட்டுடன் போர் புரிய அழைப்பு வர, பணியில் இணைந்த இராமலிங்கம் என்கிற தோபா சுவாமிகள் எதிரி நாட்டுடன் போர் புரிந்த பல அற்புதங்கள் செய்து போரில் தாம் இணைந்த ஆங்கில அரசுக்காக வெற்றி பெற்று தந்தார் .
பல அற்புதங்களை செய்து வெற்றி பெற வைத்த இராமலிங்கனாரை ஆங்கிலேய அதிகாரிகள் தேடினர் . அமைதியாய் ஓர் இடத்தில் அமர்ந்து தியானத்தில் "தோ " "பா " "தோ" "பா" என்ற வார்த்தைகளை மந்திரமாக உச்சரித்து வந்தார் . எதிரிப்படை வீழ்ந்ததை தளபதி இராமலிங்கம் (தோபா சுவாமிகளிடம் ) விளக்கினார் .
இங்கு நடந்தது இறைவனின்
திருவிளையாடல் இதைக்கண்டு வியந்த ஆங்கிலேய தளபதி இவர் சாதாரணமனிதர் அல்ல தெய்வீகம் பொருந்திய சித்தர் எனக்கண்டு தளபதியார் வணங்க படைவீரர்கள் அனைவரும் விழுந்து வணங்கினார் .
அன்றுமுதல் இராமலிக்கம் எனப்படுகிற ஞான
சித்தர் ஸ்ரீதோபா சுவாமிகள் என அழைக்கபடுகிறார் .நாமும் ஸ்ரீ தோபா
சுவாமிகள்கள் என்றே பார்ப்போம் .
தோபா சுவாமிகள் விளக்கம் : "தோடுடைய"
என்ற வார்த்தை சிவபெருமான் திருஞான சம்பந்தருக்காக அருளியது. திருஞானசம்பந்தரைக் குருவாக கொண்ட தோபா சுவாமிகள் தோடுடைய என்ற பாடலையே ( or)பா வையே ஞான மந்திரமாக உச்சரித்துக் கொண்டதால் தோபா சுவாமிகள் என்று அழைக்கபடுகிறார் ..
தொடர்ச்சியை தோபா சுவாமிகள் வரலாறு பதிவு 2 காண்க

No comments:
Post a Comment