Friday, July 8, 2016

மரங்கள் அடையாளங்கள், TREE IDENTIFICATION

மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் இனிய வேளையில் மரங்களின் அடையாளங்கள் பதிவிடலாம் என ஆர்வமாக உள்ளேன்.நீண்ட காலங்களுக்கு பின் பதிவு எழதலாம்  என எண்ணியுள்ளேன்.மூலிகை பற்றிய பதிவுகள் இருக்கும்.தொடர்ந்து பயணிப்போம்,நன்றி

Tuesday, December 1, 2015

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி


தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.                         ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

Wednesday, July 22, 2015

அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி

சேலத்தில் பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் சித்தர்களை தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாதார் ஆன்மீக ஸ்தலமாக விளங்குவது அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி ஆகும் .               சேலத்தில் பழைய சூரமங்கலம் அருகிலும்,சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து அரை கிமீ தொலைவில்  திருவாக்கவுண்டனுாரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் ஜீவசமாதி  அமைந்துள்ளது.                                                சுவாமிகள் பற்றி.    :     கரூர் ஜமீன் வம்சாவழியில் 1859  ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .தம்மை பைத்தியம் என்று சுவாமிகள் கூறிக்கொள்வாராம், பக்தர்கள் இவரை அப்பா என்றே அழைத்தார்கள். ஆகையால் அப்பா பைத்தியம் என பக்தர்கள் அழைத்தார்கள்.12.2.2000  ஜீவசமாதி:   தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆனார்கள்... நன்றி

Monday, June 22, 2015

அம்பிகை மாயம்மா ஜீவசமாதி


சித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்களை தரிசிக்க சேலம் வந்ததோம்.                                                                                                                                                                                                                                           மாயம்மா பற்றி விபரங்களை தேட 1920 முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வாழ்ந்த அம்பிகை அம்சம் கொண்டவர், பெண் சித்தராக வாழ்ந்து பல அற்புதங்கள்  செய்தவர் என்பதை அறிந்தேன்.                                                                                                                                செல்லும் வழி   :                                                    சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா ஸ்டுடியோ அருகில்,  சேலம் சட்டக்கல்லூரி எதிரில் மாயம்மா ஜிவசமாதியாக அமைந்து அருள் பாலிக்கிறார்.9.2.1992 ஆம் நாள் மாயம்மா ஜீவசமாதியான நாளாகும்.                                                                                                                                                                                        பல மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு சென்ற மாதம் மாயம்மாவை தரிசனம் செய்தவுடன் மனதில்  அமைதி உண்டானதாக உணர்கிறேன். அம்பிகை அம்சமான தாய் மாயம்மாவை வணங்கி எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

Friday, May 15, 2015

கிச்சி குத்து மாரியம்மன் திருக்கோயில்

அண்மையில் ஓர் சிறப்பான ஓர் ஆலயத்தை தரிசித்து வந்தேன்.சக்தி அம்சமான
இந்த அழகிய திருக்கோயில் மூலவராக கிச்சி குத்து மாரியம்மன்
அடைந்துள்ளார். இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்
கொள்ளேகால் வட்டம் மாட்டெலி அருகில் சுள்ளுவாடி கிராமத்தில்
அமைந்துள்ளது.இது அந்தியூர்-பர்கூர்-கர்கேகண்டி - கொள்ளேகால் வழியில்
கர்கேகண்டீ 4 ரோட்டில் இருந்து 3கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது.தரிசித்து வாருங்கள்.நன்றி

Thursday, November 20, 2014

சைவ உணவின் மேன்மை

சித்தர்களும் மகான்களும் , உயிர்கொலையை அறவே வெறுத்தார்கள் . ஓர்
உயிரைக்கொன்று தின்பதால் அதன் உயிர்வலி அதை சாப்பிடும் மனிதர்களுக்கு
நோயாக தாக்குவதும் உண்மையே . உயிரைக்கொல்லாது சைவ உணவு சாப்பிடுபவர் பலர் நீண்ட ஆரோக்கியத்துடன் காண முடிகிறது . ஆனால் இன்றோ குடியும் அசைவ உணவும் மனிதனின் அன்றாட தேவையாகிவிட்டது .

45 வயதிற்குள்ளாகவே கொடிய நோய்கள் தாக்குவதற்கு அசைவ உணவை அதிகம் புசிப்பதே காரணமாகும் . அப்ப சைவம் சாப்பிட்டால் நோயே வராதா என விதண்டாவாதம் பேசக்கூடாது .சித்தர்கள் உப்பை வறுத்தும் புளியை சுட்டும் சாப்பிட சொன்னார்கள் . நவநாகரீக உலகில் நுழைந்து பழையன எல்லாம் தொலைத்து விட்டோம் .

 உண்ணும் உணவே விஷமென எல்லோரும் பேசுவதை கேட்க முடிகிறது . இன்றைய சூழலில்எல்லாமும் விஷமாகிவிட்டதென பழமையை தேடி ஓடுகிறார்கள் மக்கள் . இது நல்ல விஷயம் கி.பி 1500 முன் தொலைத்த நம் பாரம்பரியத்தை சித்தர்கள் எழுதிய புத்தகங்கள் , சித்தர்கள் தேடல் என இன்றைய மக்களின் சித்தர்களின் தேடல்மிக நல்ல விஷயம் .

 சித்தர்கள் கலையில் ஜோதிடம் ,மாந்திரிகம் ,மருத்துவம்
என எதைப்பயின்றாலும் அசைவ உணவு தவிர்த்தால் சித்தர்கள் கலையில்
மேன்மையுறுவது எளிது.




 கங்கையில் படிந்திட்டாலும் கடவுளை பூசித்தாலும்
மங்குற்போல் கோடிதானம் வள்ளலாய் வழங்கினாலும்.
சங்கையில்லாத ஞானசாத்திர முணர்ந்திட்டாலும் .
பொங்குறும் புலால் புசிப்போன் போய்நரகடைவானானன்றே .

 கலையொலாமுணர்ந்தானேனும் கரிசற தெரிந்தானேனும் ,
மலையெனஉயர்ந்தானேனும் மன இயல் அகன்றானேனும் ,
 உலகமெலாம் புகழ்ப் பல்லோர்க்குகுதவிய கையனேனும் ,
இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகடைவானற்றே ,


இத்திரனருள் கைப்பற்றி உயிர்க்கெலாம் இதத்தைச்செய்க ,
 சத்திய இரக்கம்இன்றேல் முத்தியை சார்கிலார் - சற் , பக்தியால்
 யோகம்சாரும் யோகத்தால் பரம் ஞானம் சித்தியாம் ,
 இதற்காதாரம் ஜீவகாருண்யம் அன்றே ,

                   
                                                                                                                                                                                                                                                                                                                                                       நன்றி

                                                               பஞ்சாட்சர பதி பசு பாச விளக்கம்


 பொல்லாப் புலாலை நுகரும் புலையரை,
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் ,
செல்லாகப் பற்றி தீவாய் நரகத்தின்
மல்லாகத் தள்ளி மறித்து வைப்பாரே

                                                                        திருமூலர் திருமந்திரம்

 இந்த
பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லை ! இரண்டாம் பாடலில் அசைவம் தின்போரைபுலையன் என திட்டுகிற திருமூலர் மாமிசம் உண்போரை எமன் தூதுவர் வந்து அழைத்துச்செல்வர் என்கிறார் . இந்த காலத்தில் உண்மையான நரகம் என்பதுநோய்தான் ,

அசைவ உணவு , மசாலா உணவுகள் அஜினோ மோட்டா உணவுகள் ,
செரிக்காத புரோட்டா உணவுகள் தவிர்த்து காய்கறி ,கீரைகள் சாப்பிடுதல்
நலம் . அதே போல மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாமென திருமூலர் சொல்கிறார் .

 மனம் செம்மையாக முதல் படியே அசைவ உணவு
தவிர்ப்பதுதான் . மிருகத்தை தின்றால் மிருக உணர்ச்சியே வரும் . மானிட
உணர்வும், மனம் செம்மையாக ஆகவேண்டுமெனில் சைவத்தில் இருங்கள் .


உயிரைக்கொல்லக்கூடாது , அதை சாப்பிடக்கூடாது என விரும்பிய மகான்
திருவள்ளுவர் புலால் மறுத்தல், கொல்லமை என இரு அதிகாரங்கள் திருக்குறளில்எழுதினார் .

 தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம்ஆளும் அருள்

                                                                26 அதிகாரம் புலால் மறுத்தல் 251

 தன் உடம்பைபெருக்க அசைவ உணவு உண்பவர்க்கு அருள் எங்கிருந்து கிட்டும் , அருள்என்பது இறையருளாகவும் அது அசைவ உணவு உண்போர்க்கு கிட்டாது என்றும்வினவுகிறார் 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
 எல்லா உயிரும் தொழும் .

                                                         குறள் 260ல் 26வது அதிகாரம் புலால் மறுத்தல்

 பொருள்உயிர்க்கொலை செய்யாமல் , அதை கொன்று உண்ணாதவனை கை கூப்பி எல்லா உயிரும்தொழும் என்கிறார் . எல்லா உயிரும் தொழுமென்றால் உயர்ந்த யோகியாய் மனிதன் அசைவத்தை விட்டதும் மாறுகிறான் என்றே தோணுகிறது . திருவள்ளுவர் 33 வது அதிகாரத்தில் கொல்லாமை யின் அவசியத்தை பாடி இருக்கிறார் .

 ஓன்றாகநல்லது கொல்லாமை மற்றதன்
 பின்சாரப் பொய்யாமை நன்று

                                                                                                    குறள் 323

உயிரைக்கொல்லாது இருத்தலே உயர்ந்த அறம் இரண்டவதாக உண்மை பேசுதல் நல்அறம் என்கிறார் . உயர்ந்த அறம் உயிர் கொல்லாமை என்கிறார் .




தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
 தின்னுயிர் நீக்கும் வினை

                                                                                                  குறள் 327

பொருள் : தன் உயிரே போவதாக இருந்தாலும் மற்ற உயிரை போக்குதல் கூடாது அது கொடும் பாவம் என்கிறார் .


 இப்படி பல மேற்கோள்கள் சித்தர்
பெருமக்கள் பாடியுள்ளார்கள் . அதையெல்லாம் விட்டு அசைவத்தை உண்பதால் பல நோய்கள் உருவாகிறது .


 முடிவுரை :

 எல்லாவற்றிக்கும் ஓர் அதிகாரம் எழுதிய திருவள்ளுவரே 2 அதிகாரம் எழுதியுள்ளார் எனில் சைவத்தின் மேன்மையை
உணருங்கள் . கடைசியா வாழ்ந்த வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்
பயணியுங்கள் . நோயில்லாமல் வாழலாம் , அசைவம் உண்பதில்லை என மன உறுதிகொள்ளுங்கள் .

பல ஆலயங்கள் தரிசித்தும் ஒன்றும் ஜெயிக்க முடியவில்லை
என்பதற்கு காரணம் அசைவ உணவு உண்பதே . இது என் தனிப்பட்ட ஆய்வே தவிரவேதவாக்கு அல்ல . இறைவன் படைத்தது எல்லாம் சாப்பிடதானே என்கிறசமாதானத்தை ஏற்க முடியாது .

முட்டை அசைவமே 40நாளில் குஞ்சு பொறிக்கிற
ஒன்று எப்படி சைவமாகும் . சைவமாக மாறுவதெனில் முழுக்க மாறுங்கள் . அது தவிர்த்து அசைவம் உண்டு விட்டு யோக பள்ளிக்கு செல்கிறார்கள் .தியானம்கற்கிறேன் என்கிறார்கள் . தன்னை தானே ஏமாற்றி கொள்வது இது ..
உயிர்கொலை புரியாது , புலால் உண்ணாது சைவத்தில் இருங்கள் .

இறையருளும கிரகங்களும் உங்களுக்கு நல்லதையே செய்யும் என்பது என் கருத்து .சித்தர்கள் சொல்லிவிட்டு சென்ற சைவ உணவை உண்ணுங்கள் . மனம் செம்மையாகி மேன்மை அடைவீர்கள் . இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .

 கடந்த 1 வருமாக அடியேன் அசைவத்தை விட்டு
விட்டேன் . மனது தெளிவாக உள்ளது . நல்ல விஷயமென உங்களுக்கு தோன்றினால்சைவத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் . ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

. நன்றி .

 ஒம் சிவ சிவ ஓம் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...