பசு : இடுகையின் தலைப்பை பார்த்தவர்களுக்கு பசுவிற்கு ஓர் இடுகையா ..? என ஆச்சர்யர்யம் அளிக்கலாம் ஆனால் நம் புராணங்களும் இந்து மதங்களின் நூல்களும் மிக மேன்மையாக சொல்லுகின்ற விஷயமாக பசு இருப்பது நிஜமே. அப்படி என்ன தான் இருக்கிறது பசு மாட்டில் என நம் ஆன்மிக அறிவை (?) வைத்து ஆராய்ததின் பலன் எமக்கு தெரிந்த சில விஷயங்களை உங்கள் முன் வைக்கிறேன் .
புராணத்தில் எல்லா தெய்வங்களும் பசு மாட்டின் உடலில் வந்து இடம்புகுந்ததாகவும் மகா லட்சுமி கடைசியாக வந்த போது உலகின் முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் இடம் கொடுத்து விட்டதாக பசு எனப்படுகிற கோமாதா சொல்ல சரி எனது சாணம் இடும் இடம் தான் உள்ளது எனச்சொல்ல மகா லட்சுமியும் கிடைத்த இடம் போதும் என அங்கே தங்கி விட்டதாகவும் புராணக்கதைகள் சொல்கின்றன.
ஆகவே தரித்திர நிலையில் உள்ளவர்கள் செல்வ வளம் இல்லாதவர்கள் அதிக பாவங்களை செய்து விட்டதாக எண்ணுபவர்கள் கன்றுடன் கூடிய பசு மாட்டை நம்பிக்கையுடன் ஒருமுறை சுற்றி வந்து பழம் அல்லது அகத்திக்கீரை கொடுத்து வணங்க எல்லா வளமும் நலமும் கிட்டுமெனவும் உலகின் அனைத்து தெய்வங்களையும் வலம் வந்த புண்ணியம் கிட்டுமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்.
பசுவின் பால்,தயிர்,நெய், கோமியம்,பசுஞ்சாணம் ஆகியவை சேர்த்துதான் பஞ்ச காவ்யம் தயாரிக்கப்படுகிறது. திருநீரு பசு சாணத்தில் தயாரிக்கப்படும் வெண் திரு நீரு உயர்வாக கருதப்படுகிறது. பசு மாட்டின் நிறத்தை பொறுத்து பாலின் பண்பு அமைவதாக பெரியோர்கள் சொல்கிறார்கள் . வெண்மை நிறம் கொண்ட பசுவின் பால் பித்த ரோகத்தை தீர்க்கும் . சிவப்பு நிறம் கொண்ட பசுவின்பால் வாத நோயை போக்கும் . வெண்புள்ளியும் கருஞ்சிவப்பு நிறமும் (கபிலை நிறம் ) கொண்ட பசுவின் பால் மூன்று ரோகமான வாதம் பித்தம் ,சிலோத்தும ரோகங்களை நீக்குவதாக பழங்கால நூல்கள் இயம்புகின்றன. இந்துவாக பிறந்த ஒருவர் இது போன்ற உயர்வுகளை கொண்ட பசுக்களை வதை செய்யாமலும்,அடிமாடுகளை விற்காமாலும் மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளாமல் கண்டிப்பாக தவிர்த்து ,
அன்புடன் பராமரித்து பசுக்களின் அருமையை உணர்ந்து சிவன் அருள் மட்டுமன்றி உலகின் அனைத்து தெய்வங்களின் அருளும் தடையின்றி பெற வாழ்த்துகிறேன்.
3 comments:
மன்னிக்கவும்... பசு இறைச்சியை உணவாக உண்டவர்கள் பிராமணர்கள் என்று மஹா பாரதத்தில், ரந்தி தேவன் கதையில் வருவதாக கேள்வி... சைவ உணவுக்கு ஆதரவாக இந்து மத நூல்களை இழுக்காமல் நம் தமிழக நூலான திருக்குறளை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமே.. மேலும் ஈழம் கவிதையில் ஒரு திருத்தம், தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் அல்லர் தமிழன்... அவன் தான் இலங்கையில் மூத்தக் குடி...
thanks friend surya jeeva,iam change it
Post a Comment