Friday, June 1, 2012

அன்னதானம்பல்வகையான தானங்கள் நம் முன்னோர்கள் இயம்பி விட்டுச்சென்றுள்ளார்கள் . அதில் முதன்மையானது அன்னதானம் . உயிர்கள் வாழ அடிப்படையானது உணவு.உயிர் உணவை ஆதாரமாகக்கொண்டது. ஆக உணவு கொடுத்தவன் உயிர் கொடுத்ததற்கு ஒப்பானவன் ஆகிறான் .

ஒருவன் தன் உயர்வுக்கு எப்போதும் அன்னத்தை தாணமாக கொடுத்தல் வேண்டும் . அப்போதே சராசரி மனிதரிடத்தில் இருந்து வேறுபட்டு உயர்ந்த மதிப்புமிக்க மனிதனாகிறான் .

சரி அன்னதானம் செய்பும் முடிவிற்கு வந்தாயிற்று அதற்கு எந்த திருக்கோவிலில் அன்னதானம் இட்டால் உயர்வான பலன் கிட்டுமென பலங்கால நூல்கள் என்ன சொல்கின்றது.

அன்னதானத்தால் உயர்வான பலன் கிட்ட :

பிற திருக்கோவில்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் காசியில் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலனும் ,

புண்ணிய பூமியான காசியில் ஒருகோடி பேருக்கு அன்னதானம் இட்ட பலன் திருவண்ணாமலையில் ஒருவர்க்கு இட்டதற்கு சமமாகும் . திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் இல்லை. அதிலும் துவாதசி திதியில் அன்னதானம் செய்வது மிக விஷேசமாகும் என சிவமகாபுராணம் உண்மையாகும் .

வேறுவகை அன்னதானங்கள் : எறும்புகளுக்கு அரிசி கோலத்தால் கோலமிட்டு உணவிடுவது. பசுக்களுக்கு அகத்திக்கீரை,புல்,பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகிறதாம் .

முடிவுரை :

அருணாசல மகா சிவபுராணம் உணர்த்துகிற துவாதசி நாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்து சொர்க்கத்தில் இடம் பிடிப்போம். அப்படி முடியாதபோது நமது ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ,கும்பாபிஷேகங்களில் அன்னத்தை தானமாக கொடுப்போம் .

போதும் போதும் என மனிதனை மன நிறைவு செய்வது அன்னதானம் மட்டும் தானே.. ! நன்றி

சித்தர்கள் சொல்லிச்சென்ற தத்துவங்கள்


சித்தர்கள் தங்கள் வைத்திய முறைக்காகவும் யோக நெறிக்காகவும் 96 தத்துவங்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் அறிந்திராமல் உள்ளதால் அறிந்து கொள்ள வேண்டி பதிவிட்டுள்ளேன் .அறிவு 1 - கருத்துச்செயல்பாடு

வினைகள் 2- நல்வினை,தீவினை

முக்குற்றங்கள் 3- வாதம் பித்தம் ,சிலேத்துமம்

குணம் 3-சாத்வீகம் ,தாமஷம்,ராட்ஷசம்

ஈடணை 3-தாரேட்சணை,புத்ரேட்சணை,விரேட்சணை

மலம் 3-ஆணவம் ,கன்மம் ,மாயை


மண்டலம் 3- சூரியன் ,சந்திரன், அக்னி

கரணம் 4- மனம் ,புத்தி, சித்தம் ,அகங்காரம்

பூதம் 5-மண் ,நீர் ,நெருப்பு,காற்று ஆகாயம்

பொறி 5- மெய்,வாய் ,கண்,மூக்கு செவி

புலன் 5- வாய்,கால் ,கை,குதம் ,குறி

கண்மேந்திரியம்
5- வாக்கு,பாணி,பாதம் ,பாயு ,உபஸ்தம்

ஞானேந்திரியம் 5- உணர்வு,அறிவு,வெபம் ,தாக்கம் ,மெய்

ஆசையம் 5-மலம், விந்து,சிறுநீர்,சத்து,உணவு ஆகிய ஐந்தும் தங்கும் இடங்கள்

கோசம் 5-ஆகாரமையம் ,விஞ்ஞானமையம் ,மனோமயம் ,பிராணமயம் ஆனந்தமயம்

அவஸ்தை 5-சொப்பணம்,சுக்கிரம் ,கமுத்தி,துரியம் ,துரியாநிதம்

ஆதாரங்கள் 6-மூலாதாரம் ,சுவாதிட்டானம்,மணிபூரகம் ,
அனாகதம் ,விசுத்தி,ஆன்ஞேயம்

இராகம் 8- காமம் ,குரோதம் ,லோபம் ,மதம் ,
மோகம் ,ஆச்சர்யம் ,இடும்பை,பொறாமை

நாடி 10-இடகலை,பிங்கலை.கழுமுனை, கண்டம் ,
அட்சி,கந்தாரி,சுத்தி, அலம்புடை,சங்கினி,குரு

வாயு 10- பிராணன் ,அபானன் ,வியானன் ,உதானன் ,சமானன் ,
நாகன் ,கூர்மன்,கிரிகரன் ,தேவதத்தன் ,தனஞ்செயன்