Monday, June 3, 2013

ஸ்ரீ ஞானக்கோவை உடனமர் திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் .தென் காளகஸ்தி ,பட்டைய காளிபாளையம் ,மராப்பம்பாளையம்

கொங்கு நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் புகழும் பழமையும் வாய்ந்த
சிவாலயங்களில் "தென் காளகஸ்தி " என்ற சிறப்புடன் விளங்குகின்ற
திருக்கோவிலாகும் . பவானி வட்டம் பட்டையகாளிபாளையம் என்ற அழகிய ஊரில்திருக்கோவில் அமைந்துள்ளது.



 செல்லும் வழி :


ஈரோட்டில் இருந்து கோபி செல்லும் வழியில் சுமார் 22 கி.மீட்டர் கவுந்தப்பாடிக்கு அடுத்த தாக வரும் மாரப்பம் பாளையம் பிரிவில் இருந்து இடப்பக்கம் திரும்பி சற்று தூரம் நடந்தால் பட்டைய காளிபாளையம் என்ற ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது ..

சிவபெருமான் இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . ஆந்திராவில்
உள்ள காளகஸ்திரி கோவிலுக்கு இணையாக போற்றப்படுகிற இந்த
திருக்களாத்தீஷ்வரர் திருக்கோவில் ராகு கேது பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.


மூலவர் : 


ஸ்ரீ திருக்காளத்திஸ்வரர்

 அம்பாள் : 


ஸ்ரீஞானப்பூங்கோதை

திருக்கோவில் வளாகம் ஸ்ரீ கண்ணப்பநாயனார் மடாலயம் என
சிறப்பிக்கப்படுகிறது .

 திருக்கோவில் சிறப்புகள் : 


18 சித்தர்களில்  ஒருவரான சட்டை முனி சித்தர் அவதரித்த ஸ்தலமாக கூறப்படுகிறது .காளகஸ்தியில் இருந்து வந்த சிவலிங்கமாகும் . திருக்காளகஸ்தி போலவே மூலவர்  சிவபெருமானுக்கு முன்பாக வராக சிலை  அமைந்திருப்பது மிகுந்த விஷேசமாகும் .

வாயு ஸ்தலமாக போற்றப்படுகிறது . மூலவர்க்கு பின்னால் உள்ள 27 விளக்கு
கொண்ட ஆவுடை அமைப்பு இங்கு காணப்படுவதும் விஷேசமான ஒன்றாகும்
,உச்சிக்காற்றில் மைய விளக்கு ஆடாது அசையாது காணப்படுவதும்
விஷேசமானதாகும் .


 ஸ்ரீ கண்ணப்பநாயனார் : 


திருக்கோவிலில் ஸ்ரீ கண்ணப்பநாயனாருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பெரிய புராணம் கூறுகிற 63 நாயன்மார்களில் கண்ணப்பநாயனாரும் ஒருவராவார் . இவருக்கு சிவன் காளகஸ்தியில் காட்சி கொடுத்து புராண வரலாறாகும் .

ஆந்திரமாநிலத்த ஆண்ட வேடுவர் குல அரசர்கள் திருக்கச்சராயர், பூலவராயர், காவலராயர் வழி வந்தவேடுவர் குல பெருமக்கள் பவானி பகுதியில் குடிவந்திருந்தனர் .

அப்பரம்பரையில் வந்த ஆன்மீக பெருமக்கள் சுமார் 900 வருடங்களுக்கு முன்
ஓடத்துறை கிராமம் பட்டையக்காளி பாளையம் ஸ்ரீ காளஸ்தீஸ்வரர் திருக்கோவில் எழுப்பியும் ,ஸ்ரீ கண்ணப்ப நாயனார் மடத்தினை வழிபட்டும் உருவாக்கிய அற்புத சிவாலயமாகும் . திருக்கோவில் வளாகத்தில் 15,16 ஆம் நூற்றாண்டுகல்வெட்டு அமைந்துள்ளது குறிப்பித்தக்கது .


பூஜை நேரம் : 


தினமும் ஒருகால பூஜை காலை 7 மணியில் 8 மணிவரை நடைபெறுகிறது.
அம்மாவசை.பெளர்ணமி,பிரதோஷ நாட்களில் விஷேசமாக நடைபெறுகிறது.

 வழிபாட்டின்பலன் :


 திருக்காளத்தீஷ்வரரை 63 நெய் தீபமிட்டு வணங்குபவர்களுக்கு
திருமணத்தடை, புத்திபாக்கியமின்மை ,காலசர்ப்ப தோஷம் நீங்கி ,ராகு கேது
தோஷம் நீங்கி நல்வாழ்வு கிட்டுமென்பது ஐதீகம் .

                                    திருக்கோவில் அமைப்பு :



எல்லா சிவாலயங்களைப் போலவே முகப்பில் அரசமரத்தடி விநாயகர் ,கொடிமரம்,பின்  மூலவர் ஸ்ரீ திருக்காளத்தீசரை வணங்கினால் பின் தனிச்சன்னதியாக ஸ்ரீ ஞானப்பூங்கோதை ,வணங்கி திருக்கோவில் சுற்றி வருகையில் ஸ்ரீகணபதி,ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீ துர்க்கை , ஸ்ரீசண்டிகேஷ்வரர் ,நவகிரகங்கள் , ஸ்ரீ காலபைரவர் என சிவாயத்தின் ஆகம விதிகளுடன் அழகேஅமைந்துள்ளது.


முடிவுரை :


 கொங்கு நாட்டின் புகழ் மிக்க ஆலயங்கள் உண்டு. அவற்றில் சில நுட்பமான கண்ணுக்கு தெரியாத சிவாலயங்கள் உள்ளன . அவ்வகையில்
காண வேண்டிய ஆலயம். பழங்காலத் தொடர்புடைய பழமையான ஆலயம் . கண்டு ரசித்து வணங்கி கருத்துரையிடுங்கள் . ஓம் சிவ சிவ ஓம் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...