Thursday, May 10, 2012

குன்றி மலைச்சாரலில் அமைந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு




குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு



ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளில் பார்க்கவேண்டிய அணைக்கட்டில் குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டும் ஒன்றாகும் .பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் அழகு மிகுந்து சுற்றிலும் மலைகள் பச்சைப்பசேல் என இருக்க இயற்கையாகவே அமைதி நம்மை தொட்டுச்செல்கிறது.

அமைப்பு :

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கொங்கம்பாளையம் அருகே அமைந்துள்ளது.

எப்படி செல்வது :

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் வாணிப்புத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொங்கர்பாளையம் வரை செல்ல பஸ் வசதி உண்டு.ஆனால் அடிக்கடி குண்டேரிப்பள்ளம் அணை செல்ல பஸ் வசதி இல்லை. கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் .

விளக்கோம்பை , குன்றி மலையில் பெய்கின்ற மலைநீர் சேகரிக்கப்படும் இடமாக குண்டேரிப்பள்ளம் திகழ்கிறது. சுமார் ஒரு கி.மீட்டர் தூரமுள்ள அணைக்கட்டின் மேல் சாலையில் நடந்து சுற்றிலும் மலைகள் ரசிக்கலாம் .குண்டேரிப்பள்ளம் அணையை பார்க்க வருபவர்கள் உணவுப்பொருட்கள் கொண்டு வருவது நல்லது. இங்கு உணவுக்கடைகள் கிடையாது.

யானைகள் :

மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் இங்குள்ள நீர்பிடிப்பு பகுதிக்கு வருவதுண்டாம் .அணையின் மேல் இருந்து பார்க்கலாம் என சொன்னார்கள் . நீங்கள் யானையை பார்த்தால் பின்னூட்டம் இடுங்கள் .

முடிவுரை :

ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம் . அமைதியை தேடிச்செல்ல அழகிய இடம் . ஞாயிற்றுக்கிழமைகளில் மிதமான கூட்டம் இருக்கும் . இங்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பிடித்த மீன்கள் விற்கப்படுகிறது. எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் ஓர் முறை சென்று வரலாம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...