Saturday, March 17, 2012

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாம்பிகை கும்பாபிஷேகம்



ஆதிசங்கரர் உருவாக்கிய சிருங்கேரிமடம் ஆன்மீக உலகில் புகழ்பெற்ற ஒன்று. இந்தியாவின் பல சிருங்கேரி மடத்தின் கிளைகள் இருப்பினும் ஈரோடு மாவட்டம் எந்த வகையிலும் குறைந்ததில்லை என்பதற்கேற்ப கோபி செட்டி பாளையத்தில் நடந்த ஸ்ரீ சாரதாம்பிகை திருக்கோவில் கும்பாஷேகம் சிறப்பானது.

தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு ஆதிசங்கரரால் துவங்கப்பெற்ற சிருங்கேரி சாரதா பீடத்தின் 36 வது பீடாதிபதியாக பாரதி தீர்த்தர் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீ பாரதீ தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்களால் அன்னை சாரதாம்பிகைக்கு கோபி வீரபாண்டி அக்ரஹாரத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார் .

கும்பாபிஷேக விழாவினைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டனர் . சுவையான அன்னதானம் தரப்பட்டது.

கோபியில் அழகான அன்னை சாரதாம்பாள் திருக்கோவில் வீரபாண்டி அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது .வந்து வணங்கிச்செல்லுங்கள் .

1200 வருடங்களுக்கு முன்பு ஆதிசங்கரரால் சந்தன விக்கஹம் ஒன்றில் அன்னை ஸ்ரீ சாரதாம்பிகையை உருவாக்கி துவக்கப்பட்ட ஆன்மீக நற்பணி தொடர்ந்து நடைபெற்று வருவது சிறப்பு.

ஆன்மீகம் வளரட்டும் விருட்சமாக.

சிருங்கேரி சுவாமிகளையும்,அன்னை சாரதாம்பாள்

கும்பாபிஷேகத்தையும் தரிசிக்க முடியாதவர்கள் புகைப்படம்

இணைக்கப்பட்டுள்ளது. நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...