மணியாச்சி பள்ளம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியின் மறைந்த அழகு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள மணியாச்சி பள்ளம் என்பது, இயற்கையும் சாகசமும் விரும்பும் பயணிகளுக்கு சிறந்த இடமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இது ஒரு காட்டாற்றின் பள்ளத்தாக்கு பகுதி, மழைக்காலத்தில் நீர்ப்பெருக்கு கொண்டு பசுமையாக மிளிரும் இப்பகுதி, கோடைக்காலத்தில் அமைதியான நடைபயணப் பாதையாக மாறுகிறது.
செல்லும் வழி
மணியாச்சி பள்ளம் என்பது அந்தியூரில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாமரைக்கரை வந்து தாமரைகரை வனத்துறை அலுவலகத்தில் இருந்து இடது புறமாக கொங்காடை செல்லும் வழியில் மலைப்பாதையில் அமைந்துள்ளது. மணியாச்சி பள்ளம் செல்லும் வழியில் இடதுபுறம் தாளக்கரை என்ற கிராமமும், வலதுபுறம் தொள்ளி என்ற கிராமம் செல்லும் வழிஉள்ளது. அதை தொடர்ந்து கொங்காடை செல்லும் வழியில் பயணித்துக் கொண்டே இருந்தால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் மணியாச்சி பள்ளம் உள்ளது. 2016 முன்பு, மழைநீரின் பெருக்கால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், தற்போது பள்ளத்தின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் ஆண்டு முழுவதும் வாகனங்கள் எளிதில் கடக்க முடிகிறது. பள்ளத்தைத் தாண்டி மேலே சென்றால் ஒன்னகரை , தம்புரெட்டி, மற்றும் ஒசூர் , ஆலனை, கோவில் நத்தம், சின்ன செங்குளம் பெரிய செங்குளம் அணை போடு , கொங்காடை போன்ற மலைக் கிராமங்கள் பார்க்கூடியதாக உள்ளன.
இயற்கைச் சூழல்
இந்தப் பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், காட்டாற்றுகள் ஆகியவை இயற்கையின் உண்மை அழகை வெளிப்படுத்துகின்றன. பசுமை நிறைந்த மரங்கள், பறவைகளின் குரல்கள், மற்றும் சில நேரங்களில் காட்டுயானைகள், மான், புலி போன்ற விலங்குகளின் தடயங்கள் காணப்படும். இதனால் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் அதிகம் வருகை தருகின்றனர். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் இவ்விடத்தில் சென்று வருவது வனவிலங்குகள் பயத்திலிருந்து தப்பிக்கலாம்.
பாதுகாப்பு மற்றும் கவனிப்புகள்
மழைக்காலத்தில் காட்டாறு வெள்ளம் பெருகுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் பள்ளம் அருகே வாகன விபத்துகள், குறிப்பாக பேருந்துகள் பள்ளத்தில் சரிந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், காட்டுயானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் அதிகம் இருப்பதால், பயணிகள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
சுற்றுலா அனுபவம்
மணியாச்சி பள்ளம் ஒரு கடந்து செல்லும் இடம் மாதிரி தோன்றினாலும், அதைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகள் அதை ஒரு சிறிய சுற்றுலா இடமாக மாற்றுகின்றன. மலைக்காற்றின் குளிர்ச்சி, ஓடும் தண்ணீரின் சத்தம், பசுமையான சூழல் தாமரைக்கரை, பர்கூர், போன்ற அருகிலுள்ள இடங்களுடன் இணைத்து ஒரு நாள் பயணத் திட்டத்தில் இதைச் சேர்க்கலாம்.
முடிவுரை
மணியாச்சி பள்ளம், அந்தியூர் மலைப்பகுதியின் முக்கியச் சந்திப்புப் பகுதி மட்டுமல்ல, இயற்கையின் எளிமையான, ஆனால் ஆழமான அழகையும் கொண்ட இடம். மழைநாள்களில் பசுமையோடு கலந்த வெள்ளப்பெருக்கு, கோடையில் அமைதியான பாதை—இரண்டும் இப்பகுதியின் தனிச்சிறப்பு. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பயணம் செய்தால், இது மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் இடமாகும். குறிப்பு வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்குள் உள்ளே செல்லக்கூடாது, ரோட்டில் மட்டும் பயணிக்கலாம் மலைப்பகுதியில் நன்கு கார் ஓட்டக்கூடிய ஓட்டுனர்களை பயன்படுத்தி இந்த இடத்தை சென்று பாதுகாப்பாக வரலாம் நன்றி