Sunday, September 22, 2013

சிவயோக பூசை பலன் , அறம் செய்வதின் பலன் ,பாவத்தின் பலன்

குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு                       சித்துக்களையும்   அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும்
மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய    சித்தராவார் .


 அகத்தியர் பூஜா விதி -200 தீட்சா விதி - 200 வழிபாடுகள்
தியானம் யோகம் என பூஜை தீட்சை விதிகளை ஆராய்ந்துள்ளார் . இதற்கு
யாரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா எனில் பல இடங்களில் பரிபாசைகளாகவும்  நுணுக்கமாகவும் கூறியுள்ளதால் பல பாடல்கள் ஆய்விலேயே உள்ளது .

 சிவயோகம்அறம் பாவம் செய்வதின் பலனை பின்வருமாறு கூறுகிறார்

 " காணுகிற தர்மமதுசெய்வாகிற

 காசியினி லவனுக்கா மவன் பிதிர்குமாகும் "


 இந்த வரிக்கு பொருள்  ;

உலகில் தர்மம் செய்பவர்களுக்கு அவர்களுக்கும் அவர்கள்
சார்ந்தவர்களுக்கு உயர்வாகும் என்றும் ,

 அடுத்தவரியில்

 " தோணவே  பாவத்தைச் செய்வானாகிற் 

 சொன்னவர்க்கா மல்லாட்டால் சுற்றத்தார்க்காம்"


இதன் பொருள்    ;;

பாவமென்று தெரிந்தே செய்பவர்கள் பாவம் செய்வரல்லாமல்
சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார் .


அடுத்தவரியில்

" ஊணவே சிவயோகஞ் செய்வானாகில் உயிரதுதான் 

மோஷமெய்து முண்மையுண்மை, 

பூணவே பூசைசெய்தால்சிவத்துக்காகும் 

பூசையென்ன மனங் கனிந்தால் புகழுமாச்சே ".


 இதன் பொருள்  ;;


நன்றாக சிவனை பூசை செய்பவர்கள் உயிர் மோட்சத்தை அடைவது உண்மை என்றும் அப்படி சிவ பூஜை செய்பவர்கள் புகழ் உண்டாகுமென ஸ்ரீஅகத்திய பெருமான் சிவ பூஜையின் மேன்மையான பலனை உரைக்கிறார் . ஆக சிவ பூஜை செய்யுங்கள் ,புகழையும் மோட்சத்தையும் அடையுங்கள் .

ஆதாரப் பாடல் : 


அகத்தியர் பூரண சூத்திரம் 216 புத்தகத்தின் 206 ஆவது பாடல்

 பின்குறிப்பு : 


 இப்பகுதி அனுபவம் இல்லாதவரால் மொழிபெயர்க்கப்பட்டது , பாடலில் திருந்தங்கள் யார்வேண்டுமெனிலும் பின்னூட்டமாக சேர்க்கலாம் . இப்பக்கத்தில் அகத்தியர்  படம் ஒன்றை கூகுள் தேடலில் இணைக்கப்பட்டுள்ளது . அந்த வலைத்தள நன்பருக்கு
நன்றிகள் மற்றபடி வோறொரு சித்தர் பாடலுடன் சந்திப்போம் .

ஓம்  அகத்தீஸாய நமஹ

Tuesday, September 10, 2013

தேடிக்கொண்டிருக்கிறேன் நாம் தொலைத்து விட்ட ஓலைச்சுவடிகளும் ,அரிய புத்தகங்களையும்

கடினமான பணிகளுக்களுக்கிடையே ஆன்மிக தேடலில் சிவாலயங்கள் , சித்தர்கள் ஜீவசமாதி , சித்தர்களின் அரிய புத்தகங்கள் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வும் தொடர்கிறது . தற்போது ஒர் சித்த வைத்தியரிடம் அவ்வப்போது சித்த வைத்தியம் கற்று வருகிறேன் .

அவ்வகையில் பல சித்தர்களின் நூல்கள்வெளிவந்து பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன அவைகளை சேகரித்தும் வருகிறேன.;

ஓலைச்சுவடி 


நம் முன்னோர்களான சித்தர்கள் எல்லாநோய்களுக்கும் மருந்துகளை ஓலைச்சுவடிகளிலும் பல அரிய புத்தகங்களிலும்கூறி விட்டனர் . பரிபாஷைகளான பல புத்தகங்கள் மறைத்தும்
அருளிச்சென்றுவிட்டனர் .

 சில ஓலைச்சுவடிகள் புத்தகங்கள் ஆகி விட்டன . சில நூல்கள் எல்லாம் காலப்போக்கில் சிலரிடம் மட்டுமே வம்ஷா வழியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது . சில ஓலைச்சுவடிகள் சில நன்பர்கள் புரியாமல்
வைத்திருக்கிறார்கள் .

சிலருடைய வீட்டில் பயன்படாமல் பழைய மரப்பெட்டியில்
உறங்கிக்கொண்டு இருக்கிறது . யாருக்கும் பயனில்லாமல் அரிய புத்தகமோ
ஒலைச்சுவடிகளோ இருப்பதாலேயே நம் சித்த மருத்துவம் அழித்து ஆங்கிலேயர்கள் மருத்தவத்தில் மோகங்கொண்டு தீர்க்க முடியாத சில வியாதிகளை எடுத்துக்காட்டாக சக்கரை வியாதி போன்றவற்றை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க கஷ்டப்படுகிறோம் .

சிலருக்கு சித்த வைத்திய மருந்துகள் தன் சந்ததிக்கு
சொல்லாமல் மரித்தும் விட்டனர் . இப்போதைய நம் வேண்டுதல்கள் எல்லாம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் . மக்கள் நலமுடன்
இருக்கவேண்டும் .

 உங்களிடமோ ,உங்கள் நன்பர்களிடோமோ பழங்கால
ஓலைச்சுவடிகளோ சித்தர்கள் பற்றியும் சித்த மருத்தும்
,மருத்துவம்பற்றியும் அரிய நூல்கள் இருக்குமாயின் எனக்கு ஓர் நகல்
அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன் .

எம்மால் முடிந்த தொகை அனுப்பி வைக்கிறேன் . அதிக பணம் அளிக்க முடியாத நிலையால் எம் நிதித்துறை பழுதடைந்துள்ளது . எமது தேடலின் பெரிய முயற்சியில் எமக்கு தேவையான சில
புத்தகங்கள் கிடைத்தால் மகிழ்வுறுவேன் .


எம் தேடலுக்கு உதவ விரும்புகிற நன்பர்கள் புத்தகங்களை என் முகவரிக்கு அனுப்பலாம் '

 ப.மாதஸ்வரன்
 த/ பெ   பழனிச்சாமி
 755 -அரசமரத்து வீதி ,
குருவரெட்டியூர் அஞ்சல் 638504,
பவானிவட்டம்
 ஈரோடு மாவட்டம் .

 மெயில் செய்யலாம் .

palamathesu@gmail.com

மற்றும்

pala.mathesu@ymail.com 

 தொடர்பு எண்    ;

9750155005



சித்தர்களின் ஆசிர்வாதமிருப்பின் அரிய புத்தகங்கள் கிடைக்குமென
நம்புகிறேன் . இ மெயில் மூலமாக ஒலைச்சுவடி நகல் விபரங்கள் கிடைக்குமெனஎதிர்நோக்கி ,

நட்புடனும் ஆவலுடனும் குரு.பழ.மாதேசு.

ஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி

நீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்தில் சற்றே ஓய்வெடுத்து மறுபடியும் உற்சாகமாக கிளம்பி இருக்கிறேன்.


 இதற்கு உதவியாக பிள்ளையார் சுழியிட்டு இந்த பிளாக்கை உருவாக்கி தந்த என் மனம் கவர் நன்பர் பிரகாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டியபாளையத்தில் நன்பர் வெங்கடேஷ் உதவியால் ஓர் அற்புத ஜீவசமாதியை கண்டுபெருமகிழ்வுற்றேன் .


                                 ஸ்ரீ ஆறுமுகசித்தர் ஜீவசமாதி 



ஈரோடு மாவட்டம் கோபி செட்டிய பாளையம் சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .கோபி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் சென்று சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது .

அதன் வழியாக சென்றால் துரையப்பா காம்பிளக்ஸ் பின்புறம் ஸ்ரீ ஆறுமுக சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் ஜீவசமாதியான ஸ்ரீ குகை நமச்சிவாயரை அல்லது குகநாதரை குருவாக கொண்டு பூஜித்து வந்த ஸ்ரீ ஆறுமுக சித்தர் தாந்தீரிக வல்லுனராக இருந்தவர் .

ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் இவரின் வம்சாவழிக்கோவிலாகும் . ஸ்ரீ
ஆறுமுக சித்தர் ஜீவசமாதி நெரிசல் மிக்க நகரில் அமைதியாய்
அமைந்திருக்கிறது .

எம் அனுபவத்தில் சில ஜீவசமாதிகள் கண்டுற்ற போதிலும்
அதிக ஈர்ப்புடைய மறுபடி செல்லத்தூண்டுகிற அற்புத இடம் .

 விஷேசநாட்கள் :

 பெளர்ணமி நாளில் காலைமுதல் இரவு 7.30மணி வரை
திறக்கப்பட்டிருக்கும் . அன்று விஷேச பூஜைகள் நடைபெறுகிறது . மற்ற
நாட்களில் மாலை 05.30 07.30 மணி வரை திறந்திருக்கும் பூஜைகள் நடைபெறும் ..

நம் ஆர்வமெல்லாம் ஸ்ரீ ஆறுமுகசித்தரின் ஜீவசமாதியை எல்லோரும்
கண்டுற்று வணங்கி நல்வாழ்வு பெற வேண்டுமென்பதே . மேலும் ஸ்ரீ ஆறுமுக
சித்தர் ஜீவசமாதி பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் , வம்சாவழியினர்
விபரங்கள் அனுப்பினால் கட்டுரை விருவாக்கப்படும் .

தற்காலிக விபரங்கள்அவ்வளவே , மறுபடியும் ஒர் அற்புத பதிவில் உங்களை சந்திக்கிறேன் .ஜீவசமாதியை தரிசிக்க வேண்டுவோர் விபரங்களுக்காக தொடர்பு கொள்ளலாம் .இப்பதிவை காண வந்த உங்களுக்கு ஸ்ரீ ஆறுமுக சித்தரின் அருளாசி கிடைக்கவேண்டி விரும்புகிறேன் .

 பதிவை படித்து கருத்துரையிடுக்கள் நன்றி .

ஒம்சிவ சிவ ஓம்

Tuesday, September 3, 2013

ஸ்ரீ முத்துமரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திரசாமி திருக்கோவில்

அமைவிடம் :

 சேலத்திலிருந்து சோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
பவானியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் நசியனூர் பிரிவில்
நசியனூரில் திருக்கோவில் அமைந்துள்ளது

 ஈரோட்டில் இருந்து நசியனூர் 8 வதுகி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

மூலவர் :ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர்

இறைவி :ஸ்ரீ முத்து மரகத வல்லி


 புராணமும் வரலாறும் :

சேர சோழ பாண்டியமன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தின் ஓர் பகுதியாக கொங்குநாடு விளங்கியது. அது 24 சிறிய நாடுகளை கொண்டதாக பழங்காலத்தில் விளங்கியது .

மூவேந்தர்களால் காவிரி கரையில் மேற்கரையில் கரூர் பசுபதீஷ்வரர் திருக்கோவில் கட்டி குடமுழுக்கு செய்ய கலசம் வைக்க முற்பட்டபோது கலசம் நிற்காமல் போக அப்போது எதிர்பட்ட சாதுவின் ஆலோசனைப்படி கொங்கு நாட்டு வேளாண் மக்களை அழைத்துச்சென்று கலசத்தை கொடுத்து நிற்க வைக்க அதுநின்றதாம் .

 ஆதலால் மூவேந்தர்கள்களை விடபூந்துறைநாடுமேன்மையுடையதெனக்கருதி மூவேந்தர்கள் யாத்திரையின் போது பூந்துறை,எழுமாத்தூர், வெள்ளோடு ,நசியனூர் ஆகிய இடங்களுக்கு வந்து பல சிவாலயங்கள்திருப்பணி செய்தும்

 பல வைணவத்திருக்கோவில்கள் பிரதிஷ்டை செய்தும்சேர.சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் வணங்கி வந்ததாக வரலாற்று
இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாகும் .


 பழங்காலத்தில் நசையாபுரி  என்றும் இன்று நசியனூர் என்றும் அழைக்கப்படுகிற நசியனூரிலே மூவேந்தர்களாலும் திருப்பணிகள் செய்து வணங்கப்பட்டதாக வரலாறு  இயம்புகின்ற ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர் திருக்கோவில் மிக பிரசித்தி பெற்றபெரிய ஆலயமாகும் .

சிவபெருமான் கொங்கு நாட்டில் பல இடங்களில்
வீற்றிருந்தாலும் இங்கே மேற்கு நோக்கிய லிங்கமாக வீற்றிருப்பது மிக
விஷேசமாக கூறப்படுகிறது.

 உப திருக்கோவில்களான ஆதிநாரயணப்பெருமாள்
திருக்கோவிலும் அமைந்துள்ளது . சற்று தூரத்தில் ஸ்ரீ மதுரகாளியம்மன்
மற்றும் ,மாகாளி அம்மன் திருக்கோவில் அமைப்பெற்றுள்ளது .

 இங்கே
சிவாலயத்தில் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிற அம்பிகை முத்து
மரகதவல்லியின் கனிவான பார்வை கண்டு பெறும் பேறு பெறலாம்.

 ஸ்ரீ
மாகாளியம்மன் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது . கொங்கு
வேளார்ளர்களில் கண்ணன் ,பூச்சந்தை,கூறை,செம்பன் ,ஈஞ்சன் ,கீரை,பாண்டியன்ஆகிய ஏழு குலத்திற்கும் காக்கும் கடவுளாகவும் குலதெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள் .

திருக்கோவில் வளாகத்தில் தெய்வச்சேக்கிழார் ,நால்வர் ,
வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் ,சூரிய,சந்திரர்கள் ஸ்ரீ தேவி
பூதேவி அம்பிகைகள் சன்னதீ ,ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள் சன்னதி . ஸ்ரீ
ஆஞ்சநேயர் சன்னதிகள் கருடாழ்வார்,நாகர் சன்னதிகள் மற்றும்
திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்து பழமைமாறாமல்
புதுமையாக்கி இருக்கிறார்கள் .

 சைவ வைணவ ஒற்றுமை கலந்த
இத்திருக்கோவில்கள் கடந்த 15.7.13 மகா கும்பாபிஷேகம்
ஆன்மீகப்பெரீயோர்களால் நிகழ்த்தப்பெற்றது .

திருக்கோவில் பழங்காலத்தியஅரசமரம் ஸ்தலமரமாக விளங்கிவருகிறது .

முடிவுரை :

 ஸ்ரீ மூவேந்திரர்களால் வணங்கப்பெற்றதால் இது 1000வருடங்கள் கடந்த சிவாலயங்களில் ஒன்றாக பெருமையும் சிறப்பையும் பெறுகிறது . ஈரோடு மாவட்டத்தில் அமைந்த பழமையான சிவாலயங்களில் ஒன்றாகவும் ,சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும்
விளங்குகின்ற இப்பகுதிமக்களால் விரும்பி வணங்கப்படுகிற

மேற்கு பார்த்தஅமைப்பில் நிறைய விஷேசங்கள் கொண்ட நசியனூர் ஸ்ரீ முத்து மரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வர சுவாமியை வணங்கி எல்லா வளங்களும் நலங்களும்
பெற விழைகிறேன் .

 ஓம் சிவ சிவ ஓம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...