Sunday, April 29, 2012

குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா 18.4.12



கடந்த 18.4.2012 அன்று நமது குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா அழகாக தொடங்கியது. 26.2.1913ல் துவங்கிய துவக்கப்பள்ளி 100வது ஆண்டை துவங்கியது மகிழ்வான ஒன்றாகும் .

இந்த விழாவினை சிறப்பிக்க கல்வித்துறை அலுவலர்கள் ,கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் .தன்னார்வலர்கள் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் கலந்து கொள்ள 18.4.12 புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து முழங்க கொடியேற்றி துவங்கியது.

தாயகம் சிவ.சிவலிங்கம் கொடியேற்றி தலைமை தாங்கினார் . நூற்றாண்டு விழா வளைவை dr.ஜீவானந்தம் பசுமை இயக்கம் திறந்து வைக்க வாழ்த்துரை பல ஊர்பெரியோர்கள் வழங்க இனிதே நடைபெற்றது.

மாலை 3.00மணிக்கு குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தலைவி திருமதி என் .நீலாதேவி நடராஜன் அவர்கள் தலைமை தாங்க விழா இனிதே தொடர்ந்து நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று அழகாக நூற்றாண்டு விழாவை சிறப்பித்து நடத்திய இரா .வெங்கடாலசலம் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நல் விதமாக நடத்திமுடித்தது பாரட்டுக்குரியது.


பழங்காலத்தில் பள்ளிக்காக தானமாக இடம் வழங்கிய G.G குருமூர்த்தி EX M.L.A அவர்கள் நினைவாக நூற்றாண்டு விழா வளைவுத்தூண் அவர்கள் புதல்வர்கள் உருவாக்கப்பெற்றது. மாலை 6.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நம் பள்ளி குழந்தைகள் பலர் அழகாக கிராமிய நடனம் நடைபெற்றது.


பலர் வாழ்வில் ஏற்றங்களை ஏற்படுத்திய பள்ளி . இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து பல சாதனைகள் படைக்கட்டும் . மறுபடி பள்ளிப்பருவத்திற்கு சென்று வந்து உணர்வை ஏற்படுத்தியது.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...