சித்தர்களை தேடி பயணப்பது ஒர் சுகமான ஆன்மீக தேடல் ,ஆயினும் ஓர் பெண் சித்தர் ஜீவசமாதியை தரிசிக்க ஆர்வத்துடன் துவங்கியது நம்பயணம் .மாயம்மா அவர்களை தரிசிக்க சேலம் வந்ததோம். மாயம்மா பற்றி விபரங்களை தேட 1920 முதல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வாழ்ந்த அம்பிகை அம்சம் கொண்டவர், பெண் சித்தராக வாழ்ந்து பல அற்புதங்கள் செய்தவர் என்பதை அறிந்தேன். செல்லும் வழி : சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமா ஸ்டுடியோ அருகில், சேலம் சட்டக்கல்லூரி எதிரில் மாயம்மா ஜிவசமாதியாக அமைந்து அருள் பாலிக்கிறார்.9.2.1992 ஆம் நாள் மாயம்மா ஜீவசமாதியான நாளாகும். பல மனக்குழப்பத்தில் இருந்த எனக்கு சென்ற மாதம் மாயம்மாவை தரிசனம் செய்தவுடன் மனதில் அமைதி உண்டானதாக உணர்கிறேன். அம்பிகை அம்சமான தாய் மாயம்மாவை வணங்கி எல்லா நலனும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
Monday, June 22, 2015
அம்பிகை மாயம்மா ஜீவசமாதி
Subscribe to:
Posts (Atom)
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...