Tuesday, January 24, 2012

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்




அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் ,பண்ணாரி ,சத்தியமங்கலம்

SRI BANNARI MARIAMMAN TEMPLE , SATHYAMANGALAM ERODE D.T

அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் பல மாரியம்மன் ஆலயங்கள் இருந்தாலும் மிகப்பிரசித்திபெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் முக்கிய மான ஒன்றாகும் . ஈரோட்டில் இருந்தும் கோயம்புத்தூரில் இருந்தும் சுமார் 75 கி.மீட்டர் தொலைவிலும் சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மைசூர் ,தாளவாடி, செல்லும் வழியில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.


திருக்கோவில் உருவான வரலாறு :

சுமார் 500 வருட முன்பு பழங்காலத்தில் பசுக்களை மேய்த்து வந்த பசுமாட்டின் உரிமையாளர் ஓர் நாள் பசுமாடு அழகிய ஓர் இடத்தில் வேங்கை மரத்தடியில் பால் செரிவூட்டி வருவதை கண்டு(தற்போது திருக்கோவில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் அமைவிடத்தில் ) திகைப்புற்று

அப்பகுதி மக்களிடம் தாம் ஆச்சரியப்பட்ட விஷயத்தை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அடர்ந்த அழகிய வனத்தில் வேங்கை மரத்தின் அடியில் சுத்தம் செய்து பார்க்க அப்போது எல்லோரும் வியக்கும் வண்ணம் "சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் "வெளிப்பட்டார்.

அப்போது அருள் வந்த ஆன்மீகப் பெரியவர் " கேரளா கர்நாடக மங்களின் வழித்துணையாக வந்த அம்பிகை நான் இந்த அழகிய இடம் எமக்கு பிடித்திருப்பதால் இங்கேயே தங்கி விட்டேன் .என்னை ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் என அழைத்து பூஜை செய்யுங்கள் ". என வாக்கு சொல்ல அன்றிலிருந்து அம்பிகைக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று படிப்படியாக வளர்ச்சி பெற்று மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் .

மூலவர் :
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்

திருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் காலை 06.00மணி முதல் இரவு 09.00. மணிவரை செவ்வாய் வெள்ளி வழிபட உகந்த நாட்கள்

அம்பிகையின் அழகு:

தாமரைபீடத்தில் கத்தி,கபாலம் ,கலசங்களுடன் உயிர்ப்புடன் சக்தி அம்சமாய் பிரமாண்டாமாய் அழகாய் அருள்பாலிக்கும் அழகை காண்போர்க்கு சக்தியின் அருளை உணரலாம் .

குண்டம் திருவிழா :

பங்குனி மாதத்தில் வருடாந்திர விழாவாக குண்டம் திருவிழா நடைபெறுகிறது. அக்னி குண்டத்திற்கு தேவயான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை "கரும்பு வெட்டுதல் " என இப்பகுதில் அழைப்பார்கள் .

8 அடிக்குண்டத்தில் அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்க மதியம் 1 மணிவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பார்கள் . இதில் பல பக்தர்கள் ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் வேண்டுதல் நிறேவேறியதும் குண்டம் மிதிப்பது குறிப்பிட வேண்டியதாகும் .
பக்தர்கள் அல்லாது ஆடு மாடுகளை குண்டம் இறங்குவதை இங்கு கண்டு ஆச்சர்யப்படலாம் .

வேண்டும் வரமருளும் அம்பிகை:

தம்மைநாடி வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையை வணங்குவது கண்நோய் , அம்மை நோய்க்கள் தீர சிறப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது.

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் ஸ்தல சிறப்பு :

1.தெற்கு நோக்கிய அம்மன் கோவில்
2.தாமே தோன்றிய சுயம்பு மூர்த்தி

பிரசாதம் :
எல்லா திருக்கோவில்களிலும் திருநீரு பிரசாதமாக தருவார்கள் .
இங்கே "புற்று மணலையே விபூதி பிரசாதமாக "தருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் தரிசிக்கவேண்டிய இடங்கள் :
தெப்பக்கிணரும் ,அருகேயுள்ள சருகு மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி சன்னதிகளாகும் .

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்னையின் அருளாளே பெண்குழந்தை பிறந்தால் பண்ணாரி என பெயரிட்டு அன்புடன் அழைக்கிறார்கள். திருக்கோவில் கர்நாடகா .கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் பலபக்தர்கள் வந்து ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்வார்கள் .

சுயம்பு மூர்த்தீயாய் வெளிப்பட்ட பண்ணாரி மாரியம்மனை வந்து வழிபடுங்கள்.
அம்பிகை வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

4 comments:

Agarathan said...

இறைவன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் தல ...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

உங்களுக்கும் இறையருள் கிட்டட்டும் நன்பா

Sudhakar Shanmugam said...

பண்ணாரி அம்மன் பற்றி பதிவு அருமை. நினைத்தாலே சக்தி கொடுக்கும் ஸதலம் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஸ்தலம் தான் பண்ணாரி. முன்பெல்லாம் அடிக்கடி பண்ணாரி செல்லும் நான், கடந்த ஆறு மாதங்களாக பண்ணாரி அம்மனை தரிசிக்காத குறையை போக்கிவிட்டார் மாதேஸ். திரு மாதேஸ் அவர்களின் பதிவை படிக்கும் போது பண்ணாரிக்கு சென்று வழிபட்டதை போல் உணர்வு. பண்ணாரி அம்மனிடம் எது வேண்டினாலும் நடக்கும், அதுவே உங்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்காக வேண்டினால் உடனே நடக்கும். பல வருடங்களாக நான் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவில் குண்டம் இறங்கி வருகிறேன் (தீமிதி விழா) பார்பதற்கு கனல் போல் இருந்தாலும் சிறிதும் சுட்டதில்லை. பண்ணாரி அம்மன் அருள் இந்த பதிவை படிக்கும் அனைவருக்கும் கிடைக்க வழி செய்த மாதஸ் அவர்களுக்கு நன்றி. ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

சுதாகர் சண்முகம்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகளாயிரம் .ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கடைகண்ணால் பார்த்தவர்கள் இப்போது பெரும் செல்வந்தர்களாகி குண்டம் திருவிழாவுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நல்ல தானம் கொடுப்பது ஓர் சான்றே.அம்பிகையின் அருள் அனைவர்க்கும் கிட்டி அனைவரும் நல்வாழ்வு பெற வேண்டும்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...