Monday, April 15, 2013

ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில், நசியனூர் (நசியனூர் கொங்குவேளாளர் இனத்தில் கண்ணன் குலத்தார் குலதெய்வம் )

                      SRI APPATHAL TEMPLE, NASIYANUR பழங்காலத்தில் வாழ்ந்த முன்னோர்களை அவர்களையே பிரதிஷ்டை செய்து கடவுளாக வணங்கி வருகிற கோவில்கள் பல உண்டு .
அந்த வகையில் நசியனூரில் சுமார் 1000முதல் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த
திருக்கோவிலாக நசியனூர் அப்பத்தாள் திருக்கோவில் விளங்கி வருகிறது .


கொங்கு வேளாளர் இனத்தின் நசியனூர் கண்ணன் குல கோத்திரத்தின் குல தெய்வமாகnஇந்த திருக்கோவில் அமைந்துள்ளது . கொங்கு வேளாளர் அல்லாது இங்குள்ள  எல்லா சமுகத்தினரும் விரும்பி வணங்கிச்செல்கிற திருக்கோவிலாக நசியனூர் ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில் அமைந்துள்ளது .

மூலவர் அமைப்பு :


அம்மையும் அப்பனும் இணைந்துள்ள உருவச்சிலையாக பழங்காலத்தில் கண்ணன் குல முன்னோர்களான அப்பாவையும் +ஆத்தாவும் இணைந்து அருள்பாலிப்பதால் இத்திருக்கோவில் அப்பத்தாள் திருக்கோவில் எனப்பெயர் பெறுகிறது. தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிற திருக்கோவிலாகும் .

வார பூஜை;

வெள்ளிக்கிழமையன்றும்

 வருட பூஜை;

  மார்கழி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.


 திருக்கோவில் செல்ல வழி:

 ஈரோட்டில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள நசியனூர் வந்து திருக்கோவிலை அடையலாம் . சேலத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் பிரிவில் ஸ்ரீ அப்பத்தாள் திருக்கோவில் அமைந்துள்ளது .

சுற்றிலும் தென்னை மரங்கள் நிற்க திருக்கோவில் அமைதியான இடத்தில் அழகேஅமைந்துள்ளது. பழங்கால ஆலங்களில் பார்த்து வணங்க வேண்டிய ஆலயங்களில் நசியனூர் அப்பத்தாள் திருக்கோவிலும் ஒன்றாகும் .

நன்றி

Monday, April 8, 2013

"சிவ" லிங்கமாகிய இறைவனின் வகைகள்

                          Type of sivalingam's

சிவபெருமான் சைவ உலகின் நின்று உலகின் படைத்தல் ,காத்தல் , அழித்தல்
என்கிற முத்தொழிலையும் கொண்டு சைவர்களால் விரும்பி இறைஞ்சி வேண்டுகிறவர். சிவன் எங்கும் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . சிவ லிங்கத்தில்  இரண்டு வகையுண்டு.

 அது பரார்த்த லிங்கம் மற்றும் இட்டலிங்கமாகும் .
பரார்த்த லிங்கத்தில் ஐந்து வகையுண்டு . அவைகள் பின் வருமாறு
குறிப்பிடப்படுகிறது.

 சுயம்பு லிங்கம் ( இருக்கும் நிலை ) : தாமாக

தோன்றிய திருவுருவங்களே சுயம்பு லிங்கங்கள் என அழைக்கப்படுகிறது.
சுயம்பாக தோன்றுகிற லிங்கத்தை சுயம்பு லிங்கமென சிவனடியார்களால் தேடி விரும்பி வணங்கப்படுகிறது.

 பல ஸ்தல புராணங்கள் காராம் பசு குறிப்பிட்ட இடத்தில் பால் செரிய அங்கே தோண்டினால் சுயம்பு லிங்கம் இருக்கும் .அதுபோல லிங்கம் சுயமாக தோன்றி மக்களால் கண்டு வணங்கப்படுகிறது . சுயம்பு லிங்கங்கள் விசேசமானதாகும்


 கணலிங்கம் :


 சிவகணங்களான ஸ்ரீவிநாயகர் ,ஸ்ரீ முருகர், ஆகியோரால்
பூஜிக்கப்பட்டு வணங்கப்படுகிற லிங்கங்கமாகும் .

 தெய்வீகலிங்கம் : (நடக்கும் நிலை ) 


விஷ்ணு முதலிய தேவாதி தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு
வணங்கப்பட்ட லிங்களாகும் .

 ஆரிடலிங்கம் :

அசுரர்கள் ,இருடிகள்,ராட்ஷசர்களால உருவாக்கப்பட்டு வணங்கப் பெற்ற லிங்கமாகும் 

 .

மானிடலிங்கம் : 


சித்தர்களால் ,அடியார்களால் ,இறைநிலையில் வாழ்ந்த
பெரியோர்களால் உருவாக்கம் செய்யப்பட்டு வணங்கி வந்த லிங்கம்மாகும்..

விஷேசமாக

உயர்வான லிங்கம் : 


 மானிட லிங்கத்தை விட உயர்ந்தது ஆரிடலிங்கம் ,
அதனிலும் உயர்ந்தது தெய்வீக லிங்கம் அதனினும் உயர்ந்தது கணலிங்கம்
அதனினும் உயர்ந்தது சுயம்புலிங்கமாகும் .

 இட்டலிங்கங்கள் :


 வாணலிங்கம்
.படிகலிங்கம் ,
இரத்தினலிங்கம் ,
லோக்ஜலிங்கம் ,சைல லிங்கம்
ஆகிய
ஐந்தாகும் .

 முடிவுரை :

 சிவ லிங்கமாகிய சிவபெருமானின் இந்தபதிவு என்
அளவில் சேர்த்துள்ளேன் . குறைகள் இருப்பின் ஆன்மீகப் பெரியோர்கள்
சுட்டிக்காட்டலில் திருத்தப்படும் . மற்றபடி எம் பதிவை படிக்க வந்த
உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டுகிறேன் .

 நன்றிகளாயிரம் .

 ஓம் சிவசிவ
ஓம்

Saturday, April 6, 2013

பிறந்த தமிழ் வருடத்திற்கேற்ற விருட்ச பரிகாரம்

மழை இல்லாது நாடே வாடிக்கொண்டிருக்கையில் குடிதண்ணீர்க்கான நிலத்தடி நீர்மட்டம் 1000அடிக்கு கீழே போய் கொண்டிருக்கிறது. மரம் நடுங்கள் என எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்க ,விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க ஒரு சிலரே மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் .

 ஆளுக்கொரு மரம் நட்டாலே 6 கோடி மரங்கள் நடப்படும் என்பது சாத்தியமே. பலவிதமான பரிகாரங்கள் மனிதன் செய்கிறபோது உருப்படியான சமுகத்திற்கும் நமக்கும் உதவுகின்ற  பரிகாரமாக இந்த மரம் வளர்ப்பு பரிகாரத்தை செய்யலாம் .

   பிறந்த தேதி வருடம் ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் ,தமிழ் வருடம் மட்டும்
தெரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய தான் பிறந்த தமிழ்
வருடத்திற்குண்டான மரத்தை குறைந்த பட்சம் 3,6,11 எண்ணிக்கையில்
நடவேண்டும் .

எங்கு நடுவது :

 அதிக இடமுள்ள ஆலயங்கள் ,பொது இடங்கள் ,
பள்ளி,கல்லூரிகள் ,ஆற்றங்கரை , தர்ம ஸ்தாபனங்கள் , மலைப்பாங்கான
இடங்களில் நடலாம் .

எப்படி நடுவது : 

இரண்டரை அடி ஆழம் ஒன்றரை அடி அகலம்
கொண்ட குழி வெட்டி அதனுள் காய்ந்த தழை தாம்புகளுடன் வேர் நன்கு இறங்க மணல் செம்மண் கலந்த கலவையை இறைத்து பசுசாணம் கலவை இணைத்து மரத்தை நடவு செய்யலாம் .

நல்லது செய்ய நாள் நட்சத்திரம் பார்க்க தேவையில்லை என்பது நம் தாழ்மையான கருத்து .சூரிய உதயமாகி அஸ்தமனத்திற்குள் நடவேண்டும் .
நவதானியங்களை ஊற வைத்து அந்த நீரினை நட்ட மரக்கன்றுக்கு விட்டு
நவதானியத்தை பசு மாட்டிற்கு தீனியாக்கவும் .

 இனி பிறந்த தமிழ்வருடங்களும் நடவேண்டிய மரங்களையும் பார்ப்போம் 


1 . பிரபவ -கருங்காலி
2.விபவ -அக்ரோட்
3. சுக்ல - அசோகமரம்
4.பிரமோ தூத -அத்தி
5.பிரஜோத்பத்தி-பேய் அத்தி
6. ஆங்கிரச-அரசு
7.ஸ்ரீமுக- அரைநெல்லி
8. பவ-அல்யாத்தி
9.யுவ-அழிஞ்சில்
10. தாது -ஆச்சாமரம்
11.ஈஸ்வர-ஆலமரம்
12. வெகுதான்ய-இலந்தை
13.பிரமாதி -தாளை பனைமரம்
14.விக்ரம - இலுப்பை
15.விஷு-ருத்ராட்ஷம்
16.சித்ரபானு-எட்டி
17.ஷ்வபானு-ஓதியம்
18.தாரண-கடுக்காய்
19.பார்த்திவ-கருங்காலி
20.விய-கருவேலம்
21.சர்வஜித்-பரம்பை
22. சர்வதாரி - குல்மோஹர்
23. விரோதி - கூந்தல் பனை
24.விக்ருதி- சரக்கொன்றை
25.சுர-வாகை
26. நந்தன -செண்பகம்
27.விஜய -சந்தனம்
28.ஜய-சிறுநாகப்பூ
29.மன்மத- தூங்கு மூஞ்சி
30.துர்மிகி - நஞ்சுண்டா
31.ஏவிம்பி-நந்தியாவட்டம்
32.விளம்பி-நாகலிங்கம்
33.விகாரி -நாவல்
34.சார்வரி-நுணா
35. பிலவ-நெல்லி
36. சுபகிருது-பலா
37. சோபகிருது -பவழமல்லி
38.குரோதி-புங்கம்
39. விசுவாசக- புத்திரசீவிமரம்
40. பராபவ-புரசு
41. பிலவங்க -புளியமரம்
42. கீலக -புன்னை
43.சவுமிய- பூவரசு
44.சாதாரண -மகிழம்
45.விரோதிகிருத்- மஞ்சகடம்பை
46.பரிதாபி -மராமரம்
47.பிரமாதீச-மருது
48. ஆனந்த -மலைவேம்பு
49.ராட்சஷ - மாமரம்
50. நள-முசுக்கொட்டை
51. பிங்கள - முந்திரி
52. காளயுக்தி -கொழுக்கொட்டை மந்தாரை
53. சித்தார்த்தி - தேவதாரு
54. ரவுத்ரி -பனைமரம்
55. துர்மதி - ராமன்சீதா
56. துன்துபி- மஞ்சள் கொன்றை
57. ருத்ரோத்காரி - சிம்சுபா
58 .ரக்தாட்சி - ஆலசி
59. குரோதன - சிவப்பு மந்தாரை
60 .அட்சய -வெண்தேக்கு


இறைவழிபாட்டுடன் இணைந்த மரங்கள் : 


 பஞ்சசமிதிகள் :

1.ஆலமரம் 
2.அரசமரம்
3.அத்தி மரம்
4. மாமரம்
 5. வன்னி மரம்

 ஆகிய மரங்களின் சுள்ளிகள்
பஞ்சசமிதை என அழைக்கப்படுகிறது.

 பஞ்சவடி :


1.ஆலமரம்
2. அரசமரம்
3.மாமரம்
4. நெல்லிமரம்
5.வில்வமரம்
ஆகிய ஐந்து மரங்களும் கூடியுள்ள
இடத்திற்கு பஞ்சவடி என்று பொருள்படும் .

பஞ்சவில்வங்கள் : 


1.மாவிலங்கம்
2.விளா
3.கிளுவை
4. நொச்சி
5. வில்வம்
 இவற்றில் ஒவ்வொன்றும் மூன்றிதல்கள்
கொண்டது பூஜைக்குரியதாக புராணங்கள் உரைக்கின்றன .

 முடிவுரை :

மரங்களுக்கும் உயிர் உண்டு . அதனை நாம் வளர்த்து அதன் மூலம்
கோடிக்கணக்கான மக்கள் சுவாசிப்பதால் உண்மையான புண்ணிய பலன் மரம்
நட்டவர்க்கு கிட்டி மரம் செழிக்க உங்கள் குடும்பமும் செழிக்குமென்று
நம்புங்கள்.

மேற்கண்ட மரங்களைத்தான் நடவேண்டுமென்பதில் உங்களுக்கு
மாற்றுக்கருத்து இருக்குமெனில் ஏதேனும் ஓர் மரம் நடுங்கள் .
நடுவீர்கள்.

ஏனெனில் உங்களால் முடியாதது உலகில் யாராலும் முடியாது. 

 நன்றி