Saturday, January 7, 2012

காவிரி நதியில் மிதந்து காட்சிதரும் ஸ்ரீ நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவில்





அருள்மிகு ஸ்ரீ நட்டாற்றீஷ்வரர் திருக்கோவில் .காங்கேயம் பாளையம் ஈரோடு மாவட்டம்
SRI NATTATRIESWARAR TEMPLE, kangayampalayam, erode



காவிரி நதிக்கரையில் புகழ் பெற்ற பல சிவலாயங்கள் உள்ளன. அவற்றில் பழமையான ஸ்ரீ நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாகும் .

திருக்கோவில் செல்லும் வழி :

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் வழியில் 15 கி.மீட்டர் காங்கேயம் பாளையம் என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரரை தரிசனம் செய்யலாம்

திருக்கோவில் மூலவர்: நட்டாற்றீஷ்வரர் ( NATTATRIESWARAR )

திருக்கோவில் பெயர் காரணம் :

காவிரி நதியில் நடுப்பகுதியில் அமைந்துள்ளதாலும் ,திருக்கோவில் சுற்றிலும் காவிரி நதி ஓட நடுப்பகுதி ஆற்றில் திருக்கோவில் அமைந்திருப்பதால் நற்றாற்றிஷ்வரர் (நடு+ஆறு+ ஈஸ்வரர் ) என அழைக்கப்படுகிறது .

திருக்கோவில் அமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவாலயமாகவும் ,பழங்கால திருக்கோவிலை சீர் செய்து அழகாக உருவாக்கியுள்ளார்கள் .ஈரோட்டில் இருந்து காங்கேயம்பாளையம் வழியாக வரும் பக்தர்கள் வசதிகாக திருக்கோவில் வர பாதை தயாராகி வருகிறது.

ஸ்தலமரமாக ஆத்திமரம் உள்ளது.

திருக்கோவில் சிறப்புகள் :

சித்தர்களில் ஒருவரான அகத்தியரால் பூஜித்து, வழிபட்ட பாடல் பெற்ற சிவலாயம். அதனாலேயே மூலவர் நட்டாற்றீஷ்வரர் எதிரே அமைந்த நந்தீஷ்வரர் பின்புறம் அகத்தியர் திருவுருவச்சிலை அமைத்து சிறப்பித்துள்ளார்கள் .

காவிரி நதியின் நடுவில் ஆற்றினுள் அமைந்த ஒரே சிவஷ்தலம் . 6300 ஆண்டுகள் பழமையான சிவலாயமென புகழப்படுகின்ற சிவாலயம் .

ஈரோடு மாவட்டத்தில் காவிரி நதிக்கரையின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்று ஈஸ்வரர் திருக்கோவிலை வந்து பாருங்கள் . இறைவன் அருள் பெற்றுச்செல்லுங்கள். அருள்மிகு ஸ்ரீ நட்டாற்று ஈஷ்வரர் அருளால் எல்லா வளமும் பெற்று உய்ய வேண்டுகிறேன் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...