Sunday, June 9, 2013

மருதமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோவில்

       
sri subramaniyar thirukovil maruthamalai coimbatore  

 நீண்ட நாட்களாகவே கோவையில் உள்ள பழமையான முருகர் கோவிலுக்கு சென்றுபதிவிட வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க இதற்கு முன்பல முறை சென்று இருந்தாலும் தற்போது புதிதாய் பொலிவாய் அழகுபடுத்தியமருதமலை திருக்கோவில் காலங்கள் பல கடந்த அற்புதம்..  .

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுமார் 700அடி உயரத்தில் மலைக்குன்றின் மையத்தில்அமைந்த திருக்கோவிலாகும் . கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற முருகர்கோவில்களில் முதன்மையானது. கோவை நகருக்கு வடமேற்கு எல்லையாக மருதமலை
அமைந்துள்ளது.

 கோவையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளமலைமேல் அமர்ந்திருக்கிற மருதமலை முருகப்பெருமான் ஆலயம் . பாரதியார்பல்கலைகழகம் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் , சட்டக்கல்லூரி என  மருதமலை செல்லும் ரோடு முக்கியமான ஒன்றாகும் .

 அடிவாரத்தில் இறங்கி நடக்க அடிவார முன்மண்டபத்தில் இருந்து இடது புறம் தென்கிழக்கேஅமையப்பெற்றுள்ள வள்ளியம்மன் ஆலயம் இங்கு வள்ளியம்மன் கிழக்குமுகமாகஅருள்பாலிக்கிறார் , அதன்பின்னாக மலைப்பகுதியின் முகப்பு முன்மண்டபம் அமைந்துள்ளது .



பின் நடந்து சென்றால் எங்குமில்லாத விஷேசமாக தான் தோன்றி
விநாயகர் சுயம்பு மூர்த்தியாக படிக்கட்டுப்பாதையில் சற்று தூரத்தில்
அமர்ந்து அருள்பாலிக்கிறார் . பழங்காலத்தில் கொங்கு நாடு 24 பிரிவுகளாக
பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஓர் பிரிவான ஆறைநாட்டின் எல்லையாக மருதமலைஇருந்தது சுமார் 1000ஆண்டுகள் வரலாறு ..

.படிக்கட்டுப்பாதையில் சான்டோ சின்னப்ப தேவரால் சில இளைப்பாறும்
மண்டபங்கள் கடந்து சென்றால் இடும்பர் சன்னதியை அடைந்து வணங்கி நின்றால் திருக்கோவில் அருகே வந்து விட்ட உணர்வு நம்மில் எழுகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 840 படிகள் உள்ளன..

 ஆங்காங்கே இருளர்கள் மலைவாழ் மக்களின்குடியிருப்புகள் கடந்து மருதமலை திருக்கோவில் முகப்பில் உள்ள

 "பஞ்சவிருட்ஷ விநாயகர் " சன்னதி . 


எங்கும் இல்லாத இந்த விநாயகரின் பின்புறம்
அரசமரம்,ஆலமரம் ,வேம்பு, வக்கணை ,நுணா ஆகிய 5 மரங்கள் இருப்பது மிகுந்தவிஷேச அமைப்பாகும் ..அதனால் பஞ்சபூத விருட்சம் என இம்மரங்கள்
அழைக்கப்படுகிறது . இவ்விடம் அரசுமரமேடை என்றும் கூறப்படுகிறது ,
சுமார் 30நிமிடங்களில் திருக்கோவிலை நடந்து சென்று விடலாம் .
நடக்கமுடியாதவர்களாக அறங்காவலர் குழுவால் பஸ்கள் இயக்கப்படுகிறது


திருக்கோவில் அமைப்பு : 


 மருதமலை கிழக்கு பார்த்த திருக்கோவிலாகும்
ராஜகோபுரம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு அழகாய் விரிவாக்கம் செய்து
படிக்கட்டுகள் அழகாக அமைக்கப்படுள்ளது. கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால்ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி அழகின் உருவேஅருள்பாலிக்கிறார் .

 திருக்கோவில் மூலஸ்தானத்திற்கும் பாம்பாட்டி
சித்தர் குகைக்கும் வழி இருப்பதாகவும் அதில் சித்தர் தினமும் இறைவனை
வணங்கி வருவதாக ஐதீகம் .வேண்டுவார் வேண்டும் வரம் அருளும்
முருகப்பெருமான் நின்ற நிலையில் கோவை மக்களின் துயர்
துடைத்துக்கொண்டிருக்கிறார்.

பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் வந்து அருள் பெருகின்றனர் . மூலவர் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியை வணங்கிபின் வெளியே வந்தால் ஸ்ரீ பட்டீஷ்வரர் சன்னதி அமைந்துள்ளது . இங்குஇருந்து சற்று தூரத்தில் கீழ்நோக்கி நடந்தால் பாம்பாட்டி சித்தரின் தவக்குகை திருச்சன்னதி அமைந்துள்ளது அடுத்த பதிவில் பாம்பாட்டி சித்தர்வருவார் .

 பாம்பாட்டி சித்தர் குகைக்கு செல்லும் வழியில் கன்னிமார்
திருக்கோவிலும் அமையப்பெற்றுள்ளது .சுற்றி வர மரகதாம்பிகை சன்னதியைதரிசிக்கலாம் . அதன்பின் நவகிரகம் , சிறிய ஸ்ரீ வரதராஜபெருமாள்
சன்னதியும் வணங்கவும் , அழகின் உருவமும் பேரமைதியும் கொண்டதால்
கோவைமாவட்ட ஆன்மீக சுற்றுலா ஸ்தலமாக மருதமலை அமைந்துள்ளது.


பாடல் பெற்ற ஸ்தலம் : 


ஸ்ரீ அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்
.ஸ்ரீ கச்சியப்ப முனிவர் , ஸ்ரீமத்குமரகுருதாச சாமிகள் ஆகியோரால் பாடல்
பெற்ற ஸ்தலமாகும் .

மருதமலை :


 மருதமரங்கள் நிறைந்த காரணத்தால் மருதமலை
எனப் பெயர்காரணம் வந்ததாக கருதப்படுகிறது . ஸ்ரீ சுப்பிரமணியர்க்கு
இங்கே மருதமலையான் , மருதாசலம் ,மருதன் என்ற திருநாமங்கள் உண்டு . கோவைமாவட்ட மக்கள் பலர்க்கும் மருதாசலம் மருதன் பெயர் உண்டு என்பதிலேயேமுருகரின் அருட்பார்வை புரியும் .

அவினாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டிஸ்தலத்தில் மருதமலை பற்றிய கல்வெட்டுகள் கி.பி 1150ன் கல்வெட்டுகள்
இருப்பதைக்காணலாம் .


தீர்த்தங்கள் : 


பழங்காலத்தில் மருத தீர்த்தம் ,கந்த தீர்த்தம் , ஆகிய
தீர்த்தங்கள் இருந்ததாக காணப்படுகிறது. மருதமலையில் பல மூலிகைகள்
இருந்ததாம் , இரவில் ஒளிரும் ஜோதிபுற்கள் ,நாகதாளி ,நாக நந்தா ஆகியன
பழங்காலத்திருந்ததாம்.

 ஸ்தல விருட்ஷம் : 


மருதமரம்

விஷேச நாட்கள் : 


எல்லா நாட்களிலிம் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது .
சித்திரை வருடப்பிறப்பு, வைகாசிவிசாகம் . சூரசம்ஹாரத்திருவிழா ,
கார்த்திகை தீபவிழா, தைப்பூச நாட்களில் மிகுந்த விஷேச நாட்களாகும் .


முடிவுரை : 


கொங்கு நாட்டில் மருதமலை தரிசிக்க வேண்டிய ஆலயம் .
வாய்ப்பு கிடைக்கையில் சென்று ஸ்ரீ சுப்பிரமணியரையும் பாம்பாட்டி சித்தரை
வணங்கி விட்டு வாருங்கள் . அவர் உங்கள் இன்னல்களை தீர்ப்பார் . நன்றிகள்
பல

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...