Sunday, June 30, 2013

ஸ்ரீ சுந்தாராம்பிகை உடனமர் ஸ்ரீ சோழிஸ்வரர் திருக்கோவில் கருங்கல் பாளையம் ஈரோடு

ஸ்ரீ சுந்தராம்பிகைஉடனமர் அருள்மிகு சோழிஷ்வரர் திருக்கோவில் ஈரோட்டில்இருந்து பள்ளிபாளையம் செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில்அமைந்துள்ளது. சுமார் ஈரோட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது .


 சிறப்பு : 


காசிக்கு நிகரான ஸ்தலமாக கருதப்படுகிற திருக்கோவில் அருகே ருத்ரபூமி எனப்படுகிற பிரமீடு மயானம்அமைந்துள்ளதால் இது விஷேசமாக கருதப்படுகிறது.


 இறைவன் :      ஸ்ரீ சோழிஷ்வரர்

பிரதிஷ்டை செய்யப்பட்ட பழங்காலத்திய லிங்கமாகும்

 இறைவி :  ஸ்ரீசுந்தராம்பிகை 



 ஈசனின் முகத்தில் தோன்றிய கிரகங்கள் இந்திரன்,அக்னி,எமன் .நிருருதி வருணன் வாயு குபேரன் , ஈசானன் ,சூரியன்,சந்திரன் பத்து திக்கு பாலகர்கள்களுக்கும் தீபம் வைத்து வழிபட்டால்முன்வினை தோஷம் , ஊழ்வினை, வம்சவிருத்தி , ஆகியவை நீங்கி நல் வாழ்வுபெறுவது உறுதியாகும் .


 அமாவாசை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகுந்த விஷேசமாகும் . சிவன் அல்லாது ,இங்கே ஸ்ரீ லட்சுமி நாராயணன் தனிச்சன்னதியில் அஷ்ட லட்சுமிகளுடன் வீற்றிருக்கிறார் . ஸ்ரீகஜலட்சுமி தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார் , நவகிரகங்கள் ,தட்சிணாமூர்த்தி , பெரிய விநாயகர் ,நாயன்மார்கள் , என சிவாலயத்தின்
அமைப்பில் ஒருங்கே அமையப்பெற்றது .

ஸ்தலமரம் : மாமரம் 

இந்த மரத்தில் ஒருபகுதி கற்பூர சுவையுடனும் மறுபுறம் இனிப்புச்சுவையும் உடையதுகாணற்கரியது.

திருக்கோவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வில் இருப்பதால் யாரால்பிரதிஷ்டை செய்யப்பட்டது என அறிய இயலாவிடினும் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது . திருக்கோவில் சுற்றி வில்வம் உட்பட பலஆன்மீக மரங்கள் நிறைந்துள்ளது .


திருக்கோவில் அமைப்பு : 


திருக்கோவில் மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார் .எதிரே வடக்கிருந்து தெற்காக காவிரி ஆறு ஓடுகிறது. திருக்கோவில் வலப்புறம் மயானம் என்னும்  சுடுகாடு அமைந்துள்ளது. காவிரி ஆற்றிப்படுகையில்
பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஷ்வரருக்கு அடுத்து காவிரியின் படுகையில்
அமைந்த சிவாலயமாகும் .

 திருக்கோவில் முகப்பில் கொடிமரம் ஸ்ரீ
நந்தியம்பெருமான் , மூலவரான சிவலிங்கமாகி ஸ்ரீ சோழிஷ்வரர்
அருள்பாலிக்கிறார் . ஸ்ரீ சுந்தராம்பிகை தெற்கு பார்த்து இருக்கிறார் .
இது ஓர் விஷேச அமைப்பாகும் .

பூஜைகள் : 

காலை 6 .00 முதல் 11.00வரையிலும் மாலை 4.00 முதல் 7. 00 மணி வரையிலும் திறக்கப்பட்டு இருக்கும் . சோமவாரமான திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

முடிவுரை :



காவிரிக்கரையில் எழில் மிகுந்த சூழலில் அமைந்த சிவாலயமாகும் . ஏதேனும்
ஓர் பிரதோஷ நாளில் பாலபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...