Friday, May 24, 2013

தேர்வு என்பது முடிவல்ல

அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு பலருக்கு மகிழ்ச்சியை
அளித்தாலும்,செய்தித் தாள்களில் ஆங்காங்கே தேர்வு முடிவு வெளியானதும்
சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்திற்குரியது. அதற்கு சில காரணங்களை ஆய்வு செய்வோம்

 1. பெற்றோர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு :


படிக்கின்ற எல்லா மாணவர்களும் டாக்டர் ,என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆவல்எல்லா பெற்றோர்களுக்கும் இருந்தாலும் ,அது குழந்தைகளின் படிக்கும்
திறனைப் பொறுத்ததே , வெறுமனே படி படி என வலியுறுத்தாமல,

அதிகபட்சம் மதிப்பெண் எடுக்க தேவையான வழிவகுத்தல்,போன்ற வற்றைச்செய்யலாம் . ஆகஅதிகபட்ச பெற்றோரின் எதிர்பார்ப்பு மதிப்பெண் வாங்காத நிலையில்ஏமாற்றமாவது குழந்தையின் எதிர்காலத்தை பாதித்து தற்கொலைக்கு தூண்டுகிறது.


2.சுயமாக வளர விடுங்கள் : 


பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் டாக்டர்
,என்ஜினியர் போன்றவற்றை மட்டுமே விரும்புகின்றனர் . ஆனால்
மாணவ,மாணவிகளின் விருப்பம் என்னவாக தான் விரும்புகிறார்கள் என்பதைப் கண்டு அதே படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கை வைப்பது நல்லது


3.       தட்டிக்கொடுங்கள் :


 குறைந்த மதிப்பெண்கள் காலண்டு அரையாண்டு தேர்வில்
எடுத்தாலும் திட்டாமல் நல்ல மதிப்பெண் எடுக்க தட்டிக்கொடுங்கள் . அது
மதிப்பெண்கள் எடுக்க உதவும் .

4..சின்ன சின்ன பரிசுகள் : 

நல்ல மதிப்பெண்எடுத்து வருகின்ற குழந்தைகளுக்கு 
சின்ன சின்ன பரிசுகள் கொடுங்கள் .


5..விளையாட்டு : 


தினமும் மாணவர்கள் சற்று நேரம் விளையாட விடுங்கள் அது
மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்

6.. இறை வழிபாடு :


 அவ்வப்போது மனதை
ரிலாக்ஸ் செய்ய திருக்கோவில் கூட்டிச்செல்லுங்கள் . தன்னம்பிக்கையுடைய
குழந்தையாக உருவாக்குங்கள் .

 மாணவர்களே , 


10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு என்பது 1வருடத்திய தவம் போல அது உங்கள் எதிர்கால வாழ்க்கையை  தீர்மானிக்கும் என்றாலும் கூட மதிப்பெண் குறைவதால் தற்கொலைக்கு முயற்சிப்பது நமது குடும்பத்தை வெகுவாக பாதிக்கும் . படிக்காத எத்தனையோ பேர் மிகப்பெரிய சாதனையாளர் ஆகி இருக்கிறார்கள் .வாழ்க்கை பயணம் நீண்ட தொலைவு அதில் தேர்வு என்பது முடிவாகாது ..

 இன்றைய உலகின் முதல் பணக்காரர்

பில்கேட்ஸ் 


கூறிய இந்த பொன் வரியை வாசியுங்கள்

 " என்னுடன் படித்த நிறையபடிப்பாளிகள் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் மைக்ரோ சாப்ட்நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .மிதமாக படித்த நானோ மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதலாளியாக இருக்கிறேன் "

ஆக தேர்வும் படிப்பும் அறிவையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளத்தானே
தவிர அவையே வாழ்வின் முடிவாகது .

தற்கொலைகளை தவிர்த்து

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் . 


நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...