Monday, May 7, 2012

ஈரோட்டில் அருள்பாலிக்கும் அம்பிகை



ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில்



அபிராமி அந்தாதி :

தனம் தரும்கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்தெய்வ வடிவம் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

- அபிராமி பட்டர்


ஈரோட்டின் காவல் தெய்வமாக ஈரோடு மக்களால் விரும்பி வணங்குகின்ற மாரியம்மன் திருக்கோவிலாகும் .

அமைவிடம் :

பழங்காலத்தில் பூந்துறை நாட்டின் ஓர் பகுதியான ஈரோட்டை பல அரசர்கள் ஆண்டு வந்தனர் . அரசர்கள் வாழ்ந்த இடங்கள் கோட்டை இருப்பது நாம் அறிந்ததே ,அவ்வகையில் தற்போது உள்ள ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதி பழங்காலத்தில் கோட்டையாக இருந்தது . அதற்கு உதாரணமாக கோட்டை ஈஸ்வரர் திருக்கோவில் , ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ,ஸ்ரீகோட்டை பெருமாள் கோவில் என பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் தான் பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .


மூலவர்:

ஸ்ரீ பெரிய மாரியம்மன் வடக்கு பார்த்த விஷேச அமைப்பான மாரியம்மன் ஆகும் . முகப்பில் அர்த்த மண்டபத்தில் காவல் தெய்வங்களான ஆண் பெண் பூதக்கணங்களை வணங்கி விட்டு அழகிய நிலையில் அம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது பிரமிப்பாகும் .

கரங்களில் நாகபந்தனத்துடன் உடுக்கை, பாசம் ,கபாலம் கத்திகள் உள்ளன . பெரிய மாரியம்மன் பரசுராமர் திருமேனியில் காட்சியளிப்பதாக பழங்கால இதிகாசங்கள் இயம்புகின்றன.

பூஜை நேரங்கள் :
காலை 06.00மணிக்கு சந்திபூஜையும்
மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 06.00மணிக்கு சாயரட்ஷை பூஜையும்


தினமும் பூஜை நடைபெற்றாலும் அம்மனுக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும் .

ஸ்தலமரம் :

அம்பிகைக்கு உரிய வேம்பு ஸ்தலமரமாக அமைந்துள்ளது.

வருடபூஜை :

பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 1 ஆம் நாள் துவங்கி 20நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. கடைசிநாளில் கம்பம் பிடுங்கும் விழா 19நாள் லட்சம் மக்கள் கூட முக்கிய வீதிகளில் கம்பம் செல்லப்பட்டு ஈரோடே அதிர கம்பங்களுக்கு உப்பு வீச காளிங்கராயன் வாய்க்காலில் கொண்டு சென்று விட்டு வருவார்கள் . 20 ஆம் நாள் மறுபூஜையுடன் வருடாந்திர பூஜை முடிவு பெறும் .

பெரிய மாரியம் மன் வகையறா திருக்கோவில்கள் :

ஸ்ரீ சின்னமாரியம்மன் திருக்கோவில் பெரியார் வீதியில் அமைந்துள்ளது. காரை வாய்க்கால் மேற்புறப் பகுதியில் ஸ்ரீவாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களும் பங்குனி மாதத்தில் பெரிய மாரியம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்குகின்ற திருக்கோவிலாகும் . இந்த இரு மாரியம்மன் திருக்கோவிலும் விஷேசமானதே .

பெரிய மாரியம்மனை விரிவாக இணையத்தில் பார்த்து வணங்க : www.erodeperiamariamman.info.in

வலைத்தளத்தில் காணலாம் .

பெரிய மாரியம்மன் வணங்குவதின்பலன் :

ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று வழிபடும்போது பல்விதமான பலன்கள் ஏற்படும் அவ்வகையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன வணங்குவதால் குழந்தைவரம் ,நோய் நிவாரணி , தொழில் சிறப்பு உள்ளிட்ட வேண்டுவோர் வேண்டும் வரமளிக்கும் அம்பிகையாக ஸ்ரீ பெரியமாரியம்மன் விளங்குகிறது ,

அதற்கு சாட்சியாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வருடாந்திர பூஜை நடக்கும் 20நாட்களும் கேழ்வரகு கூழ் , அன்னதானம் , மோர் , தாகம் தணிக்க நீர் என மக்களுக்கு வேண்டியதை செய்கின்றனர் .

முடிவுரை :

ஈரோடு மக்களின் விரும்பி வணங்குற அம்பிகை பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . வடக்கு பார்த்த அம்மனாக விஷேச நிலையிலும் ஈரோட்டில் பல மாரியம்மன் திருக்கோவில்கள் அமைந்திருந்தாலும் ,
எல்லோர்க்கும் பெரியவளாக விளங்கும் அம்பிகை ஸ்ரீ பெரிய மாரியம்மனை வணங்கி வளங்களை எப்பதோதேனும் ஈரோடு வந்தால் வணங்கி விட்டுச்செல்லுங்கள் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...