Monday, September 26, 2011

நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராஎன் அனுபவத்தை கேளுங்கள் !


நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவரா? கண்டிப்பாக இந்த இடுகை உங்களுக்காத்தான். பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க என் நன்பர் அழைத்தார் ,என் முக்கியமான தேவைக்காக வைத்திருந்த பணம் ரூ 20,000 எடுத்துக்கொண்டு நாமும் அம்பானி மாதிரி பெரிய ஆளா வரணும்னு கனவோடு பான்கார்டு எடுத்து செக்புக் உடன் கிளம்பி ஓர் ஷேர் புரோக்கரிடம் தஞ்சம் ஆனேன்.

அவரும் எனக்காக ஓர் மிண்ணணு கணக்கு வங்கியை ஆரம்பித்துக்கொடுத்தார்,அப்போது சென்செக்ஸ் 21000 புள்ளிகளை தொட்டுக்கொண்டிருந்தகாலம் அது. 2007 ஆம் வருடத்தின் இறுதியில் என நினைக்கிறேன்.கேள்வி ஞானமும் சிறிதளவு பங்குச்சந்தை பற்றிய புத்தகங்கள் படித்ததின் ஞானத்தை (?) வைத்துக்கொண்டு எல்லா பணத்தையும் (20,000) ஒரே நேரத்தில் முதலீடு செய்து விட்டு ஐந்து மாதம் கழித்து அது 40,000 ரூபாய்க்கும் பக்கமாய் வளர்ந்திருந்தது. அட நம்ம டேலண்ட் தான் போலிருக்கு ! என சந்தோஷப்பட்டு நான் வேறு வேளைகளில் கவனத்தில் இருந்த நேரம் திடிரென உலகப்பொருளாதார மந்தம் என பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. நான் சுதாரித்து பங்கை விற்றுவிடலாம் என நினைக்கையில் ஒரே வாரத்தில் சென்செக்ஸ் 6000 புள்ளிகளை இழந்து எனது பணம் ரூ10,000மட்டுமே இருந்தது. பணம் எனக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் பலகோடிகள் அந்த நாட்களில் காணமல் போனது.

சரி இழந்த பணத்தை எப்படி மீட்பதென தனியாய் உட்கார்ந்து யோசித்து இருந்த மொத்த பங்குகளையும் விற்று விட்டு ஒரே பங்கு மட்டும் தேர்வு செய்து 200 வாங்கி என் கணக்கில் வைத்து விட்டு 2 வருடம் காத்திருந்து என் அசல் 20,000ஐ எடுத்து விட்டு வந்துவிட்டேன்.! முழுவதுமாக வந்துவிடவில்லை.என் அனுபவம் உங்களுக்கு உதவும் என்பதால் பங்குச்சந்தையில் உள் நுழைய சில டிப்ஸ்களை தருகிறேன்.

பங்குச்சந்தையில் ஜெயிக்க இது உதவும் 1.பங்குச்சந்தை என்றால் என்ன என்று தெரியாமல் பங்குச் சந்தை பக்கம் போகக்கூடாது 2. அவசரத்தேவைக்கு என்று வைத்திருக்கும் பணத்தை கண்டிப்பாக முதலீடு செய்யக்கூடாது, 3.ஒரே நேரத்தில் அதிகளவு பணத்தை முதலிடு செய்யக்கூடாது. அதிகளவு பணம் என்பது தனிநபர்க்கு எவ்வளவு பணம் ரிஸ்க் என்பதை பொறுத்தது. 4.முழுக்க முழுக்க புரோக்கர்கள் டிப்ஸ்ஐ நம்பக்கூடாது .5.கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. 6.இன்ராடே எனச்சொல்லுகின்ற தினசரி வர்த்தகத்தை டெக்னிக்ல் அனாலைஸ் தெரியாமல் அன்றே வாங்கி விற்க கூடாது.

சரி எப்படித்தான் பணத்தை பெருக்குவது ,பங்குச்சந்தையில் சம்பாதிப்பது ?1. தரமான பங்குச்சந்தை தொடர்பான புத்தகங்கள் படியுங்கள், திரு சோம வள்ளியப்பன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளிவந்துள்ள "அள்ள அள்ள பணம்" 5 தொகுதிகள் வாங்கிப் படியுங்கள். விகடன் குழுமத்தால் வெளிவரும் "நாணயம் விகடன் " படியுங்கள் . பங்குச்சந்தை ஆலோசகர்கள் திரு நாகப்பன்- புகழேந்தியின் கட்டுரைகள் கவனியுங்கள். மாதம் உங்கள் சேமிப்பாக ரூ 1000 ரூபாய்க்கு(ரிஸ்க் எடுக்கும் திறன் பொறுத்து )வாங்கி சேர்க்கலாம். அதிக லாபத்திற்கு ஆசைப்படாமல் 30% வளர்ந்தால் விற்று விட்டு நல்ல ஷேர்களை தேர்ந்தெடுக்கலாம்.

சென்செக்ஸ் குறைந்துள்ள போது உள்ளே சென்று பங்குச் சந்தை உயரும் போதும் தங்கள் பணம் உயரும் போதும் லாபத்துடன் வெளியே வரும் வித்தைகளை கற்றுக்கொள்ளுங்கள்.எம் அனுபவங்கள் உங்களுக்கு பயன் தந்ததா என கருத்துரையிடுங்கள். இந்த இடுகையின் நோக்கம் பங்குச்சந்தைக்கு வரக்கூடாது என பயமுறுத்த வேண்டும் என்பதல்ல. நன்றாக தெரிந்து,தெளிந்து ,படித்து, அறிந்து பங்குசந்தையில் பணத்தை இழக்கக்கூடாது என்ற நல்லெண்ணமே அன்றி வேறொன்றும் இல்லை. பங்குச்சந்தையும் ஒர் கடல் போலத்தான் நன்கு கற்று கொண்டு உள்ளே குதியுங்கள். பங்குச்சந்தை ஜாம்பவான் "வாரன் பெபட்" போல நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்களுடன் குரு.பழ.மாதேசு.

4 comments:

Unknown said...

உங்களைப் போலவே நானும் கையைச் சுட்டுக்கொண்டவந்தான். என்னை வைத்து புரோக்கர்கள்தான் சம்பாதித்தனரே தவிர எனக்கொன்றும் லாபம் இல்லை. நன்றி என்னைப்போல நிறைய புன்னகை மன்னர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்தபோது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

Unknown said...

உங்களைப் போலவே நானும் கையைச் சுட்டுக்கொண்டவந்தான். என்னை வைத்து புரோக்கர்கள்தான் சம்பாதித்தனரே தவிர எனக்கொன்றும் லாபம் இல்லை. நன்றி என்னைப்போல நிறைய புன்னகை மன்னர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்தபோது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்பர் வெண்புரவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி நன்பா ! பங்கு சந்தையில ஜெயிக்கலாம் நன்பா ! மார்க்கெட் நல்லா இறங்கும் அப்போது இறங்கி கலக்கலாம்.ஜெயிக்கலாம் .காத்திருப்போம் ஜெயிப்போம் .நாணயம் விகடன் தொடர்ந்து வாசிங்க .நம் எதிர்காலம் நம் கையில் .

தமிழ்க் கேள்வி பதில் said...

அன்புடையீர்,
தமிழில் கேள்விகள் கேட்டு பதில் பெறும் tamilkb.com தளத்தில் வருகை புரியுமாறு வேண்டிப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களைப் போன்றவர்கள் தரும் பதிலால் இணையத்தில் ஒரு அறிவுக் கருவூலம் ஏற்படுத்தலாம், உங்களுடைய வல்லுமையை அங்கும் பிரகாசிக்கச் செய்யலாம். தயை கூர்ந்து வாருங்கள்.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...