Saturday, June 18, 2011

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில், பவானி Arulmigu palani ahandavar thirukkovil. Bhavani




முருகர் துதிப்பாடல் ;

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு,
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் ,
செந்தமிழ்தநூல் விரித்தோனை விளங்கு,
வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக்,
கார்மயில் வாகனைச் சாந்துணைப் போதும் மறவா தவர்கொரு தாழ்வில்லையே..!

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மத்தியில் பவானி அஞ்சல் அலுவலகம் அருகிலும் ராணா திருமண மண்டபம் அருகில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகிலும் பவானி பழைய பஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முருகருக்கு என பவானி நகரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.கோவில் நுழைவாயிலில் வலப்புறமுள்ள ஆனைமுகத்தோன் கணபதியை வணங்கி விட்டு இடப்புறமுள்ள ஐயப்பனை வணங்கி திருக்கோவில் உள்ளே சென்றால் வெளிப்பிரகாரத்தில் அழகிய கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரம் சென்றால் வலப்புறம் அருள்மிகு பொன்னம்பலவாணரை தரிசித்து இடப்புறம் சிவகாமி அம்மாள் திரு உருவங்களை தரிசித்து திருக்கோவில் மூலவரான அருள்மிகு பழனி ஆண்டவரின் தரிசனம் கிட்டுகிறது.



நின்றவாறு வேலுடன் காணப்படும் முருகப்பெருமான் அழகு கம்பீரமானது. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கும் அற்புதமான ஆலயமாக பழனி ஆண்டவர் தரிசனம் இருக்கும் என்பது திண்ணம்.

திருக்கோவிலின் உள்ளே வீரமுத்துக்குமாரசாமி, பிரம்மா, இடும்பன் துர்க்கை, நவநாயகர்கள் காலபைரவர் என திருக்கோவில் சுற்றி வரும் போது தரிசனம் செய்யலாம். தமிழக அறங்காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்படும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

பெளர்ணமி, கிருத்திகை ,அமாவசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் பார்க்க வேண்டிய ஆலயமாகும்.

கூடுதுறை பவானிக்கு வரும்போது தரிசித்து விட்டு மெயில் செய்யுங்ஙள்.

நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...