Tuesday, October 15, 2013

ஸ்ரீ நவபிருந்தாவனம் என்னும் சந்தியாசிமடம் ,பள்ளி பாளையம் பாகம் 2

அண்மையில் கண்ட பள்ளிபாளையத்திலிருந்து சேஷாயி பேப்பர் மில் செல்லும் வழியில் வசந்த நகரில் அருகில் 9 தீர்த்தர்களின் 9 மூல பிருந்தாவனம்   என்கிற பாதராஜ மடம் அவர்களைப்பற்றிய ஜீவசமாதியான நிலை ஆகியவற்றை இதற்கு முந்தைய பதிவில் பார்த்தோம் .

 இங்கு

1. ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தர்
 2.ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர்
3. ஸ்ரீ நிதி தீர்த்தர்
4. ஸ்ரீ வித்யாநிதிதீர்த்தர்
5. ஸ்ரீ சுதிநிதி தீர்த்தர்
6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர்
7.ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர்
8. ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்
9. ஸ்ரீ யசோநிதி தீர்த்தர்

 ஆகியோர்களின் ஜீவசமாதியை இங்கு தரிசனம் செய்யலாம்இவர்களைப்பற்றி முந்தைய பதிவிலேயே எழுதப்பட்டுள்ளது
இவர்கள்அல்லாமல்

 2ஜீவசமாதிகள் வெளிப்புறத்தில் 

அமையப்பெற்றுள்ளது . அவர்கள் ஸ்ரீ நாகமகா
தீர்த்தர் மற்றும் ஸ்ரீ ராமதீர்த்தர் ஆகியோராவர் .

 ஸ்ரீ நாகமகாதீர்த்தர் : 


 நவபிருந்தாவனத்திற்கு வெளியில் நுணா மரத்தடியில் உள்ள
தீர்த்தர் ஸ்ரீ நாக மகா தீர்த்தர் . இவரும் கர்நாடக மாநிலம்
மங்களுருக்கு அருகில் உள்ள நேத்ராவதி நதி அருகிலுள்ள பகுதியிலிருந்து
இங்கு வந்து ஊழியம் செய்து இங்கேய பிருந்தாவனம் ஆகிவிட்டதாக வரலாறு .


பெரிய நாகம் ஒன்று ஸ்ரீ நாக மகா தீர்த்தருக்கு காவலாக உள்ளதை பலரும்
பார்த்துள்ளார்கள் . ஸ்ரீ நாகமகா தீர்த்தருக்கு 12வாரங்கள் நெய்
தீபமிட்டு பூஜித்து வந்தால் விரைவில் நம்கோரிக்கை நிறைவேறும் . நாகதோஷநிவர்த்தியாகிறது . இவரின் ஜீவ சமாதி 10வதாக இங்கே தரிசிக்கலாம்

ஸ்ரீ ராமதீர்த்தர் : 


நவபிருந்தாவனத்தில் மதில் சுவர்க்கு வெளியே வாயிற்கதவருகே
அமைந்துள்ள பிருந்தாவனத்தை அலங்கரிப்பவர் ஸ்ரீ ராமதீர்த்தர் ஆவார் .
கருங்கல்பாளையம் பாறை விநாயகர் கோவில் தெருவில் வசித்து சித்த வைத்தியம்செய்தவர் , ஏழைகளுக்காக இலவச மருத்துவம் செய்தவர் .

 சமஸ்கிருத புலமையும் ஆன்மீக அறிவும் கொண்டவர் 1990 ல் ஆசிரமம் மேற்கொண்டு 9 மத்வ நவமியன்று நவபிருந்தாவனத்தில் 11 வது பிருந்தாவனஷ்தராகி விட்டார்.

 திறப்பு நேரம்:


 காலை 7 .00மணி முதல் 12 வரையும்
திறந்திருக்கும். வியாழக்கிழமை விஷேச பூஜைகள் மதியம்
வரை நடைபெறுகிறது.

 கும்பாபிஷேகம் 5.7.1989 ல் மடாதிபதி ஸ்ரீ விக்ஞான நிதி தீர்த்த
சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது .

 திருவாளர் நவ பிருந்தாவனம்  பழனிச்சாமி ;

9750265865 


பல ஆண்டுகாலமாக பலருக்கு தெரியாமல் இருந்த இந்த
அரிய பிருந்தாவனத்தை 25 வருடமாக பல ஆன்மீகப்பணிகள் செய்து அனைத்து மக்களுக்கும் இந்த நவ பிருந்தாவனத்தின் பெருமைகளை பலருக்கும் நோட்டீஷ்கள் துண்டு பிரசுரங்களால் பல மக்களை இந்த பிருந்தாவனத்தின் பெருமைகளை கொண்டுசென்றவர் .

 இந்த அரிய பதிவை உருவாக்க பல குறிப்புகள் அளித்த அவர்க்கு
நம் மனமுவந்த பாராட்டுகள். மேலும் அழகிய பிருந்தாவனத்தை பற்றிய
தகவல்களுக்கு மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .



முடிவுரை : 


 அழகிய அமையான அரிய சந்நியாசி மடம் என்னும் நவபிருந்தாவனத்தை
பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் , பல பக்திமலர்களில் பல கட்டுரைகள் இந்த பிருந்தாவனத்தை ஆன்மீகப் புகழ் சேர்க்கின்றன . இங்கு வருகிற பக்தர்
தியானம் செய்ய ஏற்ற அமைதிச்சூழல் நிலவுகிறது .

பல பக்தர்கள் தீர்த்தர்கள்முன் அமர்ந்து தியானிக்கும் போது புதிய அனுபவங்கள் பலன் பெற்றதாக வரலாறு.ஒரு முறை சென்றால் மறுபடியும் செல்லத்தூண்டுகிற அற்புத ஜீவசமாதியாகும் ,பசு நெய் தீபங்களுடன் செல்லுங்கள் . இங்கு பிருந்தாவனத்தில்  விளக்கேற்றி வழிபடுங்கள் .

 மன அமைதியும் மகான்கள் ,ஜீவன் முக்தர்கள்,
சித்தர்களான இந்த அழகிய பிருந்தாவனத்தை அலங்கரிக்கின்ற தீர்த்தர்களின்
அருள் பெறுங்கள். உங்கள் அனுபவங்களை பகிருங்கள் . மற்றபடி எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க

 ஸ்ரீ நவபிருந்தாவன தீர்த்தங்களை வேண்டி நிற்கிறேன். 


நன்றி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த முறை அங்கு செல்ல வேண்டும்... சிறப்புகளுக்கு நன்றி...

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...