Friday, January 18, 2013

கொடநாடு காட்சி முனையின் அழகு

நீலகிரி மாவட்டத்தில் அழகிய இடங்களில் கொடநாடு காட்சி முனையும் ஒன்றாகும்.சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மலைச்சரிவை கண்டு களித்துக் கொண்டேசென்றால் கோத்தகிரியில் இருந்து 19 கி.மீட்டர் தொலைவில் உள்ள கொடநாடு
காட்சிமுனையை அடையலாம் .

 கொடநாடு வியூ பாயிண்டில் ஹோட்டல் எதுவும்
கிடையாது .சிற்றுண்டி கடை ஒன்றும் மேலே மகளீர் சுய உதவிக் குழுவின்
பல்பொருள் அங்காடி ஒன்றும் உள்ளது. இங்கே நீலகிரி தைலம் டீத்தூள்கள்
கிடைக்கின்றது.

 கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்த்தால் வலப்புறம்
தூரத்தில் பவானி சாகர் அணைக்கட்டு தெரிகிறது. காட்சி முனையின் அருகே
வலப்புறமாக தெரிவது ரங்கசாமி குன்று ஆகும் .நடுவிரல்,
மோதிரவிரல்,ஆட்காட்டி விரல் போல ரங்கசாமி பில்லர் தெரிகிறது.

40வருடங்களுக்கு மேக மூட்டத்தின் காரணமாக ரங்கசாமி குன்றில் மோதி விமான விபத்து ஒன்று நடந்ததாக இங்குள்ள நன்பர் கூறினார் , ரங்கசாமி குன்றின் கீழே அழகான நீண்ட அருவி ஓடுகிறது . இடப்புறமாக மாயாறு U வடிவில்ஓடுகிறது.

அருகே தெங்குமரஹடா என்னும் கிராமம் அழகாக தெரிகிறது. கொடநாடு
காட்சி முனையின் கீழ் இறங்கி நடந்தால் இன்னோரு வியு பாய்ண்ட் வருகிறது . இங்கே இருந்து பார்த்தால் தெங்குமரஹடா கிராமம் சற்று அருகே தெரிகிறது.


ஊட்டியில் இருந்து 50கி.மீட்டருக்குள்ளே வரும் கொடநாடு காட்சி முனை
பார்க்கவேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும் . கொடநாடு காட்சிமுனை ஈரோடு
மாவட்டத்தின் பல இடங்களை மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் காணலாம் .
வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...