Monday, January 20, 2014

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி

         sribapanasaswamy temple history,bapanasam,

                   Ampasamuthiram thirunelveli



சுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,
ரியம்ப வாய்ந்ததுபாவநாசப்பெயரி லிங்கம்,
 வியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,
கயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்


 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .



தன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .

 அம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண  தூரத்தில் அமைந்துள்ளது .

 திருக்கோவில் அமைப்பு :


 பொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது . 


பாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=

பாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி
.பரஞ்சோதிலிங்கர் ,ஆகியனவாகும்

 ஸ்தல சிறப்புகள் : 


மனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .

ஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தலவிருட்ஷம் : 

முக்களா விருட்ஷம்

 தீர்த்தங்கள் : 


தாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்தம்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .

 ஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :


 பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .


திருக்கோவில் நடைதிறப்பு =

 காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430
முதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்
இரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .
பங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அகத்தியர்திருமணக்காட்சி பெறுதல் :


சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான
இமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.

உடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது  சிவன்

''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''


எனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .


நமச்சிவாயக்கவிராயர் : 


இவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை
பாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .

 முடிவுரை :

சிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .
பாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண
கோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை .

ஓம் சிவ சிவ ஓம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான தலம்... வருடா வருடம் செல்வதுண்டு... விளக்கங்களுக்கு நன்றி...

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...