Friday, February 15, 2013

ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் வெண்ணெய்மலை,கரூர்

அமரர் இடம் தீர அமர்ந்த
 குமரனடி நெஞ்சே குறி                                        முருகர் துதி

 கரூர் வெண்ணெய்மலையில் முருகர் ஸ்ரீபாலசுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார் . கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத திருக்கோவிலாகும் . அண்மையில் வெண்ணைமலை செல்லும் அருமையானதோர் வாய்ப்புகிட்டியது.

 சுமார் 60படிக்கட்டுகள் ஏறினாலே ஸ்ரீபாலசுப்பிரமணியரைதரிசித்து விடலாம் . பாலயோகி பகவன் என்பர் இங்கு தவமிருந்த போது முருகர் காட்சி கொடுத்து இங்கே எம் அருட்சக்தி நிறைந்துள்ளது .

 இதை மக்களுக்குஅறிவிக்க கூற பகவன் அப்போது கரூரை ஆண்ட அரசரிடம் விபரம் கூறதிருக்கோவில் அழகே அமைக்கப்பட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் பிரதிஷ்டைசெய்யப்பட்டதாக வரலாறு.

திருக்கோவில் 1000ஆண்டுகள் பழமையாளதாகும் .
ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் 18 சித்தர்களில் ஒருவரான கருவூரார் சித்தர்க்கு தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோவில் மற்றும்


கருவூரில் அமைந்துள்ள பசுபதீஷ்வரர் திருக்கோவில் மற்றும் வெண்ணெய்மலை முருகர் திருக்கோவில் ஆகியவற்றில் தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பாகும் .


 காமதேனுவால் அமைக்கப்பட்ட
தேனுதீர்த்தம் இங்கு குளிப்பவர்களுக்கு குழந்தை வரம் கிட்டுமென்பது
ஐதீகம். இங்கு நடைபெறும் தைப்பூசத் தேர் திருவிழா மிக விஷேசமான
ஒன்றாகும் .

திருக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4மணி
முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. கருவூரார் சித்தரை தரிசிக்க
விரும்பும் சித்தர் தேடல் விரும்பும் நண்பர்கள் அவசியம் செல்ல வேண்டிய
திருக்கோவில் .

கருவூராரின் பாதம் பட்ட அற்புத இடம் . ஸ்ரீமுருகப்பெருமான் குன்று தோறும் குடியிருந்து அருள்பாலிக்க வெண்ணெய்மலையில் ஸ்ரீ பாலசுப்பிரமணியராக அருள் செய்கிறார் . வந்து வணங்கிவிட்டு செல்லுங்கள் .நலங்கள் நாள் தேறும் பெறுங்கள் .

ஓம் முருகா சரணம் முருகா . நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...